Thursday, January 5, 2012

போதுமா விடுமுறை நாள்கள்?

2012 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாள்கள் பட்டியலை மத்திய அரசும் மாநில அரசுகளும் வெளியிட்டுள்ளன. இப்பட்டியலின்படி தமிழ்நாடு அரசு 25 விடுமுறை நாள்களை அறிவித்துள்ளது. 

மேற்கு வங்காளம் 24, கேரளா 23, கர்நாடகா 21, மகாராஷ்டிரா 19 மற்றும் ஆந்திரபிரதேசம் 17 விடுமுறை நாள்களை அறிவித்து உள்ளன.

தமிழ்நாட்டு அரசு ஊழியர்களுக்கு  விழாக்களுக் கான இந்த 25 அரசு விடுமுறை நாள்களுடன், 53 ஞாயிறு, 52 சனிக்கிழமைகளும் விடுமுறையாகும். இதுபற்றி மாநில அரசு ஊழியர்கள் சிறுவிடுப்பு 12 நாள்களும், ஈட்டிய விடுப்பு 30 நாள்களும், மருத்துவ விடுப்பு 15 நாள்களும், விருப்பவிழா விடுப்பு 2 நாள்களும் ஆக மொத்தம் 189 நாள்கள் விடுமுறை அனுபவிக்கலாம். 

பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக இந்த அரசு விடுமுறை நாட்களைக் குறைக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.அலுவலர் நரேஷ்குப்தா கூறியுள்ளார். 

1980 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் வார விடுமுறையாக இருந்தது. அரசு அலுவலர்கள் வாரத்தில் 6 நாள்கள் பணியாற்றினர். 1980 களில் வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாள்களை வாரவிடுமுறை நாள்களாக அறிவித்து, வாரத்தில் 5 வேலை நாள்கள் என்ற நடைமுறை ஏற்பட்டது. இதனைத் தமிழ்நாடு அரசும் பின்பற்றியது.

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கடந்த இரண்டு ஊதியக் குழுக்களும் கூட இவ்வாறு அரசு விடுமுறை நாட்கள் அதிகரித்து வருவதைப் பற்றி கவலை தெரிவித்து உள்ளன. 

மதப் பண்டிகைகளுக்காக விடுமுறை அறிவிக்கும் வழக்கத்தைக் கைவிட்டு, 3 நாள்கள் மட்டும் தேசிய விடுமுறை நாள்களாக அறிவித்துவிட்டு, மற்ற மதப் பண்டிகை நாள்களில் அந்தந்த மதத்தைச் சார்ந்த மக்கள் விடுப்ப விடுப்பு எடுத்துக் கொள்ளும் நடைமுறையை அறிமுகப்படுத்த அவை பரிந்துரைத்திருந்தன.

இவ்வளவு அதிக விடுமுறை நாள்களை அனுபவிக்கும் அரசு ஊழியர்கள் தினமும் 6-7 மணி நேரம்தான் வேலை செய்கின்றனர். அந்த நேரத்திலும், உணவு, தேனீர் இடைவேளை என்பவை போக அவர்கள் வேலை செய்யும் நேரம் மிகக் குறைவாகவே இருக்கிறது. இதனால் ஏழைகளும், நடுத்தர வருவாய்பிரிவு மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று முன்னாள் அய்.ஏ.எஸ். அலுவலர் எம்.ஜி.தேவசகாயம் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...