நாகையில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்த
போது விஷவாயு தாக்கி 2 ஒப்பந்த தொழிலாளர்கள் இறந்தனர். மேலும் ஒருவர்
சிகிச்சை பெற்று வருகிறார்.
நாகை மாவட்டம், நாகை புதிய வீட்டுவசதி
வாரிய குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக
நகராட்சிக்கு தகவல் வந்தது. நேற்று முன்தினம் 2 பணியாளர்கள் சுத்தம்
செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நீண்ட நேரமானதால் சுத்தம் செய்யும்
பணியை நிறுத்தி விட்டு சென்றனர். இதை தொடர்ந்து நேற்று பாதாள சாக்கடையை
சுத்தம் செய்ய 4 பேர் வந்தனர். இதில் நாகூரை சேர்ந்த மாதவன்(38),
சக்திவேல்(27), வெளிப்பாளையத்தை சேர்ந்த சிறீதர்(40) ஆகிய 3 பேரும் ஒருவர்
பின் ஒருவராக குழியில் இறங்கி சுத்தம் செய்தனர். அப்போது, திடீரென 3
பேருக்கும் மயக்கம் ஏற்பட்டது. இதனால், ஒருவர் பின் ஒருவராக மேலே
ஏறத்தொடங்கினர்.
இவர்களில் சிறீதர் மேலே வந்து விட்டார்.
இதனை பார்த்து அருகில் இருந்த பொதுமக்கள் காப்பாற்ற முயற்சி செய்தனர்.
ஆனால் அவர்களால் வெளியே வர முடியாமல் உள்ளேயே மயங்கி விழுந்தனர்.
இதுகுறித்து நாகை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் வந்து சக்திவேல், மாதவன் ஆகியோரை மீட்டனர். ஆனால்
அவர்கள் விஷ வாயு தாக்கி இறந்து தெரியவந்தது.
தரை சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை
மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வெளிப்பாளையம் காவல்துறையினர்
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment