Sunday, August 18, 2019

பாகிஸ்தானுக்கு ரூ.3,100 கோடி நிதியுதவி அமெரிக்கா ரத்து

பாகிஸ் தானுக்கு அளிக்கப்பட்டு வரும் நிதியுதவியில் 44 கோடி டாலரை (சுமார் ரூ.3,100 கோடி) ரத்து செய்ய அமெ ரிக்கா முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி யுள்ளது.
இதையடுத்து, பாகிஸ்தா னுக்கு அமெரிக்கா அளிக்கும் நிதியுதவி 441 கோடி டால ராக (சுமார் ரூ.29,169 கோடி) குறைந்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானி லிருந்து வெளியாகும் "எக்ஸ் பிரஸ் டிரிபியூன்' நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2010-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட "பாகிஸ் தான் கூட்டுறவு மேம்பாட்டு ஒப்பந்தத்தின்' அடிப்படை யில், அந்த நாட்டுக்கு அமெ ரிக்கா ஆண்டுதோறும் நிதி யுதவி அளித்து வருகிறது.
பாகிஸ்தானுக்கு 5 ஆண் டுகளில் 750 கோடி டாலர் (சுமார் ரூ.53,356 கோடி) நிதி யுதவி அளிப்பதற்காக அமெ ரிக்க நாடாளுமன்றத்தில் 2009-ஆம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தைச் செயல்படுத்துவதற்காக அந்த ஒப்பந்தம் மேற்கொள் ளப்பட்டது.
இந்த நிலையில், தற்போது அந்த ஒப்பந்தத்தின்படி 450 கோடி டாலர் நிதியுதவி வழங்கப்பட வேண்டியுள்ளது.
எனினும், அந்த நிதியுதவி யில் 44 கோடி டாலரை ரத்து செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அண்மையில் அமெரிக்க சுற் றுப் பயணம் மேற் கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம் ரான் கானுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரியப் படுத்தியிருந்தார்.
இதையடுத்து, பாகிஸ்தா னுக்கான அமெரிக்க நிதியு தவி 441 கோடி டாலராகக் குறைந்துள்ளது.
ஏற்கெனவே, பயங்கரவா தத்தைத் தடுக்கத் தவறியதாகக் கூறி பாகிஸ்தானுக்கு அளிக் கப்பட்டு வந்த 30 கோடி டாலரை (சுமார் ரூ.2,134 கோடி) ராணுவ நிதியுதவியை அமெரிக்கா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரத்து செய்தது.
மேலும், பாகிஸ்தானுக் கான 100 கோடி டாலர் (சுமார் ரூ.7,114 கோடி) மதிப் பிலான நிதியுதவியையையும் அமெரிக்கா கடந்த ஜனவரி மாதம் ரத்து செய்தது.
இந்த நிலையில், பாகிஸ் தான் கூட்டுறவு மேம்பாட்டு ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப் பட்டு வரும் நிதியுதவியும் 441 கோடி டாலராகக் குறைக்கப் பட்டுள்ளது என்று "எக்ஸ் பிரஸ் டிரிபியூன்' நாளிதழ் தெரிவித்துள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...