தமிழ்நாடு இடஒதுக்கீடு மசோதாவுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தது பற்றி அ.இ.அ.தி.மு.க.வி.இல் நியாயமான மனநிறைவோடு கூடிய மகிழ்ச்சி நிலவுகிறது. இப்பொழுது அது சட்டமாகிறது. ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பாரின் நலன்களைப் பெறுவதில், அ.இ.அ.தி.மு.க. அரசின் இடர்நிறைந்த முயற்சிகள் முடிந்துவிடவில்லை எனக் கூர்மையான நோக்கர்கள் கருதுகிறார்கள்.
மற்ற கட்சிகள் எல்லாம் பொதுவாகக் குடியரசுத்தலைவரின் ஒப்புதலை வரவேற்றுள்ள நிலையில், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் திரு.கி.வீரமணி மட்டும் வரக்கூடிய ஆபத்தை உணர்ந்துள்ளார் என்றும், அதன் காரணமாக இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்களின் அடுத்த நடவடிக்கை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அதை முறியடித்து நிலையான பாதுகாப்புப் பெறுவதற்கு அரசமைப்புச்சட்டத்திருத்தம் ஒன்று கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் இந்த நோக்கர்கள் கூறுகிறார்கள்.
நன்றி: தி இந்து 23 ஜூலை 1994
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- உதவி பொறியாளர் பதவிக்கு நடந்த தேர்வை ரத்து செய்யக் கோரி வழக்கு
- வெளிவந்துவிட்டது
- தவறைக் கண்டிக்க உரிமை வேண்டும்
- குருகுலப் போராட்டச் சுவடுகளின் பாடம்
- ஈழத் தமிழர்பற்றி விடுதலை ஆசிரியர் இறையாண்மை பாதிக்கப்படாதா?
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment