சென்னை, ஜூலை 19: காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் தினமலர் ஆசிரியரும், பதிப்பாளரும் வெளியீட்டாளருமான ஆர்.ராகவன் ஆகியோர் மீது திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் சென்னை எழும்பூர் முதன்மைப் பெருநகர மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் தொடுத் துள்ள அவதூறு வழக்கின் விபரம் பின்வருமாறு:
அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ள தாவது:
திராவிடர் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் என்ற முறையிலும், திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி அவர்களின் மகன் என்ற முறையிலும், எங்கள் குடும்பத்தைப் பற்றி அவதூறான பேச்சினை காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பேட்டியில் தெரிவித் துள்ளார்; அதனை தினமலர் பத்திரிகையில் பதிப்பாளர், வெளியீட்டாளர், ஆசிரிய ருமான ஆர்.ராகவன் தனது பத்திரிகையில் வெளியிட்டுள்ளார்.
நாத்திகக் கருத்தைப் பின்பற்றி, பரப்பி வரும் எங்கள் குடும் பத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செய்தியை பரப்பி உள்ளது. தினமலர் வெளியிட்டிருந்த செய்தியில் திரு.கி. வீரமணி அவர்களின் இளைய சகோதரர் ஜெயேந்திரரை சந்தித்துப் பேசியதாகக் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மடத்தின் தலைவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஜெயேந்திரர் திரு.வீரமணி அவர்களுக்கு இளைய சகோதரர் எவரும் இல்லை என்பதை நன்கு அறிந்திருப்பவர்.
மேலும் திருமதி வீரமணி அவர்களும் ஜெயேந்திரரை சந்தித்துப் பேசியதாகக் கூறியிருப்பதும் முற்றிலும் அவதூறான செய்தியாகும்.
10-5-2012 அன்று தினமலர் திருச்சி பதிப்பில் கீழ்க்கண்ட தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கருணாநிதி எதிர்த்தாலும் ஸ்டாலின் சந்தித்தார்
ஆன்மீக நாட்டம் குறித்து காஞ்சி சங்கராச்சாரியார் பேட்டி
. . . ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், தி.க.தலைவர் வீரமணியும் ஆன்மீகத்துக்கு எதி ராகவே செயல்பட்டு வருகின்றனர். பேசி வருகின்றனர். ஆனால் கருணாநிதி மகன் ஸ்டாலின் 3 முறை என்னை வந்து சந்தித் துள்ளார். வீரமணியின் மனைவி யும், மத்திய அமைச்சர் அழகிரி மனை வியும் என்னை வந்து சந்தித்துப் பேசியுள்ளனர். வீரமணியின் தம் பியும் என்னை வந்து சந்தித்துப் பேசியுள்ளார். கருணாநிதியும், வீரமணியும் ஆன்மிகத்துக்கு எதி ராக செயல்பட்டாலும் அவர்கள் குடும்பத்தினர், ஆன்மிகத்துக்கு ஆதரவாகவே உள்ளனர்.
எங்கள் கட்சிக்காரர்கள், அனுதாபிகள், நலம் விரும்பிகள் 10-5-2012 தினமலர் திருச்சி பதிப்பு நாளிதழில் டூர்-ஊர் என்ற தலைப்பில் வெளியான இந்தச் செய்தியைப் படித்தவுடன், கேள்விப் பட்டவுடன் அதிர்ச்சி அடைந்தனர். திராவிடர் கழகத்தினர் மற்றும் குடும்பத் தினரின் நற்பெயருக்கும், புகழுக்கும் ஊறு விளைவிப்பதாக இந்தச் செய்தி இருக் கிறது.
ஜெயேந்திர சரஸ்வதி 10-5-2012 அன்று கிருஷ்ணகிரியில் அளித்த பேட்டி யில், தி.க.தலைவர் கி.வீரமணியும், தி.மு.க.தலைவர் மு.கருணாநிதியும் நாத்திகத்தைப் பிரச்சாரம் செய்தாலும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நான் பிரச்சாரம் செய்யும் ஆன்மிகத்துக்கு ஆதரவு அளிக்கின்றனர் என்று கூறி யிருந்தார்.
மனுதாரரும், அவரது குடும்பத்தினரும், அவரது கட்சியினரும் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்குப் போராடுபவர்கள்; மதவாதிகளால் உரு வாக்கப்பட்ட மூடநம்பிக்கைகளை வெளிச் சத்துக்குக் கொண்டு வந்து எதிர்ப் பவர்கள். இத்தகைய சூழ்நிலையில் எனது தாயார் ஜெயேந்திர சரஸ்வதியை எப்போ துமே சந்தித்தது இல்லை; சந்தித்ததாகக் கூறப்படும் செய்தி உள்நோக்கம் கொண்ட, பொய்யான, அவதூறான செய்தியாகும்.
பேட்டியில் ஜெயேந்திர சரஸ்வதி கூறியதாகக் கூறப்பட்டுள்ள செய்தி அவ தூறானது என்பதையும், அது எனது மற்றும் எனது குடும்பத்தின் நற்பெய ருக்குக் களங்கம் விளைப்பது என்பதையும் அவரே நன்கு அறிவார். இவ்வாறு அவ தூறு பரப்பிய ஜெயேந்திரரும், அச் செய்தியினை வெளியிட்டவரும், அச்சிட்ட வரும், பத்திரிகையின் ஆசிரியருமான ஆர். ராகவன் இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின் 500 ஆவது பிரிவின் கீழ் தண் டனைக்குரியவர்கள். இவர்கள் இருவரும் சட்டத்தைப் பற்றியும், அதை மீறினால் ஏற் படும் விளைவுகளைப் பற்றியும் அறியாத வர்கள் அல்ல.
எனவே இந்த இருவர் மீதும் குற்றவியல் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது. எனவே, இவ்வாறாக அவதூறாகப் பேசியதற்காக ஜெயேந்திர சரஸ்வதிக்கும், அச்செய்தியை தினமலர் பத்திரிகையில் அச்சிட்டதற்கும், வெளியிட்டதற்கும், ஆசிரியர் ஆர். ராகவனுக்கும், என் சார்பாக வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்று 15-5-2012 அன்று அனுப்பப்பட்டது.
அதில் 7 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும், அதனை அதே பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு வழக்கு தொடரப்படும் என்றும், அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த நோட்டீசை அவர்கள் இருவரும் 16.5.2012 அன்று பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஆனால், அதில் கேட்டிருந்தபடி அவர்கள் இருவரும் அவ்வாறு மன்னிப்பு கேட்கவோ, அதுபற்றி மறுப்பு செய்தி வெளி யிடவோ எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதால், எனக்கு சென்னை எழும்பூர் முதன்மைப் பெருநகர மாஜிஸ்டிரேட் அவர்களின் நீதிமன்றத்தில் இந்திய தண்டனை சட்டத்தின் 499 ஆவது மற்றும் 500 ஆவது பிரிவின் வழக்கு ஒன்று தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் இந்த வழக்கை போட்டுள்ளேன்.
மேன்மை தங்கிய நீதிபதி அவர்கள் இந்த மனுவை விசாரித்து, உண்மைகளை சீர்தூக்கிப் பார்த்து நீதி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட் டுள்ளது.
மனுதாரர்கள் சார்பாக வழக்கறிஞர்கள் த. வீரசேகரன், ஆர். ரத்தினகுமார், ஜி.எஸ். பாஸ்கர், ஜெ. துரைசாமி ஆகியோர் ஆஜராகினர்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி நசீர்அகமது அவர்கள் இந்த வழக்கை ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு மறு விசாரணைக்காக ஒத்தி வைத் துள்ளார்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- தமிழக அமைச்சரவையில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கம் புதிய அமைச்சராக தோப்பு வெங்கடாசலம் பதவி ஏற்றார்
- மக்கள் தொலைக்காட்சியில் பெரியார் மணியம்மை பல்கலை. அலுவலர் உரை
- தமிழில் அய்.ஏ.எஸ்., முதன்மைத் தேர்வு: பதிலளிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
- ஹமீது அன்சாரிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு
- கர்நாடகா பா.ஜ.,வில் மீண்டும் சிக்கல் மேலும் ஒரு எம்.எல்.ஏ., பதவி விலகல்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment