Tuesday, July 10, 2012

நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை 74

மாநாட்டின் நிகழ்ச்சிகள் தொடங்கப் படும் முன், மாநாட்டில் தலைவரும், பார்வையாளர்களும், ஒரு பெரும் எண்ணிக்கை கொண்ட பிரதிநிதிகளால் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த ஊர்வலம் சென்ற இடங்களில் எல்லாம் அமோக வரவேற்பைப் பெற்றது.
பிற்பகல் 3 மணிக்கு மாநாட்டு நிகழ்ச் சிகள் திரு. ஏ.பி. பார்த்தசாரதி நாயுடு வின் இறைவணக்கத்துடன் தொடங்கின. கீழ்க்குறிப்பிடப்பட்ட பிரமுகர்களிடமி ருந்து வந்திருந்த வாழ்த்துத் தந்திகளும், வாழ்த்துக் கடிதங்களும் மாநாட்டில் படிக்கப்பட்டன. திவான் பகதூர் ஏ.சுப்பராயலு ரெட்டியார், ராவ் பகதூர் சூரியநாராயணமூர்த்தி நாயுடு, திரு பி.ராமராயநிங்கர், கான் பகதூர் முகமது அபிபுல்லா சாகிப், திரு.கே.கோடி ரெட்டி, வழக்கறிஞர், ராவ்பகதூர் எம். வெங்கடரத்னம் நாயுடு, சல்லப்பள்ளி குமாரராஜா, திரு. எத்திராஜ் முதலியோர் ஆகியோர் மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பி இருந்தனர்.
வரவேற்புக் குழுத் தலைவர் பி.துரை சாமி நாயுடு கீழ்க்குறிப்பிட்ட வரவேற்புரை ஆற்றினார்.
வரவேற்புரை
எதிர்பக்கத்தில் இருக்கும் கனவான் கள் நினைப்பது போல பார்ப்பனரல்லாத மக்கள் இயக்கம் ஏதோ திடீரென்று ஏற்பட்ட ஒன்றல்ல.  வெகு நீண்ட காலமாகவே, பார்ப்பனரல்லா மக்களிடம் இந்த உணர்வு நிலவி வருகிறது. ஜாதிகள் பற்றியும், சமூக சீர்திருத்தங்கள் பற்றியும் சுவாமி விவேகானந்தா போன்ற பெரும் மத போதகர்களின் உரைகளைப் பார்த் தால், இது பற்றிய உண்மை விளங்கும்.
இந்த இயக்கம் நமது மாபெரும் தலைவர்களான டாக்டர் நாயர், ராவ் பகதூர் பி.தியாகராய செட்டி அவர்களால் தொடங்கப்பட்டு, போற்றி, வளர்க்கப் பட்டு வந்துள்ளது. இந்த இரு தலைவர்களும் உலக நிகழ்வுகளை பொறுமையாக கூர்ந்து நோக்கி வந்தனர். அவ்வாறு தங்களின் கவனம் மிகுந்த ஆய்வில் கண்டறிந்ததை வைத்துக் கொண்டு, பார்ப்பனரல்லாத சமூக மக்களுக்கு, முன்னேற்றமடைந் துள்ள மற்ற மக்களுக்கு இணையான ஓரிடத்தைப் பெற்றுத் தருவதற்காகச் சரியானதும் உண்மையானதுமான உண் மைகளை வெளிப்படுத்தியுள்ளனர். பார்ப் பனரல்லாத சமூகத்தின் சார்பாக இந்த இரு தலைவர்களும் பொதுப் பணிகள் தேர்வாணையத்தின் முன் சில ஆண்டு களுக்கு முன்பு சாட்சியமும் அளித்துள் ளனர்.
அலட்சியத்துடன் மெத்தனமாக உறங்கிக் கிடந்த பார்ப்பனரல்லா சமூகங் களைச் சேர்ந்த நம்மை, ஒரு உண்மை யான ஜனநாயக மாற்ற நோக்கங் களுக்காக நமது சரியான மதிப்பீட்டையும், தேர்வு செய்யும் நமது ஆற்றலையும் கொண்டு திறந்த விழிகளுடன் உலக நிகழ்வுகளைப் பார்க்கவைத்துள்ளனர். இவை அனைத்துக்காகவும், இந்தப் பெரும் பார்ப்பனரல்லாத சமூகங்கள்,  இந்த மாற்றங்கள் ஏற்படக் காரணமாக விளங்கிய டாக்டர் நாயர் மற்றும் ராவ் பகதூர் பி.தியாகராய செட்டி ஆகியோருக்கு  ஆழ்ந்த நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்.
இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பெருங்கூட்டத்தினரை இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள். இந்தத் தாலுக்காவைச் சேர்ந்த முக்கியமான பார்ப்பனர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த முன்னணிப் பிரமு கர்கள் - இந்துக்கள், கிறித்துவர்கள், முகமதியர் அனைவரும் நம்மோடு சேர்ந்துள்ளனர்.
இந்தத் தாலுக்காவின் ஒட்டுமொத்த பார்ப்பனரல்லாத மக்களும் நமது நோக்கங்கள், இலட்சியங்களை முழுமையாக ஏற்றுக் கொண்டனர் என்பதற்கு இதுவே ஒரு தெளிவான அடையாளமாகும். ஆங்கிலேய ஆட்சியில் நாம் பெற்ற பயன்களை நாம் முழுமையாக அங்கீகரிக்காமல் போனால், நாம் நன்றி யுணர்வு அற்றவர்களாக ஆகிவிடுவோம்.
இன்று நாம் என்னவாக இருக்கிறோமோ, அந்த நிலையை ஆங்கிலேய அரசுதான் நம்மை அடையச் செய்தது என்பதில் எந்த வித சந்தேகமும் இருக்க முடியாது. ஆங்கிலேய அரசின் அதிகாரங்களில் தேவையின்றி தலையிடாதவாறு, அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தாராளமான அரசியல் சீர்திருத்தங்கள் வழங்குவதற் கான சரியான நேரமிது. ஆங்கிலேய அரசு அண்மைக் காலத்தில் நமக்கு சில சலுகைகளை அளித்துள்ளது. பெரும்பாலும் படிப்பறிவில்லாமல் கிடக்கும் நமது மக்கள் எண்ணற்ற ஜாதிகளாகப் பிரிக்கப்பட்டு பிளவுபட்டு நிற்கின்றனர்.
அவர்களின் நலன்களும், கலாச்சார நிலைகளும் மாறுபட்டவை யாகும்.  இந்த நிலையில், ஆங்கிலேய அரசின் செல்வாக்கையும், அதிகாரத் தையும் பலமிழக்கச் செய்யும் நிருவாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால், பிற் படுத்தப்பட்ட சமூக மக்களின் நலன்கள் பெரிதும் பாதிக்கும்.  தொடக்கநிலை, இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வி தான் நாட்டின் இன்றைய முக்கியமான தேவையாகும்.
பின்னர்  தலைவர் நாற்காலியில் உட்கார வைக்கப்பட்ட திரு கே.சுப்பா ரெட்டி அவர்களுக்கு பெரும் ஆர்வத் துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் தனது தலைமையுரையை ஆற்றினார். அவரது உரையிலிருந்து சில பகுதிகள் கீழே தரப்படுகின்றன.
தலைவர் உரை
ஆங்கிலேய சாம்ராஜ்யத்திடமிருந்து சுய ஆட்சியைப் பெறுவது இனியும் ஒரு தனிப்பட்ட கட்சியின் ஏகபோக உரிமை அல்ல என்ற ஒரு நிலையையும், ஆங்கிலோ இந்தியர் நீங்கலான இந்தியாவில் உள்ள மற்ற அனைத்துக் கட்சிகளின் அதிகார பூர்வ நிலையும் அதுதான்  என்னும் ஒரு நிலையையும் நாம் ஏற்கெனவே அடைந்து விட்டோம்.
இப்போது நம் முன் உள்ள ஒரே ஒரு கேள்வி, அதற்காக இன்னும் எவ்வளவு காலம் நாம் காத்திருக்க வேண்டும் என்பதும், போர் முடிந்த பிறகு இந்தியா பெற இருக்கும் அரசியல் சீர்திருத்தம் குறைந்தது எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதும்தான்.  இப்போரில் நாம் ஆங்கிலப் பேரரசுக்கு அளிக்கும் உதவிக்காக இதனை நாம் கேட்கவில்லை; அவ்வாறு உதவி செய்வது நமது கடமையாகும்.
நமது சொந்த நாட்டில் நம்மை நாமே ஆண்டுகொள்வது என்பது நமது பிறப்புரிமை என்பதை அங்கீகரிக்கும் வகையில்தான் இதனை நாம் கேட்கிறோம்.
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
(தொடரும்)


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...