பாகிஸ்தானின் லாகூர் நகரிலுள்ள மகாராஜா
ரஞ்சித் சிங் கின் சிலையை சனிக்கிழமை அடை யாளம் தெரியாத இருவர் உடைத்து
சேதப்படுத்தியது பரபரப்பை ஏற் படுத்தியது. காஷ்மீரின் சிறப்பு அதி காரத்தை
இந்தியா ரத்து செய்ததன் எதிரொலியாக இந்த சம்பவம் நடை பெற்றதாக
கூறப்படுகிறது. பஞ்சாப் மாகாணத்தை 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் 40
ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்தவர் மகாராஜா ரஞ்சித் சிங்.
இதுகுறித்து லாகூர் நகர ஆணைய செய்தித்
தொடர்பாளர் தனியா குரேசி கூறியதாவது: மகாராஜா ரஞ்சித் சிங்கின் 180-ஆவது
நினைவு தினத்தை முன்னிட்டு வெண்கலத்தால் செய்யப்பட்ட 9 ஆடி உயரம் கொண்ட
அவரது சிலை சென்ற ஜூன் மாதத்தில் லாகூர் கோட்டையில் நிறுவப்பட்டது. சீக்கிய
பேரரசின் முதல் மகாராஜாவான அவர் கடந்த 1839-ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
அவரது சிலையை இரண்டு நபர்கள் சனிக்கிழமை
உடைத்துள் ளனர். இது, முற்றிலும் எதிபாராத மோசமான சம்பவம். இதுபோன்ற
சம்பவங்கள் எதிர்காலத்தில் நடை பெறாமல் இருப்பதை உறுதி செய்ய லாகூர் கோட்டை
முழுவதும் பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடு பட்ட இருவரை
காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு எதிராக மதநிந்தனை
சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட சிலை
சரிசெய்யப் பட்டு மீண்டும் நிறுவும் பணி அடுத்த வாரத்திலிருந்து தொடங்கும்.
இந்த பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட பின்பே அந்த சிலையை பொதுமக்கள்
பார்வையிட மீண்டும் அனுமதிக்கப் படும் என்றார் அவர்.
மகாராஜா ரஞ்சித் சிங்கின் சிலையை உடைத்த
இருவரும் மவு லானா காதீம் ரிஸ்வியின் "தெஹ்ரீக்-லப்பாய்க் பாகிஸ்தான்'
அமைப்பை சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப் படுகிறது. ஜம்மு-காஷ்மீரின்
சிறப்புத் தகுதியை இந்தியா ரத்து செய்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்து
அவர்கள் இருவரும் இந்த செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது
என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment