அடல் பிகாரி வாஜ்பாய் லாகூர் பயணத்தின் போது (19 February 1999)மொத்தம் 773 பொருட்கள் இறக்குமதி செய்ய ஒப்பந்தம், எந்த ஒரு சூழ்நிலையிலும் குறிப்பிடப்பட்ட ஒப்பந்தப் பொருட்களை பாகிஸ்தான் நிறுத்தக் கூடாது(இயற்கை சீற்றம் மற்றும் உள்நாட்டுப் புரட்சி தவிர்த்து) இந்த ஒப்பந்தத்தில் எந்த இடத்திலும் இந்தியா பாகிஸ்தான் போரின் போது அல்லது வேறு செயற்கைக் காரணங்கள் குறித்து வரையறை அல்ல, அதாவது இந்தியா பாகிஸ்தான் போரே நடந்தாலும் அனுப்பு வதை நிறுத்த வேண்டாம், என்பது தான் இதன் பொருள்.
11. உருளைக்கிழங்கு, 12. தக்காளி, 13. வெங்காயம், 14. காய்கறிகள், 15. மசாலாப் பொருட்கள் (மிளகாய்த்தூள், சீரகம்), 16. மிளகாய், 17. கொழுப்பு நீக்கப்பட்ட சமையல் எண்ணெய், 53. பதப்படுத்தப்படாத கடலை எண்ணெய் இவை தினசரி இறக்குமதி பொருள்கள் - (எண்கள் பொருள்களின் பட்டியல் வருகை) மொத்த பொருள்கள் 773 என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய ஒப்பந்தங்கள் இந்தியா- பாகிஸ்தான் நாடுகளிடையே இருந்து வருகின்றன. இந்த வர்த்தக உறவைப் பாதிக்கச் செய்யும் வேலை வகையில் இந்தி யாவில் உள்ள பிஜேபி மற்றும் அதன் உடன் பிறப்பு களான சங்பரிவார்க் கும்பல் நடந்து கொள்வது சரியா? குட்டி குரைத்து நாய் தலையில் வைத்தது என்று ஒரு சொலவடை உண்டு. இப்பொழுது காவி இந்துத்துவா கும்பல் இதனைத் தான் செய்து கொண்டிருக்கிறது.
பாகிஸ்தான் பாடகருக்கு எதிர்ப்பு - பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கலந்து கொண்ட நூல் வெளியீட்டு விழாவில், முகத்தில் மையை ஊற்றுவது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிருவாகிகள், இந்தியக் கிரிக்கெட் வாரிய நிருவாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, அத்துமீறி உள்ளே திடீரென்று புகுந்து, வன்முறைகளில் ஈடுபடுவது என்பவை எல்லாம் இன்னொரு நாட்டின் உறவைப் பாதிக்கச் செய் யும் மோசமான - அருவருக்கத்தக்க காட்டு விலங் காண்டித்தனமான செயல்கள் அல்லவா?
இந்தக் காவிகள் செய்யும் செயல்கள் மூலம் விளை வும் எதிர் விளைவும் பற்றி சிறிதேனும் சிந்தித்த துண்டா? இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்குமிடையே வேறு சில பிரச்சினைகள் இருக்கின்றன. நீண்ட காலமாக பேச்சு வார்த்தையில் இருக்கக் கூடிய பிரச்சினைகள் அவை.
வெளி நாடுகளிலும் தன் பக்கம் ஆதரவை விரிவாக்கிக் கொண்டிருக்கும் வேலையில் பாகிஸ்தான் இறங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இப்படி சில்லுண்டித்தனமாக பாகிஸ்தானியர்களை இங்குள்ள இந்து வெறிப் பாசிசக் கூட்டம் அவமானப்படுத்து மானால் - அநாகரிகமாக நடத்துமேயானால் அதன் பார - தூர விளைவுகள் என்ன? பாகிஸ்தான் பக்கம் அனுதாப அலைகளை வீசச் செய்யாதா? இந்தியாவில் நடக்கும் அநாகரிக செயல்கள் வெளிநாடுகளில் இந்தியாவின் மரியாதையை மங்க வைக்காதா?
இதனால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் மீதும் மாசு வந்து படியாதா? மனித உரிமைகள் குறித்தும், ஜனநாயகத் தன்மைகள் குறித்தும் நேச உறவுகள் பற்றியும் வாய்க்கிழிய (அய்.நா. மன்றத்தில்கூட) இந்தி யாவைச் சேர்ந்த ஆட்சித் தலைவர்கள், அதிகாரிகள் வெளிநாடுகளில் பேசும் பொழுது, அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளுக்குள் சிரிக்க மாட்டார்களா - ஏன் சில நாடுகள் வெளிப்படையாகக் கேட்கவும் செய்யுமே!
குஜராத்தில் சிறுபான்மை முசுலிம்களுக்கு எதிராக ஏவி விடப்பட்ட அரச பயங்கரவாதம், குஜராத் தேங்ஸ் மாவட்டத்தில் கிறித்தவர்களுக்கு எதிராக நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது ஏவி விடப்பட்ட வன்முறைகள் இவற்றை மனதிற் கொண்டு அன்றைய இந்தியப் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பேயி கூறியது நினைவில் இருக்கிறதா? எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாடுகளுக்குப் போவேன்? - என்று மனம் புழுங்கிப் பேசவில்லையா?
இன்றைக்கு அதே குஜராத் மோடி இந்தியாவின் பிரதமராக ஆகி விட்ட நிலையில், பெருமாள் பெத்த பெருமாள் ஆன கதையாக, மதச் சகிப்பின்மை, மதங் கொண்ட யானையாக திமிறிக் கொண்டு, கட்டுகளை அவிழ்த்துத் தள்ளி, நாட்டையே சின்னாபின்னம் ஆக்கிக் கொண்டிருக்கிறதா இல்லையா?
இன்றைக்கு அதே குஜராத் மோடி இந்தியாவின் பிரதமராக ஆகி விட்ட நிலையில், பெருமாள் பெத்த பெருமாள் ஆன கதையாக, மதச் சகிப்பின்மை, மதங் கொண்ட யானையாக திமிறிக் கொண்டு, கட்டுகளை அவிழ்த்துத் தள்ளி, நாட்டையே சின்னாபின்னம் ஆக்கிக் கொண்டிருக்கிறதா இல்லையா?
நாட்டு மக்கள் இவற்றை அனுமதிக்கிறார்களா? நிச்சயம் அனுமதியார்? நீறுபூத்த நெருப்பாக உள்ளுக் குள் கனன்று கொண்டு தானிருக்கும் சரியான சந்தர்ப் பத்தை வழிமேல் விழி வைத்துப் பார்த்துக் காத்துக் கொண்டு தானிருக்கும் என்பது - உலக வரலாறு பல காலக் கட்டங்களில் நிரூபித்துக் காட்டியுள்ளது உண்மையே!
இந்தியத் துணைக் கண்டத்தில் இவ்வளவு அவலங் கள், ஆபாசங்கள், அநாகரிகங்கள், ஆவேசத்துடன் ஆர்ப்பரித்து விண்ணுக்கும் மண்ணுக்கும் தலை விரி கோலமாக நிர்வாணக் கூத்தாக அன்றாடம் நடந்து கொண்டிருந்தும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பச்சையாகவே சொல்லுகிறார். ஏதோ அங் கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் சிறு சிறு பிரச்சினைகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்று அலட்சியமாக விஜயதசமி நாள் உரையில் சொல்லுகிறார் என்றால் இதன் பொருள் என்ன?
இதுவரை நடந்த அசிங்கங்கள், அநாகரிகங்கள் வன்முறைகள் எல்லாம் மிகச் சிறியவை என்று ஆர். எஸ்.எஸ். பரிவாரங்களுக்கு அடையாளம் காட்டு கிறாரா? இதைவிட பெரியவை நடந்தாக வேண்டும் என்று ஜாடை காட்டுகிறாரா?
இதைப்பற்றி எல்லாம் இந்த நாட்டில் இருக்கும் ஏடுகள், ஊடகங்கள் பேனா முனையை அசைக்காத காரணம் பெரும்பாலும் இவை எல்லாம் உயர் ஜாதி ஆதிக்கத்தின் நக இடுக்குகளிலும், அவற்றின் தொங்கு சதைகளான விபீடணக் கூட்டத்தின் கைகளிலும் முடங்கிக் கிடப்பதுதான்
நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது - மாற்றம் என்ற மயக்க மருந்துப் போதைக்கு அடிமையான திரு வாளர் பொது மக்கள்தான் தங்கள் சிந்தனையில் மறு வாசிப்பைப் புகுத்த வேண்டும்; இல்லையென்றால் பெரும் விலையை கொடுக்க வேண்டும் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!
No comments:
Post a Comment