இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங் களில்
41 பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வரு கின்றன. மேற்கண்ட நிறுவனங்
களில் 82 ஆயிரம் தொழிலாளர் களும், 40 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும்
பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனமாக மாற்றி தனியார் மயமாக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக கூறப் படுகிறது.
இந்த முடிவை அமல்படுத்து வதற்கான வரைவு
திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, மத்திய அமைச் சரவை ஒப்புதல் விரைவில் வர
உள்ளது. இதனை கண்டித்து பல்வேறு பாதுகாப்பு துறை நிறுவனங்களை சேர்ந்த
தொழிற் சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று மாலை ஆவடியில் உள்ள
படைத்துறை உடைத்தொழிற்சாலை, டேங்க் பேக்டரி, என்ஜின் பேக்டரி ஆகிய
தொழிற்சாலைகளில் இருந்து ஊழியர்கள் குடும்பத் துடன் சுமார் 3 ஆயிரம் பேர்
ஊர்வலமாக புறப்பட்டு, ஆவடி அஜய் மைதானத்தில் குவிந் தனர். பின்னர் அங்கு
தொழி லாளர்கள் மத்திய அரசின் போக்கை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
அதன் பின்னர், நடைபெற்ற கண்டன கூட்டத்தில்
தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் உள்பட தொழிற்சங்க நிர்வா கிகள் பலர்
கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment