Monday, August 13, 2012

ஈழத் தமிழர்பற்றி விடுதலை ஆசிரியர்

 இறையாண்மை பாதிக்கப்படாதா?


இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றிருப்பதை இந்தியா மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு முன்பு  இலங்கை உள் நாட்டுப் பிரச்சினையில் தலையிடமாட்டோம்; இலங்கை இறையாண்மையில் தலையிடமாட்டோம் என்று இந்தியா சொல்லிக் கொண்டிருந்தது. இந்தியா இலங்கைக்குச் செய்த எல்லா வகையான உதவிகள் பற்றியும் எல்லோருக்கும் தெரியும். இலங் கைக்கு, இந்தியா செய்த இராணுவ உதவி எல் லோருக்கும் தெரியும்.
இலங்கைக்காரர்களுக்கு, இந்தியாவில், இராணுவப் பயிற்சி கொடுக்கப்பட்டதே. அவர்களுக்கு எதற்கு இங்கே இராணுவப் பயிற்சி கொடுக்க வேண்டும்?
இலங்கையின் இறையாண்மையை இந்தியாவில் அடகு வைத்துதான் பயிற்சி கொடுக்கப்பட்டது.  தேவைப்படும்போது மட்டும் இறையாண்மை என்ற குல்லாயை மாட்டிக் கொள்வார்களோ! வங்க தேசத்தை உருவாக்கிக் கொடுத்ததே இந்தியாதானே? அப்போது அடுத்த நாட்டு இறையாண்மை பற்றி நினைவு வரவில்லையா? எனவே, இந்தியா இப்பொழுது இலங்கைக்கு எதிராக எடுத்த  முடிவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நாடாளுமன்றத்திலேயே சமீபத்தில் பிரதமர் இலங்கைப் பிரச்சினைக்குப் பதில் அளித்துப் பேசும் போது, ஒரு செய்தியை மிகத் தெளிவாகச் சொன்னாரே.
இலங்கையில் உள்ள தமிழர்கள் சமூக நீதியுடன், சுய மரியாதை உணர்வுடன் வாழ்வதுதான் அர்த்தமானது என்று சொல்லியிருக் கின்றார். அதைத்தான் நாங்கள் தனி ஈழமாக வலியுறுத்துகிறோம். இலங்கையில் உள்ள தமிழர்கள், நாங்கள் இங்கு மகிழ்ச்சியாக வாழ்கிறோம். எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை தனி நாடு வேண்டாம் என்று சொல்லி விட்டால், தனி ஈழத்தை வற்புறுத்த வேண்டிய அவசியம் இருக்காது.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...