Tuesday, January 3, 2012

பகுத்தறிவுப் பாதை


பகுத்தறிவுப் பாதை

பகுத்தறிவாளர்கள் கூட்டத்தில் ஆசிரியர் கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியவை. தந்தை பெரி யாரின் மூட நம்பிக்கையை  அறவே ஒழித்தல் என்ற முக்கியமான செய்தியை ஆசிரியர் இன்றைய மாணவர் சமுதாயத் திற்கு வழி காட்டும் நெறியாகக் கூறினார்.

எனது குடும்பத்திலேயே இரண்டு பேரன்கள் முன்பெல்லாம் பள்ளியில் படிக்கும் வரை, தேர்வுகளுக்குப் போகும் முன்னர் பூசை அறையில், சாமிகளை கும்பிட்டு, நெற்றியில் குறிகளை இட்டு, அம்மாவிடம் ஆசிகளை வாங்கிக் கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் தற்போது சாமி கும்பிடுவதில்லை.

நெற்றியில் குறிகள் இடுவதில்லை. முரண்பட்ட மூடநம்பிக்கை என உணர்ந்து, நமது படிப்பு, நம்முடைய திறமையினாலும், மூளை உழைப்பினாலும் மட்டுமே தவிர, கோவிலுக்குப் போவதாலோ, தேர்வு சமயங்களில் மட்டும் ஆண்டவனை வேண்டுவதாலோ இல்லை என்பதை உணர்ந்து அறிவு பூர்வமாக சிந்தித்து, கோவிலுக்குச் செல்வது, நெற்றிக்கு இட்டுக் கொள்வது, கைகளில் கருப்பு, மஞ்சள், சிவப்பு நிறக் கயிறுகளைக் கட்டிக் கொள்வது போன்ற எல்லாம் விடுத்து பகுத்தறிவுப் பாதைக்கு வந்துவிட்டனர் என்றால் மிகை இல்லை! உள்ளன்போடு வாழ்த்தி வழியனுப்புவதை மட்டுமே விரும் புகின்றனர்!  பாடங்களையும் செவ்வனே படித்து முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.

முயற்சியுடன் படித்து சிறந்த முறையில் தேறி ஒரு பேரன் சிங்கப்பூரில் புகழ் மிக்க தேசிய பல்கலைக் கழகத்தில் பொறியியல் மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.

மற்றொரு பேரன் பொறியியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டில் பயில்கிறான்! இரு பேரன்களுமே மூட நம்பிக்கைகளை ஒழித்து பகுத்தறிவுப் பாதைக்குத் திரும்பி விட்டனர்!  பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைளை தன் வாழ்நாள் முழுவதும் இறுதி வரை பின்பற்றிய, இரண்டு பேரன்களுடைய தாத்தா மானமிகு மீனாட்சிசுந்தரம் இன்றிருப்பின் மகிழ்வடைந்திருப்பார்! 

சீரிய பகுத்தறிவு வாதியாகவே இறுதிவரை வாழ்ந்து நினைவில் நிற்கும் அவர் எனது வாழ்விணையர் என்று கூறிக் கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன்!  யாரும் யாரைக் கட்டாயப் படுத்தவில்லை!  அவரவர்கள் அறிவு காட்டும் நெறியில் நடக்கிறார்கள் என்பதே உண்மை!

ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதல் நெறிப்படி  கண்டிப்பாக பகுத்தறிவாளர்கள் மாநாடு நடத்தப்படல் வேண்டும்.  மாணவர், இளைய சமுதாயத்தினர் அறிவுப் பாதையில் நடந்திட மூடநம்பிக்கைகளை ஒழித்திட கோவில்களில் நடந்து கொண்டிருக்கும் அட்டூழியங்களை களைந்திட விழிப் புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

நாம் திட்டமிட்டு செயல் ஆற்ற வேண்டும். மூன்று நாள்கள் மாநாடு நாத்திகர் மாநாட்டை விட பல மடங்கு கூட்டத்தாருடன் அற்புதமாக நடத்தப்பட வேண்டும். மானமிகு மருத்துவர் சோம. இளங்கோவன் போன்ற அறிஞர்கள், நெறியாளர்கள் யாவரும் இம்மாநாட்டிற்கு வழிகாட்டுதல் வேண்டும்.

மூட நம்பிக்கை களை களைகின்ற மருத்துவரான அவர் எங்களுக்கும் வழிகாட்டியே!  அவருடைய தொண்டினை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வளர்க அவர் தொண்டு!  ஆசிரியரும், மருத்துவரும்உடல் நலம் காத்து என்றென் றும் பெரியார் வழிப் பாதையை எங்களுக்குத் தொடர்ந்து வழிகாட்டிகளாக நின்று உடல் நலத்தினைக் காத்து, ஆண்டுகள் பல வாழ்ந்திட எங்கள் உளம் கனிந்த வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்க பெரியார்!  வளர்க பகுத்தறிவு!  -
சித்ரா சுந்தரம்
விடுதலை வாசகர்

வீரமணி ஒரு விமர்சனம் நூலுக்குப் பாராட்டு!
தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்கட்கு வணக்கம்.

ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 78 ஆண்டுகள் பொது வாழ்வின் பல அரிய சேதிகளின் பதிவாக சோலை அவர்களால் தீட்டப்பட்ட வீரமணி ஒரு விமர்சனம்  என்ற ஏடு படித்தேன்.

திரு. சோலை அவர்களின் கட்டுரைகள் பல்லாண்டு காலமாக நாளிதழ்கள், கிழமை இதழ்கள் பலவற்றில் பயின்றிருக்கிறேன். வானில் தோன்றும் மின்னல் கீற்றாய் - சின்னச் சரவெடியாய் - மெல்ல வருடும் சாடல்களாய் இருந்ததுண்டு. ஆனால் அவரே கூறுவதுபோலே - எல்லைக் கோட்டைத் தாண்டி எடுத்தேன் - கவிழ்த்தேன் என்று எழுதியதாக எனக்கு நினைவில் இல்லை.

திரு. சோலை அவர்களின் ஏடு. அரிமா - நோக்கு போன்றதே - அடவிகளில் ஆரண்யங்களில் அலைந்து திரிகின்ற அரிமா - சில நூறு அடிகள் சென்றதும் - தன் தலையை மட்டும் திரும்பிப் பார்த்து. வந்த வழி உணர்ந்து - சிறிய அளவு நேரம் நின்று - மேலும் தொடர்ந்து செல்லுமே அது போன்றதே - வீரமணி ஒரு விமர்சனம்  என்ற ஏடு பல சேதிகள் என்னைக் கவர்ந்தன என்றாலும் சிலவற்றைக் கூறுவது நானும் ஏடு படித்தேன் என்பதை உறுதிபடுத்தவே ஆகும்.

1) வீரமணி என்பவர் திராவிட இயக்கப் பயணத்தில் எங்கோ வழிப் போக்கனாக இணைந்து கொண்டவர் அல்ல. (பக்.33)

2) பேராசிரியர் க. அன்பழகன் ஒரு முறை இப்படிச் சொன்னார். அரசியல் இயக்கம் தொடங்கக் காலம் கருதிக் காத்திருந்தோம். (பக்.38)

3) ஒரு போர் வீரனின் தோளில் தொங்குகின்ற துப்பாக்கியும் - வீரமணியின் தோளில் துவள்கின்ற துண்டும் ஒன்றுதான் (பக்.88).

4) பொதுவாக வீரமணியின் படைப்புகள் அனைத்தும் ஒரே தொகுப்பாக ஒரே களஞ்சியமாக வெளியிடப்பட வேண்டும். நூலகங்களில் இடம் பெற வேண்டும் அவருடைய படைப்புகள் ஆண்டுவாரியாகத் தொகுத்தால் தமிழகத்தில் திராவிட இயக்க வரலாறும் அதன் பின்னணியும் விளங்கும். இந்தப் படைப்புகள் தமிழகத்தின் இளைய தலைமுறைக்குத் தன்மான உணர்வு பெற்ற இளம்பிறைகளுக்கு ஓர் போர் வாளாகும்.
- கி. வெற்றிவேல் சுந்தராபுரம், கோவை


வன்மையாக கண்டிக்கிறோம்
மிழ் மண்ணில் சுயமரியாதை, பகுத்தறிவு, இன எழுச்சி, மொழி உணர்வு ஆகியவைகளை அதிகாலை திறந்து செயல்பட்ட முடிதிருத்து நிலையங்களும், மாலை வகுப்பென நடைபெற்ற பொதுக் கூட்டங்களும், செயல் வீரர்கள் திறந்து வைத்த வாசக சாலைகளும் தான் விதைத்தன.

அதனை வலுப்படுத்த நூலகங்கள் பயன்பட்டன. சூத்திரனுக்கு கல்வி தரக்கூடாது என்ற மனுநீதியை நிலைநாட்ட சேலத்து சீமான் இராஜாஜி இருமுறை பள்ளிகளை மூடினார். சுயமரி யாதை இயக்கத் தலைவர்கள், தொண்டர்கள் போராடி அநீதியைத் தடுத்து திராவிடர் ஆட்சியை அமைத்தனர்.

தமிழ்நாடு கல்விக் கடலில் கப்பல் ஓட்டி மகிழும் காலத்தில் ஆரியம் சூழ்ச்சி வலை பின்னி மீண்டும் ஆட்சியை பிடித்து சமச்சீர் கல்வியை அழித்திட முயன்றது. உச்சநீதி மன்றம் சூழ்ச்சியை முறியடித்தது. தளராத ஆரியம், மாணவர், ஆய்வாளர் மாற்றுத் திறனாளிகள் பயன்பெற கட்டப்பட்டு செயல் படும் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருக்குலைத்து தமிழ் மக்களின் கல்விக் கண்களை குத்திட முடிவு செய் துள்ளது.

நூலகங்கள், அறிவு உள்ளவர்கள் பயன்படுத்தி ஆய்வு செய்து மொழி, பண்பாடு வளர துணை செய்யும் அமைப்புகள். இந்த நூலகத்தை அமெரிக்க வெளியுறவு அமைச் சர் கிலாரி கிளின்டன் பாராட்டியதுதான் இம்முடிவுக்கு காரணமோ?

காரணம் எதுவாக இருப்பினும், இன்றைய முதல் அமைச்சர் (ஆரிய சிசு) எடுத்த முடிவு, தமிழ் மக்களுக்கு இருண்ட காலத்தை உருவாக்கும் ஆரிய நீதியின் அடிப்படை கொண்டது என்ற எங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தி, அறிஞர் அண்ணா நூற் றாண்டு நூலகம் தொடர்ந்து அதே இடத்தில் செயல்பட வேண்டும் என்றும், அதற்கு மாறான நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து எங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

(இத்தீர்மானம் 3.11.2011 அன்று நடந்த கூட்டத்தில் ஒருமனதாக பலத்த கரவொலிக் கிடையே நிறைவேற்றப்பட்டது).
- கி. சத்தியநாராயணன் செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம் சென்னை - 600 007

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...