Saturday, October 24, 2015

இஸ்ரேலில் ஓர் மனித உறவுப் பாலம்!

இஸ்ரேலில் ஓர் மனித உறவுப் பாலம்!

நேற்று (22.10.2015) மாலை மலர் ஏட்டில் வந்துள்ள ஒரு செய்தியும் படமும் இதோ:
அன்பும், உணவும் உலகை வெல்லுமா? அரேபியர்களையும், யூதர்களையும் இணைக்கும் முயற்சியில் உணவகம் ஜெருசலேம், அக். 22- பொதுவாக விருப்பமான உணவைப் பற்றிய பேச்சு ரயில் பயணத்தின் போதே நல்ல நண்பர்களை அடைய உதவும் என்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இதனை ஊர்ஜிதம் செய்யும் வகையில் இந்த இஸ்ரேலிய உணவக முதலாளி செயல்பட்டு வருகிறார்.
மத்திய கிழக்கு நாடான இஸ் ரேலிய நாட்டில் உணவகம் நடத்தி வரும் கோபி ஸாப்ரிர் என்பவர் அரேபியர்களையும், யூதர்களையும் உணவின் மூலம் இணைக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளார்.
தனது உணவகத்துக்குள் ஒன்றாக ஒரே மேசையில் இணைந்து உணவு உண்ணும் அரேபியர்களுக்கும், யூதர் களுக்கும் அவர்களது விருப்பமான ஹம்மஸ் மற்றும் பலாபல் போன்ற உணவு களை சுவைக்கத் தயாராக இருந்தால் அந்த உணவின் விலையில் அய்ம்பது சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என கோபி விளம்பரப்படுத்தி வருகிறார்.
மக்களிடையே சகிப்புத் தன்மையை அதிகரிக்கவும், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டவும் இப்பகுதி மக்களின் விருப்பமான உணவான ஹம்மஸ் உதவும் என்கிற நம்பிக்கை இருப்பதாக கோபி தெரிவித்துள்ளார்.
இந்த உணவகம் சகிப்புத் தன்மை யுள்ள அரேபியர்களையும், யூதர் களையும் இணைத்து, தற்போது இப்பகுதி மக்களுக்குப் பிடித்த இடமாக மட்டு மல்லாது, உலகம் முழுவதும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இது தொடர்பான பேஸ்புக் போஸ்ட் டில் உணவைக் கொண்டு மக்களை இணைக்கும் முயற்சிக்கு பாராட்டுகள். அன்பும், உணவும் நிச்சயம் உலகை வெல்லும்! எனக் குறிப்பிட் டுள்ளார்.
அரேபியர்களையும், யூதர்களையும் உணவின் மூலம் இஸ்ரேலில் உண வகம் நடத்தி வரும் ஒரு இஸ்ரேலிய உணவக உரிமையாளர் இப்படி ஒரு அற்புதமான மனித உறவுகளுக்குப் பாலம் அமைத்து, உலக மக்களுக்கு அவர் உணவகத்திலிருந்து ஒளியூட்டி வழி காட்டியுள்ளார்!
இஸ்ரேலியரும் அரேபியரும் மதங்களால் மாறுபட்டாலும் மனங்களால் ஒன்றுபட உணவும் ஓர் இணைப்புப் பாலமாகப் பயன்படக் கூடும் என்று காட்டுகிறார்!
அது அங்கே! இங்கே - நம் ஞானபூமியில் (இந்தியாவில்) என்ன நடக்கிறது?
ஏழைகள் - பாட்டாளிகள் - விரும்பிச் சாப்பிடும் மலிவு உணவாக பெரும்பாலோருக்குப் பயன்படும் மாட்டுக்கறி உணவை உண்டதாக, திட்டமிட்டுக் கிளப்பிய புரளிக்கு மனித உயிர் கொல்லப்படுகிறது!  ஏன் இந்த வக்கிரமம் அக்கிரமம்? மனிதம் சாகின்றது;  மிருகம் வாழ, என்னே விசித்திரம்? யார் என்ன சாப்பிடுவது  என்பது அவரவர் தம் மறுக்க வொண்ணா உரிமை அல்லவா?
காய்கறி சாப்பிடுவோரில்கூட சிலருக்கு பாகற்காய் பிடிக்காது; கசக்கின்ற காரணத்தில் - சிலருக்கு முள்ளங்கி பிடிக்காது, வெண்டைக் காயை வெறுப்பவரும் உண்டே! இதை வற்புறுத்தி உண்ணச் சட்டம் போட முடியுமா? அதற்காக கொல்லுவதைத் தான் கண்டு பொறுமையாக இருக்க முடியுமா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...