Monday, August 13, 2012

அண்ணாவின் அரசா?


புத்த மார்க்கத்திற்கு ஏற்பட்ட அவலம் திராவிடர் இயக்கத்திற்கு ஏற் பட்டு விட்டது என்று கருதக் கூடிய அளவுக்கு அண்ணாவையும், திராவி டத்தையும் கட்சியில் கொண்டுள்ள அண்ணா திமுக ஆகிவிட்டது. ஆரியத் தலைமை இதனைத் திட்டமிட்டு செய்து வருவதையும் அறிய முடிகிறது.
எடுத்துக்காட்டாக திராவிடர் இயக்கம், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்கும் வகையிலும், ராமன் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். நீதிமன்றத்திற்குச் செல்லும் அளவுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செய்துள்ள ஒன்றே ஒன்று போதும் - இது அண்ணா திமுக அல்ல. அக்கிரகார திமுக என்பதற்கு. அண்ணா தி.மு.க.வின் அதிகார பூர்வ ஏடான ஞிக்ஷீ. நமது எம்.ஜி.ஆர். ஏட்டில் பூணூலுக்கு மகத்துவம் கற்பித்து எழுதும் அளவிற்கு மிக வெளிப்படையாக ஆரியத் தன்மையின் வெளிப்பாடு வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
திவ்ய தேசங்களும், திருத்தல யாத்திரையும் என்று ஆன்மீக வெளியீடுகள் போல வண்ண வண்ண புராணக் கடவுள் படங் களுடன்  ஞிக்ஷீ. நமது எம்.ஜி.ஆர்.  ஏட்டில் வெளியிடப்படுகின்றனவே!
அய்யாவும், அண்ணாவும் எதிர்த்து வந்த அடிப்படை ஆன்மீகத்தை அதிகார பூர்வமான அந்த ஏட்டில் தூக்கிப் பிடித்து வருணனைக் கட்டுரைகள் தீட்டப்படுகின்றன. ஜெயலலிதா என்பவரின் தனிப்பட்ட நம்பிக்கைகள் தான் அக்கட்சியின் கொள்கைக் கோட்பாடுகளா?
அரசு அலுவலகங்களுக்குள்ளோ, வளாகங்களுக்குள்ளோ, எந்தமதத் தொடர்பான சின்னங்கள், படங்கள் இருக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்த அண்ணா எங்கே? கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துக் கூறி அறிக்கை விடும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எங்கே?
எப்படி எல்லாம் கிருஷ்ணனைப் பற்றி வர்ணனை தெரியுமா?
கண்ணபிரான் அவதரித்த இத்திரு நாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி என்றும் கோகுலாஷ்டமி என்றும் உள்ளம் மகிழ்ந்து கொண் டாடும் இந்நன்னாளில் அனைவருக் கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடை கிறேன்.
நான் எல்லா உயிர்களிடத்தும் சம மானவன், எனக்குப் பகைவனு மில்லை, நண்பனுமில்லை. என்னை அன்புடன் வணங்குவோர் உள்ளத் தில் நிறைந்திருப்பேன் என்று கண்ணபிரான் பகவத் கீதையின் மூலம் வாழ்க்கையின் நெறி முறையினை உலகுக்கு எடுத்துரைத் தார். ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்ததே இந்த உலகத்தில் தீமைகளை ஒழிப்ப தற்காக என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் ஒவ் வொருவரும், அறத்தைப் போற்றி, தீமைகளை முறியடிக்க வேண்டும் என்று உறுதியேற்க வேண்டும். அறம் பிறழ்கின்ற போது நான் இவ்வுலகில் அவதரிப்பேன் என்ற கண்ணபிரா னின் போதனைக்கேற்ப, நம் கடன் அறத்தை வளர்ப்பதே என்ற உயரிய குறிக்கோளுடன் ஒன்றிணைந்து அனைவரும் வாழ வேண்டும்.
ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த இந்த இனிய திருநாளில், குழந்தை களின் மாவினால் ஆன காலடிகளை இல்லங்கள் தோறும் பதித்து, ஸ்ரீகிருஷ்ண பகவானே தங்கள் இல்லத்திற்கு வந்ததாக பாவித்து போற்றி வணங்கி மகிழ்வார்கள். இந்த இனிய நாளில், நாடெங்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும் என்ற என்னுடைய விருப் பத்தினைத் தெரிவித்து, மீண்டும் ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள் கிறேன்.
(நமது எம்.ஜி.ஆர். நாள் 11.8.2012 பக்கம் 13)
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் - தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இப்படி கிருஷ்ணனைப் புகழ்ந்து கசிந்துருகி அறிக்கை வெளி யிட்டுள்ளாரே -_ அதே கிருஷ்ண னைப் பற்றி அவர் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள அறிஞர் அண்ணா அவர்கள் - _ அதுவும் முதலமைச்ச ராக இருந்த நிலையில், அதுவும் சட் டப் பேரவையிலே என்ன பேசினார்?
பள்ளிப் புத்தகத்தைப் பார்க் கிறோம்.  ஆரம்பப் பள்ளிப் புத்தகத் தில் ஒருபடம் இருக்கும். ஒரு குழந்தை குனிந்து நிற்க, இன்னொரு  குழந்தை முதுகில் ஏறி உறியிலிருந்து வெண் ணெய் எடுப்பதாகப் படம் இருக்கும்.
கண்ணன் தின்னும் பண்டம் எது?
கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய் என்பதைக் கற்றுத் தர இப்படி போட்டிருக்கும். கைக்கெட்டாத பொருளை எவருக்கும் தெரியாமல் எப்படி எடுப்பது என்பதைச் சொல்லிக் கொடுக்கும் வகையில் இப்படம் இருக்கிறது. இப்படி நான் சொல்வதால் புராணம் கூடாது என்று சொல்வதாக  எடுத்துக் கொள்ளக்கூடாது. அந்தக் கருத்தை இங்கு சொல்லவில்லை. மாலை 6 மணிக்கு மேல் பொதுக் கூட்டத்தில் வைத்துக் கொள்கிறேன்.
பள்ளிக்கூடத்துக் கட்டடத்துக்குப் பக்கத்தில் உள்ள பிறர் வீட்டுத் தோட்டத்தில் காய்த்துக் தொங்குகிற மாங்கனியைப் பறிக்க சோனிப் பையன் ஒருவனை குனிய வைத்து மாங்காய் பறிக்கலாம் என்ற வழியை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப் பதாக ஆகிறது. இக்கருத்தை பகுத் தறிவு என்று  எடுத்துக் கொண்டாலும் சரி, பயப்படாமல் உலக அறிவு என்று திருத்தி அமைத்தால் கல்வி அறிவும் தரமும் பெருகும்
முதலமைச்சர் அண்ணா கல்வித் துறை மானியக் கோரிக்கை விவாதத் திற்குப் பதிலளிக்கையில் 23.3.1967இல் பேசிய பேச்சின் ஒருபகுதி.
இப்படி சட்டப் பேரவையிலேயே பேசிய அண்ணா எங்கே? அவர் பெயரைக் கட்சியில் சூட்டிக் கொண்டு, திரிபுவாதம், எதிர்வாதம் செய்யும் அ.இ.அ.தி.மு.க. எங்கே?
இப்பொழுது எண்ணிப் பார் க்கட்டும். புத்த மார்க்கத்தில் புகுந்த ஆரியம் அதனை உருக் குலைத்தது போல திராவிட இயக்கத்திலே புகுந்த ஆரியம் அதே வேலையைச் செய்கிறது.
இல்லையா? அப்படி ஒரு வேளை அவர்கள் திட்டமிட்டுச் செய்தாலும், உண்மை யான திராவிடர் இயக்கமான, தாய் நிறுவனமான திராவிடர் கழகம், ஆரி யத் திரிபுகளை, எதிர் நடவடிக்கை களை அவ்வப்பொழுது தோலுரித்து அம்பலப்படுத்தி வருவதால் புத்தர் இயக்கத்துக்கு ஏற்பட்ட ஊடுருவலின் தீய விளைவு இங்கு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று உறுதியாக நம்பலாம்.
அதே நேரத்தில் அண்ணாவின் கொள்கைகளிலும், திராவிட இனப் பண்பாட்டுத் தளத்திலும் நம்பிக்கை யுள்ளவர்கள் அ.இ.அ.தி.மு.க.வில் இருக்க முடியாது என்பதை உணர வேண்டும் -  உணர்வார்களா?
- மின்சாரம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...