உலகில் மிகவும் மலிவான ஒன்று, தமிழனின் உயிர் தானோ என்று சந்தேகிக்க வேண்டி யுள்ளது. இலங்கையில் ஈழத் தமிழர்கள் குருவி கள் போல சுட்டுக் கொல்லப்பட்டது ஒருபுறம்; தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கையின் சிங்களக் கடற்படை சுட்டுக் கொல்வது என்பது, பொழுது போக்கு விளையாட்டாகவே இருந்து வருகிறது.
அதிக பட்சமாகப் போனால் இந்திய அரசு என்ன சொல்லும்? கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம்; வருத்தத்தைத் தெரிவிக்கிறோம் என்று சொல்லும் அவ்வளவுதான். இந்த மென்மையான மொழிகளுக்கெல்லாம் வெறி பிடித்த விலங்குகளாகத் திரியும் சிங்களக் கடற்படை ஓநாய்களுக்குப் பொருள் தெரியுமா?
கேட்டால் என்ன சொல்கிறார்கள்? இலங் கைக்குச் சொந்தமான கடற்பகுதியில் தமிழ் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லுவதால் இந்த நிலைமை என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். பட்டுப் புடவையை இரவல் கொடுத்துவிட்டு ஈச்சம்பாயைத் தூக்கிக் கொண்டு அலையும் அபலைபோல கச்சத் தீவைத் தூக்கிக் கொடுத்துவிட்டு அல்லல்படும் நிலை!
திருப்பி நாம் கேட்க முடியாதா? இலங்கை மீனவர்கள் இந்தியக் கடற்பகுதிக்கு வந்து மீன் பிடிக்கிறார்களே, அப்பொழுதெல்லாம் இந்தியக் கடற்படை இலங்கை மீனவர்களைச் சுடுவது உண்டா?
கொட்டினால் தானே தேள் - இல்லாவிட்டால் பிள்ளைப் பூச்சிதானே!
கேரளாவில் அம்மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவரை இத்தாலியைச் சேர்ந்த கப்பல் அதிகாரிகள் சுட்டுக் கொன்றபோது கேரள அரசு எப்படி நடந்துகொண்டது? இந்திய அரசும் எவ்வளவு அமர்க்களம் செய்தது? கோடிக்கணக்கில் ரூபாய்கள் நட்ட ஈடு கிடைக் குமாறு செய்யவில்லையா? தமிழக மீனவர் குடும்பத்துக்கு அந்த அளவு நட்ட ஈடு உண்டா? தமிழர்கள் என்று வந்துவிட்டால் மட்டும் என்ன அப்படி ஓர் அலட்சியம்?
இப்பொழுது ஒரு நிகழ்ச்சி! பக்ரைனில் உள்ள அமெரிக்காவின் கடற்படைக்குப் பொருள்களைக் கொண்டு சென்ற கப்பலின் பாதுகாப்புப் படையினர் துபாய் கடற்பரப்பில் சிறிய படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத் தியதால் இராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் சேகர் படு கொலை செய்யப்பட்டார். அவருடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த மூன்று தமிழக மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
என்ன காரணம் சொல்லப்படுகிறது? மீன் பிடிப் படகு தங்கள் கப்பலை நெருங்கி வந்த தாகவும், எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் நெருங்கி வந்ததன் காரணமாக சுட நேரிட்டது என்றும் கதை அளக்கிறார்கள் (Cock and Bull Story).
அப்படியே படகு நெருங்கி வந்து கப்பலைக் கவிழ்த்துவிடுமோ - புளுகினாலும் பொருத்த மாகப் புளுகுங்கடா அட போக்கத்தப் பசங்களா என்று உடுமலை நாராயணகவி பாடினாரே - அந்த வரிகள்தான் நினைவிற்கு வருகின்றன.
தீவிரவாதிகள் தாக்கி விடுவார்கள் என்ற பயத்தால் நடந்துவிட்டதாம் - சமாதானம் சொல்லப்படுகிறது. ஆகாயத்தை நோக்கிச் சுட்டுக் காட்டியிருக்கலாமே - செய்தார்களா?
பொதுவாக இந்திய அரசு சொந்த நாட்டு மக்களை குறிப்பாக தமிழர்களைப் பாதுகாப் பதில் போதிய அக்கறை காட்டுவதில்லை. அத னைப் பலகீனமாக மற்ற நாடுகள் கருதுகின் றன என்பதுதான் இதில் உள்ள சூட்சமம்!
ஆயுத பூஜை கொண்டாடும் நாட்டின் இந்துத்துவா மனப்பான்மை என்பது இதுதான் போலும்!
JULY 01-15
அறிவுக்குப் பொருந்தா செயல்தான் செய்தே...
இதனைச் செய்தால் நீங்களும் கொடையாளர்தான்
இந்தியாவில்....
உங்களுக்குத் தெரியுமா?
எண்ணம்
எதில் வேண்டும் தூய்மை?
ஒரு மனசாட்சியின் வாக்குமூலம்
கடவுள் இருக்கிறாரா? சோதிப்போம் வாங்க... - 4
குழம்பிக் கிடக்கும் இந்துத்துவக் குட்டை
சிங்கள மயமாக்கத்தில் சிக்கிய புத்தர்
சிந்தனைக் (கவி)த்துளி
செய்திக் கீற்று
சோ அவர்களே! சோடி போட்டுக்குவோமா சோடி?
தமிழ்மொழியின் தனித்தன்மையும் 'தனிமை'த்தன்மையும்
நாட்டின் நான்காவது தூண்...? இன்றைய ஊடகத்துறை இப்படி.
நாத்திகமே இறுதியில் வெல்லும்!
நாத்திகர் வாக்கு பலித்தது !
நிகழ்ந்தவை
நுழைவுத் தேர்வு கூடாது!
பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் 6 பக்தி ரசமா? காம ரசமா?
புதிய சரஸ்வதி
புதிய சவால்களை எதிர்கொள்ள விடுதலையே ஆயுதம்!
புதுப்பாக்கள்
பெரியாரை அறிவோமா?
பெரியார் இல்லாமல் முன்னேற்றம் இல்லை
மருத்துவம் 200/200ல் 16க்கு 10
முகநூல் பேசுகிறது
முற்றம்
விரலும் விழியும் எழுப்பும் வினாக்கள்
No comments:
Post a Comment