Tuesday, July 10, 2012

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பொறியியல் படிப்பு தொடக்க விழா


வல்லம் - பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பொறியியல் படிப்பு தொடக்க விழா நிகழ்ச்சியில் துணைவேந்தர் பேரா. நல்.இராமச்சந்திரன் உரையாற்றினார்.


வல்லம், ஜூலை 10- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பொறியியல் படிப்பு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் ஆங்கிலத்துறை தலைவர்  பேராசிரியர் பழனி அரங்கசாமி வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக கல்விப்புல முதன்மையர் எம்.அசோக்குமார் தேர்வு நெறியாளர் டாக்டர்  என்.வெற்றிவேலன், கூடுதல் பதிவாளர் டாக்டர் கி.சுவாமிநாதன், பதிவாளர் டாக்டர் மு.அய்யாவு, ஆகியோர் முன்னிலையேற்று மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.   நிகழ்ச்சிக்கு வருகை தந்த பெற்றோர்களின் சார்பில் உரையாற்றிய ஓய்வு பெற்ற இடைநிலை ஆசிரியர் பெ.கலியபெருமாள்:- கல்லூரியாக உரு வெடுத்து இன்று பல்கலைக்கழகமாக வளர்ந்துள் ளது நமக்கு பெருமை அளிப்பதாகவும் மேலும் முதல் தர பல்கலைக்கழகமாக மிக விரைவில் திகழும் என்று குறிப்பிட்டார். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் எம்.சேகர்:-  இப்பல்கலைக் கழகத்தில் தான் முதுநிலை கட்டட மேலாண்மை பட்டப்படிப்பை பயின்றதாகவும் இதனால் தன்னுடைய அறிவுத்திறனை மேம்படுத்திக் கொண் டதாகவும் குறிப்பிட்டதோடு தன்னுடைய மகள் இல்டா காவிரியை முதலாமாண்டு இயந்திரவியல் துறையில் சேர்த்துள்ளதாகவும் பெருமையுடன் குறிப்பிட்டார். திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி முதல் வர் டாக்டர் முருகேசன் பேசுகையில்:- ஆராய்ச்சி திட்டங்களுக்கு முதன்மை அளிக்கக்கூடிய பல்கலைக்கழகமாக இப்பல்கலைக்கழகம் திகழ்ந்து வருகிறது என்றும் மேனாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட பெரியார் புரா திட்டத்தை அவரே நாடு முழுவதும் எடுத்து சொல்லி வருகின்ற நிலையில் ஒரு முறை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கு சென்று வாருங்கள் என்று, தான் செல்லுகிற இடமெல்லாம் குறிப்பிடுகின்ற பெருமைக்குரியது இப்பல்கலைக்கழகம் எனக்குறிப்பிட்டார். அதன் விளைவாகவே என்னுடைய மகனை முதலாமாண்டு மின் மற்றும் மின்னணுவியல் துறையில் சேர்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இராமநாதபுரம் பொறியாளர் சிக்கந்தர் பாட்சா (மின்சார வாரியம் இராமநாதபுரம்) கூறும்போது மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் படித்தவர் களுக்குத்தான் வேலைக்கு செல்லும்போது மதிப்பு கூடுகிறது,
இன்றைய சமுதாயம்தான் மின்சார பற்றாக் குறையை போக்க வேண்டும். இங்கு இயங்கும் உயிரி எரிவாயுவிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதைக் கண்டேன்  எனக் கூறினார். சென்னையைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் பேசுகையில் சென்னையில் அனைத்து கல்லூரிகளுக்கும் சென்று வந்த நாங்கள் இப்பல்கலைக்கழகத்தில் வந்தவுடேனயே இங்குதான் சேர்க்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்ததாகவும், அனைத்து விதமான வசதிகளும் கல்வி சார்ந்த நிலையிலும் மற்ற அனைத்து நிலைகளிலும் இங்கு ஒரு சேர இருப்பது மிகவும் பெருமையாக இருப்ப தாகவும் அதனால் தன்னுடைய பேத்தியை இங்கு முதலாமாண்டு வான் பொறியியல் துறையில் சேர்த் துள்ளதாக குறிப்பிட்டார். பின்னர் கோவையைச் சார்ந்த மாணவி பூரணி உரையாற்றுகையில்:- பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பொழுது தனக்கு மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது.
கோவை மாநகரில் எங்கு பார்த்தாலும் கட்ட டங்களையே பார்த்து பழக்கப்பட்ட தனக்கு இப் பல்கலைக்கழகத்தில் பசுமை தரும் மரங்களையும் சுத்தமான காற்றை சுவாசிக்கவும், தூய குடிநீரை பருகுவதற்கும் நல்ல நண்பர்களோடு பழகுவதற்கும், பயில்வதற்கும்  இப்பல்கலைக்கழகம் வாய்ப்பினை தந்துள்ளதாக குறிப்பிட்டார். இறுதியாண்டு மாணவர் உரையாற்றுகையில்:- தான் பயின்ற மூன்று ஆண்டுகளிலும் பல்வேறு விதமான அனுபவங்களைப் பெற்றுள்ளதாகவும் பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களுக்கும் சென்று வந்துள்ளதாகவும், வளாக வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பெரு மையுடன் குறிப்பிட்டார். பின்னர் உரையாற்றிய முதலாமாண்டு மாணவர் ஹரிபிரசாத்:- தான் மிகவும் மந்தமான நிலையில் பயின்று வந்துள்ள தனக்கு பொறியியற் படிப்பதற்கு வாய்ப்பினை வழங்கியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இங்கு வந்த பிறகு தனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், உறுதியாக கல்வி யில் முன்னேறிய நிலையில் இப்பல்கலைக்கழகத்தில் முதல் மாணவனாகத் திகழ்வேன் என்றார்.
பின்னர் தொடக்கவுரையாற்றிய துணைவேந்தர் பேரா.நல்.இராமச்சந்திரன்  உரையாற்றுகையில்:- மக்கள் பல்கலைக்கழகமாக  திகழ்ந்து வரும் நம் முடைய பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் பெண்களுக்காக தொடங்கப்பட்ட பொறியியற் கல்லூரியாக உருவெடுத்து இன்று பெரியார் மணியம்மை பல்லைக்கழகமாக மிகச் சிறப்பான முறையில் தன்னுடைய பணியை ஆற்றிவருகிறது. ஆராய்ச்சி திட்டங்களுக்கும், பல்வேறு விதமான சமூகப்பணிகளிலும் இப்பல்லைக்கழகம் தன்னை இணைத்துக்கொண்டு செயலாற்றி வருகிறது. மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், தான் எழுதிய திரி பில்லியன் என்ற நூலில் நம்முடைய பல்கலைக்கழகத்தைப் பற்றியும், பல்கலைக்கழ கத்தில் அவரால் தொடங்கி வைக்கப்பட்ட புராதிட் டம் பற்றியும் அவற்றின் செயல்பாடுகளையும் பத்து பக்கங்களில் குறிப்பிட்டுள்ளதை பெருமையுடன் தன்னுடைய உரையில் எடுத்துக்கூறினார். மேலும் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் நூலகம், ஆய்வுக்கூடங்கள், கணினி மய்யம், வங்கி, அஞ்சல் நிலையம் ஆகியவற்றை மாணவர்களின் நலனுக்காகவே இங்கு ஏற்படுத்தியுள்ளோம். அதை மாணவர்கள் தங்களுக்கு தக்கவாறு பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இப்பல்கலைக்கழகத்தின் சட்ட திட்டங்களை யும், விதிமுறைகளையும் மாணவர்களாகிய நீங் களும், உங்களது பெற்றோர்களும் பின்பற்ற வேண் டும் என்றும், அவற்றையெல்லாம் கட்டுப்பாடாக கருதாமல் தங்களுக்கு விதிக்கப்பட்ட வழிகாட்டு தலாகக் கொள்ளவேண்டும் என்றார். மேல்நிலைப் படிப்புகளுக்கு  செல்லுகின்ற வகையில் ஆய்வு நோக்கமும் பெருகி வளர்கின்ற வகையில் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார். மேலும் மாணவர்கள் பயிலுகின்ற காலகட்டத் திலேயே தன்னை தகுதிப்படுத்திக் கொள்கின்ற வகையில் பிற கல்லூரிகள் பத்து நாட்கள் மட்டுமே அனுப்பி வருகின்றனர். ஆனால் நம்முடைய பல் கலைக்கழகத்தில் முதலாமாண்டில் 15 நாட்களும், இரண்டாம் ஆண்டில் 15 நாட்களும், மூன்றாம் ஆண்டில் இரண்டு மாதங்களும் தங்களை தகுதிப் படுத்திக்கொள்ள இன்பிளான்ட் பயிற்சிக்கு அனுப்பி  அவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு செல்கின்ற பொழுது உடனடி வேலை வாய்ப்பிற்கு செல்வதற்கு வாய்ப்பினை இப்பல்கலைக்கழகம்  நல்குவதாகவும் இதுபோன்ற வாய்ப்புக்களை முதலாமாண்டில் அடியெடுத்து வைத்துள்ள நீங்களும் பெற்று பயனடைய வேண்டும் என்றார்.  நிறைவாக மாணவர் நலப்பிரிவு இயக்குநர் சி.வி. சுப்ரமணியன் அவர்கள் நன்றி கூறினார். முன்னதாக முதலாமாண்டு மாணவர்களும், பெற்றோர்களும் பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக முதன் மையர்கள், இயக்குநர்கள் அனைத்துத்துறைத் தலை வர்கள் பேராசிரியர்கள் பெற்றோர்கள், மாணவர் கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முதலாமாண்டு மாணவர்களும், பெற்றோர்களும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...