Saturday, August 17, 2019

தொலைப்பேசிக்காக 2 மணி நேரம் வரிசையில் நிற்கும் காஷ்மீரிகள்!


சட்டப்பிரிவு 370-இன் கீழ், ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு உரிமைகளை ரத்து செய்த மத்திய பா.ஜ.க. அரசு, மாநில அந்தஸ்தையும் பறித்து, இரண்டு யூனியன் பிரதேசங் களாக மாற்றியுள்ளது.
இதற்கு எதிராக போராட்டங்கள் எழுந்து விடக்கூடாது என்பதற்காக, ஒரு வாரத்திற்கு முன்பே சுமார் 40 ஆயிரம் ராணுவ வீரர்களை காஷ்மீரில் குவித்து, மாநிலத்தையே திறந்த வெளி சிறைச்சாலை யாக மாற்றியது.
பள்ளி, கல்லூரிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களை மூட உத்தரவிட்டதுடன், தொலைத் தொடர்பு வசதி களையும் முற்றிலுமாக துண்டித்தது. திங்களன்று பக்ரீத் பண்டிகையைக் கூட, காஷ்மீர் மக்கள் கொண் டாட முடியவில்லை .
இந் நிலையில்தான், வெளியூரில் இருக்கும் உற வினர்களை தொலைப்பேசியில் தொடர்பு கொள் வதற்கு, காஷ்மீர் மக்கள் நீண்ட வரிசையில் காத் திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தனிப்பட்ட தொலைபேசி இணைப்புகளை ரத்து செய் துள்ள மோடி அரசு, சிறீநக ரில் உள்ள துணை ஆணை யர் அலுவலகத்தில் மட்டும் அவசரத் தொலைபேசி வச தியை ஏற்படுத்தித் தந்துள் ளது.
இந்த தொலைபேசியை பயன்படுத்தி, வெளியூர் களில் உள்ள குடும்பத்தின் ருடன் ஒருவர் பேச வேண்டு மென்றால் அவர் குறைந்த பட்சம் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் அவலநிலை உள்ளது. அப்படி 2 மணி நேரம் காத்தி ருந்தாலும், 2 நிமிடத்தில் உரையாடலை முடித்துக் கொள்ள வேண்டிய சூழலும் இருக்கிறது.  இதனால் தங்கள் உரையாடலை கண் ணீருடன் தொடங்கி கண்ணீருடனேயே காஷ்மீரி கள் முடித்துக் கொள்வதாக ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...