Tuesday, January 3, 2012

திணற வைக்கிறதா - திருநள்ளாறு?


ஆன்மீகத்துக்கும், கடவுள் நம்பிக்கைக்கும் எப்பொழுதெல்லாம் நெருக்கடி - பலவீனம் ஏற்படுகிறதோ, அப்பொ ழுதெல்லாம் பார்ப்பனர் கள் - அவர்களின் ஊட கங்கள் - அவர்களின் தொங்கு சதைகளான சில ஏடுகள் ஏதாவது ஓர் அற்புதக் கரடியை அவிழ்த்துவிடுவார்கள்.

அதே போல்தான் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பற்றி ஒரு மகாத்மியத்தைப் பரப்பி வருகிறார்கள். இதோ ஒரு பிரச்சாரம்:

இன்று பல நாடுகள் செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. சில வரு டங்களுக்கு முன்பு அமெ ரிக்க செயற்கைக் கோள் ஒன்று பூமியின் குறிப் பிட்ட பகுதியைக் கடக்கும் போது மட்டும் 3 வினா டிகள் ஸ்தம்பித்துவிடு கிறது. 3 வினாடிகளுக் குப் பிறகு வழக்கம் போல அது வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அந்த செயற்கைக் கோளில் அதன் கருவிகளில் ஏற்படு வதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது.

இது எப்படி சாத்தியம் என்பதை ஆராய்ந்து கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல உலகையே மிரள வைத்தது.

ஆம்! எந்த ஒரு செயற்கைக் கோளும் பூமி யில் இந்தியாவின் தமிழ் நாடு அருகில் உள்ள காரைக்கால் திருநள்ளாறு கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியைக் கடக்கும் 3 வினாடிகள் மட் டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம்?
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்குத் தெரியாத கருநீலக்கதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்க ளுக்கு ஒரு முறை நடக்கும் சனிப் பெயர்ச்சியின் போது இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிக மாக இருக்கிறதாம். விண் வெளியில் சுற்றிக் கொண் டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக் கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.

அதே நேரத்தில் செயற்கைக் கோள்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவ தில்லை. இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென் றால், இந்த கோவில்தான் இந்துக்களால் சனி பகவான் தலம் என்று போற்றப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு நாசாவிலிருந்து பலமுறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்துவிட்ட னர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந் தனர். அவர்களும் சனிபக வானை கையெடுத்துக் கும்பிட்டு உணர்ந்தனர் என்று ஏடுகளில் கயிறு திரிக்கப்பட்டது.

இந்தத் தகவலைப் பற்றி சந்திராயன் புகழ் விண் ணியல் விஞ்ஞானி மயில் சாமி அண்ணாதுரை அவர் கள் தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
என் அறிவுக்கு எட்டிய வரை இந்தத் தகவல் பொய் என்று கூறி விஞ்ஞான அறிவுக்கு நாணயமுள்ளவ ராக நடந்து கொண்டு விட்டார். To the best of my knowledge it is not true என்று கூறிவிட்டாரே!

சொல்லுவது விண்ணி யல் விஞ்ஞானி என்பதை மறந்துவிடக்கூடாது.

இதே போல்தான் மணியன் என்ற ஒரு பார்ப் பனர் இருந்தார். இது போன்ற கட்டுக்கதைகளைப் புனைந்து உலவ விடுவதில் மன்னாதி மன்னன்.

அமெரிக்காவின் கலி போர்னியாவில் சங்கரா விண்வெளி ஆய்வுக்கூடம் இருப்பதைக் கண்டு, அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது இங் குள்ள சங்கரரின் ருத்ர தாண்டவ அடிப்படை யிலேயே ஒரு பெரிய விஞ் ஞான தத்துவம் இருப்பதாக அவர்கள் கூறக் கேட்டதாக எழுதியிருந்தார் (மறைந்த) மணியம் அவர்கள்.  (இதயம் பேசுகிறது 1.11.1981)

இப்படி ஒரு செய்தியை இதயம் பேசுகிறது இதழில் மணியன் எழுதியிருந்தது குறித்து சோமனூர் வழக் குரைஞர் ப.பத்மநாபன் எம்.ஏ.,பி.எல்., அவர்கள் அமெரிக்காவில் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத் துக்கு  எழுதிக்கேட்டிருந் தார். அது உண்மையல்ல என்று அவர்களுக்கு பதில் வந்துவிட்டது.

இத்தகவலை வழக் குரைஞர் மானமிகு ப.பத்ம நாபன் அவர்கள் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு 10.3.1983 நாளிட்ட கடி தத்தில் எழுதி யிருந்தார். அதனை அப்படியே உண்மை (15.4.1983 பக்கம் 23-24) இதழில் வெளியிட்டோமே!

புளுகினாலும் பொருத் தமாகப் புளுகுங்கடா, அட போக்கத்தப் பசங்களா! என்று உடுமலை நாரா யணகவி எழுதிய பாடல் தான் நினைவிற்கு வருகிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...