Thursday, July 19, 2012

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க, செயல்திட்டங்களை வகுக்க தொடங்குகிற உடனடி முயற்சிதான் இந்த மாநாடு


சென்னை, ஜூலை 19- ஈழத் தமிழர் களைப் பாதுகாக்கவும், உரிய தீர்மானங் களை நிறைவேற்றவும், அவற்றை நடை முறைக்குக் கொண்டு வருவதற்கான செயல் திட்டங்களை வகுக்கவும் நாம் தொடங்குகின்ற உடனடி முயற்சிதான் இந்த மாநாடு என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார். இன்று (19.7.2012) முரசொலியில் அவர் எழுதிய கடிதம் வருமாறு:
இலங்கையில் உள்ள  ஈழத்  தமிழர்க ளின்  உரிமைகளைக் கோரிப் பெற வேண்டும் என்பதிலும்;    இலங்கையில் நடைபெற்ற ஆயுதப் போராட்டத் திற்குப்  பிறகு;  சிங்கள  ராணுவம்  ஈழத்  தமிழர்களை அழித்து  ஒழித்திட முனைந் துள்ள  இந்த நேரத்தில், எஞ்சியுள்ள  இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக் கவும், அவர்களின் வாழ்வாதாரங்களை  வலுப்படுத்தவும்,  அவர்களுக்கு  போரி னால் ஏற்பட்ட இன்னல்களைக் களைந் திடவும், எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம்;
எதில் நாட்டம் செலுத் தலாம்;  எத்தகைய  ஆதரவு  கோரலாம்;  போருக்குப் பிறகும்,  ஒரு பொதுவான அமைதி அங்கே ஏற்படாமல் தொடர்ந்து  சிங்கள ராணுவத்தின்  அட்டூழியங்கள்  தமிழர்கள் மீது  தொடர்வதைக் கண் டிக்கவும்; அவற்றிலிருந்து  இலங்கையி லுள்ள ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வும்;  அறவழியில் எத்தகைய  நடவடிக்கை களை  மேற்கொள்ளலாம் என்பதுதான் ஆகஸ்ட்  12ஆம் தேதி  சென்னையில் நாம் நடத்த இருக்கின்ற மாநாட்டின், திட்டமாகவும், தீர்மானமாகவும் இருக்கும் என்பதையும்;
மாநாட்டில்  இத்தகைய  தீர்மானங்கள்  விவாதிக்கப் படுவதாலோ - அல்லது  நிறைவேற் றப்படுவதாலோ தமிழ் ஈழம் என்ற குறிக்கோளை திராவிட முன்னேற்றக் கழகம்  கைவிட்டு விட்டதாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம்  என்று,  அந்த மாநாட்டைப் பற்றிய விளக்கங் களை அளித்த செய்தியாளர்கள் கூட் டத்தில் நான் திட்டவட்டமாகத் தெரி வித்திருக்கிறேன்.
ஆனால் சில செய்தி ஏடுகள் மற்றும் சில நண்பர்கள் தெளிவாக நான் அளித்த அந்தப் பேட்டியையே  குழப்பம்  என்று  குதர்க்க வாதம்  செய்வதையும்;   நாம்  தமிழ்  ஈழக் கோரிக்கையையே கை விட்டு விட்டோம் என்பதைப் போல பேசுவதை யும், எழுதுவதையும், அறிக்கைகள் விடுவதையும் காணும் போது;
எந்தக் கருத்தை தி.மு. கழகம் மக்கள் முன்னால் எடுத்து வைத்தாலும்; அதற்கு மாறுபட்ட  கருத்தைச் சொல்லி குழப் பம் ஏற்படுத்த முயற்சி செய்வதையோ,  நமது கருத்தைக் கேலி செய்வதையோ வாடிக்கையாகக் கொண்டுள்ளவர் களிடமிருந்து நாம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. அவர்களின் ஒட்டு மொத்த கருத்தெல்லாம்,  நாம் சொல்லுகின்ற கருத்து என்ன என்பதை விட,  நாம் என்ன சொன்னாலும் எதிர்ப் பதுதான் தங்கள் வாழ்நாள் திட்டம் - பிறவிப்பயன் என்று நினைப்பவர்களிட மிருந்து - நம்முடைய கருத்தை ஏற்று ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நாம் நினைக்க முடியாது.
தனித் தமிழ் ஈழம் வேண்டும்,  அதுவும் இன்றைக்கே வேண்டும், அதற்கு ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்று  நாம் சொன்னால்,  உடனே  ஆகா,  இவர் இப்படிச் சொன்ன தால் தான் இலங்கைத் தமிழர்கள் அடிபட்டு சாக வேண்டி இருக்கிறது,  அவர்களின் அழிவுக்கு இவர்தான் காரணம் என்பார்கள்.  முதலில் இலங்கைத் தமிழர்களின் தற்போதைய துன்பங்கள் தீரவேண்டுமென்றும், மற்றவற்றைப் பற்றி நேரம் பார்த்துச் சிந்தித்துச் செயல்படலாம் என்றும் சொன்னால், ஆகா, பார்த்தீர்களா,  தமிழ் ஈழம் கொள்கையையே விட்டு விட்டார் என்பார்கள்.
எனவே  அவர்களின் தரத் திற்கு அதைத்தான் எதிர்பார்க்க முடியும்.   இலங்கையில்  தமிழ் இனம் -  சிங்கள  ராணுவத்தால்  நடத்தப்பட்ட மனித நேயம் மற்றும் மனித உரிமைக்கு எதி ரான தாக்குதலில்;  பெரும் அழிவுக்கும் அவதிக்கும்  உள்ளாகி  ஆதரவற்ற  நிலையில்  கை கொடுப்பார்  யாரும் இல்லையா? கருணை காட்டுவோர் எவருமில் லையா? என்று  கண்ணீரும் கம்பலை யுமாக  தேம்பித்  திரிகின்ற  இந்த நேரத் தில்  அவர்களின் காயங்களுக்கு  மருந்து  போடவும்,  ரணம் பட்ட உடல்களுக்கு  அவசர சிகிச்சை  செய்யவும்,  இனியும்  இத்தகைய  அழிவுக்கு உள்ளாகாமல் அவர்கள் காப்பாற்றப்படவும்;  உடனடி  நிவாரணமாக என்ன செய்யலாம்?
இந்திய அரசானாலும் - உலக நாடுகளில்  உதவிக்கு வரக்கூடிய அரசுகளானாலும்   அவற்றையெல்லாம்  வலியுறுத்தி, ஈழத்  தமிழர்களின்  வாட்டம் போக்கிட  உட னடி நடவடிக்கை  என்ன என்பதைச் சிந்தித்து, விவாதித்து,  செயல்படுத்துவது தான் இந்த மாநாட்டைக் கூட்டுகின்ற  நம்முடைய கடமையும், கலந்து கொள் கிறவர்களுடைய  கடமையும் ஆகும்.
அந்தக் கடமைகளைப் பற்றி விரி வாக  விவாதித்து  ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கவும்  உரிய  தீர்மானங்களை  நிறைவேற்றவும்,  அவற்றை நடை முறைக்குக் கொண்டுவருவதற்கான  செயல் திட்டங்களை  வகுக்கவும்  நாம் தொடங்குகிற  உடனடி முயற்சிதான்  இந்த மாநாடு.
இந்த மாநாடு பற்றிய விளக்கங்களை அளிப்பதற்கு நான் கூட்டிய செய்தி யாளர்கள் கூட்டத்தில்,
இந்த டெசோ மாநாட்டில்  தனி ஈழம் கோரி  வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்ற வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டபோது, நான் விரிவாக அளித்த பதிலை மீண்டும் இப்போது நினை வூட்ட விரும்புகிறேன். அந்தப் பதில் வருமாறு :-
தனி ஈழத்தைப் பற்றி  கருத்து  இருக்கிறதே தவிர, அதை இப்போதே  அழுத்தந்திருத்தமாகச் சொல்லி,  அதற்கான கிளர்ச்சிகளை நடத்துவதாக  உத்தேசமில்லை.  ஏனென்றால்  அங்கே நடைபெற்ற  ஆயுதப் போராட்டத்திற் குப் பிறகு,  ஆயுதப் போராளிகளை  சிங்கள ராணுவம் அழித்து ஒழித்துள்ள   இந்த நேரத்தில்  எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பது,  அவர் களின்  வாழ்வாதாரங்களை வளப்படுத் துவது,  அவர்களுக்கு போரினால் ஏற் பட்ட இன்னல்களைக் களைவது, இவற் றில் எப்படியெல்லாம்  நடவடிக்கை எடுக்கலாம்,  நாட்டம் செலுத்தலாம், ஆதரவு கோரலாம்  என்பதற்காகத்தான்  இந்த மாநாட்டைக் கூட்டி,  அதிலே கலந்து கொள்கின்றவர் களின் அறிவுரை, கருத்துரை ஆகியவற்றையும்  நாங்கள் முக்கியமாகக் கருதி,  அவற்றின் அடிப் படையில் அமைதியான முறையில்  அற வழியில்  நடவடிக்கை களை மேற்கொள் ளலாம் என்பதுதான் இந்த மாநாட்டை நடத்துகின்ற எங்களுடைய  நோக்க மாகும் என்று  நான்  தெளிவாகவே  குறிப் பிட்டதோடு;
தமிழ் ஈழம் இதுவரை எனது நிறை வேறாத கனவு என்று நான் அன்று சொன்னதை எப்போதும் சொல்வேன், இப்போதும் சொல்கிறேன்.  என்னு டைய நிறைவேறாத ஆசை அதுதான்.  தனித் தமிழ் ஈழம் என்று முன்பு நான் சொன்னதை இப்போதும்  சொல்வதற்கு தயங்கவில்லை. தனி ஈழம் ஒரு காலத்தில் அமையலாம்.   அதற்கும் ஒரு கால அவ காசம் வேண்டும்
என்றும்  நான் திட்டவட்டமாக என்னுடைய உணர்வுகளை வெளிப் படுத்தியிருக்கிறேன்.   மேலும் செய்தியா ளர்கள் சந்திப்பில், பொது வாக்கெடுப்பு பற்றிய எந்தக் கருத்தும் விவாதத்திற்கான கருத்துரு தொடர்பான அறிக்கையில் சொல்லப்படவில்லையே? என்று கேட்கப்பட்ட போது,
இந்த மாநாட்டிற்கு வருகின்ற பிரதி நிதிகளின் கருத்துக்களை யெல்லாம் அறிந்த பிறகு, முடிவெடுப்பது தான் ஜனநாயகம் என்ற காரணத்தால்,  நான் எதையும் முன்கூட்டியே சொல்லி யாரையும் கட்டுப்படுத்த விரும்ப வில்லை, அது நல்லதுமல்ல என்றும் விளக்கியிருக்கிறேன்.
இவ்வளவிற்கும் பிறகும் ஒரு சிலர் தமிழ் ஈழத்தைக் கருணாநிதி விட்டு விட்டார் என்றெல்லாம் கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பார்களானால், அவர்கள் அப்படியே சஞ்சரிக்கட்டும்.  நாம் நம் வழியிலே நடப்போம்.
இதிலே ஒன்றும் குழப்பம் இல்லை.   எப்படியாவது இதையும் குழப்ப வேண்டும் என்று எண்ணுகிற குதர்க்க வாதிகளுக்கு,  செய்தி யாளர்கள் கூட்டத் தில் நான் அளித்துள்ள இந்த விளக்கமே தக்க பதிலாக அமையும் என்று நான் நம்புகிறேன்.
அன்புள்ள,
மு.க.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...