ஜம்மு--காஷ்மீர் விவகாரத்தில் அய்.நா.
பாதுகாப்பு கவுன்சில் தலையிடக் கூடாது என்று ரஷ்யா கூறியுள்ளது. அந்த விவ
காரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி
தீர்வுகாண வேண்டும் என்றும் ரசியா வலியுறுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட் டிருந்த
சிறப்புத் தகுதியை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை இரு யூனியன்
பிரதேசங்களாகப் பிரித்தும் மத்திய அரசு அண்மையில் நடவ டிக்கை மேற்கொண்டது.
இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள
பாகிஸ்தான், இந்த விவகாரத்தில் சர்வதேச நாடு களின் ஆதரவைக் கோரியுள்ளது.
இந்த விவகாரத்தை அய்.நா.வில் முறையிடப் போவதாகவும் பாகிஸ் தான்
தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஜம்மு--காஷ்மீருக்கு
அளிக்கப்பட்டு வந்த சிறப்புத் தகுதியை ரத்து செய்தது தொடர்பாக விவாதிக்க
வேண்டும் என்று அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் சீனா கோரிக்கை விடுத்தது.
அதன்படி, நியூயார்க் நகரில் உள்ள அய்.நா.
பாதுகாப்பு கவுன்சிலில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரும், போலந்து நாட்டின் பிரதிநிதியுமான
ஜோன்னா ரோனெக்கா தலைமையில் மூடப்பட்ட அறைக்குள் இந்தக் கூட் டம்
நடைபெற்றது.
இதில், பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர
உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் பிரிட்டன், பிரான்சு, ரசியா, அமெரிக்கா,
சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும், 10 தற்காலிக உறுப்பு நாடுகளின்
பிரதிநிதிகளும் பங்கேற்ற னர். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் உறுப்பினர்கள்
பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையில்
அய்.நா. பாதுகாப்பு கவுன்சில் தலையிடக் கூடாது என்று நிரந்தர
உறுப்பினர்களில் ஒன்றான ரசியாவின் பிரதிநிதி டிமிட்ரி பாலி யான்ஸ்கி
வலியுறுத்தினார். மேலும், இந்த விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும்
பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டத்தில் பங்கேற்ற சீனப் பிரதிநிதி
ஜாங் ஜுன் பேசும்போது, இந்தி யாவும், பாகிஸ்தானும் அமைதிப் பேச்சுவார்த்தை
மூலம் பிரச்சினைக் குத் தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.
ஜம்மு-காஷ்மீரில் ஏற்கெ னவே பதற்றமான சூழல் நிலவுவதால், அங்கு நிலைமையை
மோசமாக்கும் வகையிலான செயல்களை இரு நாடுகளும் தவிர்க்க வேண்டும் என்று
உறுப்பு நாடுகள் கவலை தெரிவித் ததாகவும் அவர் கூறினார் என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment