Monday, August 12, 2019

இந்தியாவில் போலி தயாரிப்புகளால் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு

தரம் குறைந்த ஜவுளிகள்,  மருந்துகள், உண வுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் போலி யாக  தயாரிக்கப்பட்டு சந்தை யில் விற்பனைக்கு வருகிறது.
இந்த போலி பொருட்கள்  உற்பத்தியினால் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அர சுக்கு வருவாய் இழப்பு  ஏற் படுகிறது.  `ஆதென்டிகேஷன் சொலூயூஷன் புரவைடர்ஸ் அசோசியேஷன்’  அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கை: தற்போதைய  சூழலில், போலி உற்பத்தி பொருட்களால் இந் தியாவில் ஆண்டுக்கு ரூ.1.05 லட்சம்  வருவாய் இழப்பு ஏற் படுகிறது. முறையான ஆய்வு, விழிப்புணர்வு, கண்காணிப்பு,  அதிரடி சோதனை ஆகிய வற்றை அமல்படுத்துவதன் மூலம் இதனை 50 சதவீதமாக  குறைக்கலாம். இதனால் ஆண்டுக்கு ரூ. 50,000 கோடி சேமிக்கப்படும்.பல்வேறு  துறைகளில் போலி பொருட் கள் தயாரிப்பு இருந்தாலும், மருந்து உற்பத்தி  துறையில் அதிகளவு காணப்படுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும்  மேம்பாட்டிற்கான அமைப்பு அண்மையில் வெளி யிட்ட அறிக்கையில், `போலி பொருள்  உற்பத்தி மற்றும் வர்த் தகம் உலகளவில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.
தற்போது உலக வர்த்த கத்தில் இது 3. சதவீதமாக உள்ளது. இதனால் தயாரிப்பு  நிறுவனங்கள், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நவீன  உலகில் இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள்  பயன் படுத்தப்படுகின்றன. போலி பொருட்கள் எங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன,  அவை எப்போது இடம் மாற்றி வைக்கப்படுகின்றன, அதன் தற்போதைய நிலை என்ன, எந்த  இடத்தில் வினியோகிக் கப்படுகின்றன என்பது உள் ளிட்ட பல்வேறு நடவடிக் கைகளை  தொடர்ந்து கண் காணிப்பதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.இந்த முறையை  பின்பற்றி நைஜீரியா அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் முக்கிய போலி மருந்துகள்  தயாரிப்பு மற்றும் வினியோகத்தை 20 சதவீதத் தில் இருந்து 3.5 சதவீதமாக  குறைத்துள்ளது. கண்காணிப்பு, ஆய்வுகளில் புதிய  தொழில் நுட்பங்களை அமல்படுத்தி போலி பொருட்களின் சட்ட விரோத வினியோகத்தை  நிறுத்த வேண்டும் என்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...