Tuesday, July 10, 2012

அரசியலில் இப்படியும் ஒரு தோழர்


மே. சு. சண்முகசுந்தரம், தி.மு. கழக முன்னாள் முதல் அவைத் தலைவர், மதுராந்தகம் வட்டம், வாலசாபாத் ஒன்றிய திமு கழக பிரதிநிதி., சீயமங் கலம் துவக்கப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் மன்றத் தலைவர் 133, செட்டித் தெரு திம்மராஜம்பேட்டை, காஞ்சிபுரம் - 631 601. மனப்பூர்வமாக 23.04.2012 அன்று எழுதித் தந்த இறுதி முறி (உயில்).
என் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், இயக்கத் தோழர்கள் அனைவரும் என் மறைவுக்குப் பிறகு நடத்த வேண்டிய நடைமுறைகள்:
1. உடலை குளிப்பாட்டக் கூடாது.
2. நெற்றியில் விபூதி, குங்குமம், சந்தனம் எதுவும் பூசக்கூடாது.
3. உடலுக்கு மாலை இடலாம்.
4. உடல் அருகில் அமர்ந்து அழக் கூடாது.
5. பறை (அ) மேளம் அடிப்பது சங்கு ஊதுவது எதுவும் கூடாது.
6. இறுதிச் சடங்கு என்று எந்தச் சடங்கையும் செய்யக் கூடாது.
7. என் துணைவியாருக்கும் என் மறைவைத் தொடர்ந்து எந்தவித சடங்கும் செய்யக் கூடாது.
8. என் மறைவிற்குப் பிறகும் என் துணைவியார் பூவும் பொட்டும் வைத்துக் கொள்வதையே நான் விரும்புகிறேன்.
9. போரூர், சிறி இராமச்சந்தரா மருத்துவமனையினரின் 13.09.2003 தேதியிட்ட கடித எண் 69/474/MS/2003  பிரகாரம் பெரியார் அண்ணா பிறந்த நாள் முன்னிறுத்தி முடிவெடுத்து உறுதி செய்தபடி என் உடலை அந்த மருத்துவமனைக்கு தானம் கொடுத்துவிட வேண்டும்.
10. என் மறைவை முன்னிட்டு கொள்ளி வைப்பது, பால் ஊற்றுவது, கருமாதி செய்வது, திதி கொடுப்பது எதுவும் இருக்கக் கூடாது.
11. உறவினர், நண்பர்கள், கழகத்தவர் அனைவருக்கும் உரிய நேரத்தில் என் மறைவைத் தெரிவிக் கவும்.
12. மருத்துவமனைக்கு உடல் சென்றதும் வருபவர்கள் மரியாதை செய்ய விரும்பினால் அவர்கள் வசதிக்காக என் புகைப்படம்ஒன்றை வீட்டில் வைக்கலாம்.
13. என் மறைவை அனைவருக்கும் தெரியப்படுத்தும் நோக்கத்துடன் மறைவுக்குப் பின் ஒரு மாதத்திற் குள்ளாக ஏதேனும் ஒரு நாளில் நினைவு ஏந்தல் நிகழ்ச்சி ஒன்றை கூட்டலாம்.
14. இங்கே குறிப்பிட்ட நடை முறைகளை என் மக்கள்
1) அருள் பிரகாசம்
2) இராணி
3) ருக்குமணி
4) கோவலன்
5) துணைவியார் அஞ்சலம் மற்றும் என் மருமகன், மருமகள்கள் பேரன் பேத்திகள் தவறாமல் செய்யக் கடமைப் பட்டவர்கள் ஆவார்கள்.
15. இந்த இறுதி முறி (உயில்) நான் என் மனம் ஒத்து முழு நினைவு டனும் ஒப்புதலுடனும் தயாரிக்கப் பட்டு கையொப்பம் இடப்பட்டது.
இப்படிக்கு
(மே.சு. சண்முகசுந்தரம்)
திம்மராஜம்பேட்டை
23.04.2012
சாட்சிகள்:
1. எம். வேதாசலம், தி.மு.க. ஒன்றிய செயலாளர், வாலாசாபாத்,
2. என். பாண்டியன், தி.மு.க. பேரூ ராட்சி செயலாளர், வாலாசாபாத்
3. ஏ. கணேசன், முன்னாள் ஊராட்சித் தலைவர், திம்மராசம்பேட்டை.
குறிப்பு: திராவிடர் கழகத்திற்கு அடுத்த படியாக தி.மு.க.வில் தான் இத்தகைய உணர்வைக் காண முடிகிறது பாராட் டுகள்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...