பள்ளி மாணவ, மாணவிகள் 80 சதவீதத்திற்கு
மேல் வருகைப்பதிவு இருந்தால் அவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண்கள் வழங்
கலாம் என்று முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குநர்
உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை
இயக்குனர் உஷாராணி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி
யுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாணவர்கள் வருகை பதிவிற்கு அதிகபட்சமாக 2
மதிப்பெண்கள் வழங்க வேண்டும். 80 சதவீதத்திற்கு மேல் வருகை புரிந்த மாணவ,
மாணவிகளுக்கு 2 மதிப்பெண்களும், 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வருகை தந்த
மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண்ணும் வழங்க வேண்டும் அதேபோல் மாணவர்கள்
படித்தவற்றை புரிந்து கொள்ளும் திறனை அறிவதற்காக உள்நிலை தேர்வுகள்
நடத்தப்பட்டு 4 மதிப்பெண்கள் அளிக்க வேண்டும்.
இந்த தேர்விற்கு அந்த பாடத்தினை
கற்பிக்கும் ஆசிரியர்கள் வினாத்தாள் வடிவமைத்து தேர்வு நடத்த வேண்டும்.
பாடங்களுக்கு ஏற்ப ஒப்படைவு, செயல் திட்டம், அல்லது களப்பயன் அறிக்கை
இவற்றில் ஏதாவது ஒன்றினை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்து ஒரு
வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சீராக ஒதுக்கீடு செய்து நடத்த
வேண்டும் என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment