கல்வி உத வித் தொகைக்கான தேசிய திறனறிதல் தேர்வு தேதியை மத்திய அரசு அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும், இந்தத் தேர்வு எழுதி
தகுதி பெறும் எட்டாம் வகுப்பு மாண வர்கள் மேல்நிலை கல்வியில் பிளஸ் 2
வரையிலும் அதன் பின், பட்டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு வரையி
லும் கல்வி உதவித் தொகை பெறலாம்.
இதை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சிலான என்சிஇஆர்டி வழங்குகிறது.
இந்தக் கல்வி உதவித் தொகை ஒவ்வொரு மாநில மாணவர்களுக்கும், தகுதித் தேர்வின் அடிப்படையில் வழங்கப் படுகிறது.
நிகழ் கல்வியாண்டில் எட்டாம் வகுப்புப்
படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திற னறிதல் தேர்வுக்கான தேதியை என்சிஇஆர்டி
அறிவித்துள் ளது. அதன்படி, மாநில அள விலான முதல் கட்ட தகுதித் தேர்வு
நவம்பர் 3-ஆம் தேதி நடத்தப்படுகிறது.
இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், தேசிய
அள வில் நடத்தப்படும் இரண்டாம் கட்ட தேர்வை எழுத வேண் டும். இந்தத் தேர்வு,
அனைத்து மாநிலங்களிலும், அடுத்த ஆண்டு, மே,10-இல் நடத்தப் படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment