ஃபிளமிங்கோ பறவை ஏன் சிவப்பாக இருக்கிறது ?
ஃபிளமிங்கோ பறவைகள் அதிக அளவில் நீல, பச்சை கடற்பாசியை உண்பதால் சிவப்பாக இருக்கின்றன. கூனிறால் மீன்களையும் அவை உண்ணும் என்றாலும், பறவையின் நிறம் கடற்பாசியிலிருந்து வருகின்றது. நீல, பச்சை கடற்பாசி என்ற பெயர் இருந்தாலும், கடற்பாசி சிவப்பு, பழுப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிறங்களிலும் இருக்கிறது. இப்பறவை வண்ணம் மிகுந்ததாக இருப்பதாலேயே அதற்கு flamenco என்ற பெயர் இடப்பட்டது. தீ (flame) என்ற லத்தீன் சொல்லில் இருந்து வந்தது இப்பெயர்.
ஃபிளமிங்கோ பறவை இனத்தில் நான்கு வகைகள் உள்ளன. ஒரு கோடி ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழும் இப்பறவை இனம் அய்ரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளில் வாழ்கின்றன. இப்போது இந்த பறவையினம் ஆப்ரிக்கா, இந்தியா, தென் அமெரிக்கா, தெற்கு அய்ரோப்பிய நாடுகளின் மக்கள் நடமாட்டம் அதிகமற்ற பகுதிகளில் வாழ்கின்றன. இப்பறவையின் அனைத்து இனங்களும் ஒரே ஒரு இணையைப் பெற்றுள்ளவையாகும். ஓராண்டில் ஒரே ஒரு முட்டையை அது சமப்படுத்தப்பட்ட மண்மேட்டில் இடுகிறது. இணைப் பறவைகள் இரண்டுமே குஞ்சு பொரித்த முட்டையை மாறி மாறி அடைகாக்கின்றன. இரண்டு பறவைகளும் தங்களின் தொண்டையில் இருந்து, அடர் சிவப்பு நிறம் கொண்ட, ஊட்டச்சத்து நிறைந்த பாலைச் சுரக்கின்றன. குஞ்சின் முதல் இரண்டு மாத காலத்திற்கு இந்தப் பால்தான் அதற்கு ஊட்டப்படுகிறது. உலகில் பால்சுரக்கும் இரண்டே இரண்டு பறவைகளில் ஃபிளமிங்கோ ஒன்று; மற்றது புறாவாகும். முட்டையிட்டு குஞ்சு பொரிக்காத ஃபிளமிங்கோ பறவைகளைப் பிடித்து அடைத்து வைத்தால், ஃபிளமிங்கோ குஞ்சுகளின் சத்தத்தைக் கேட்டால் அவற்றின் தொண்டையில் இருந்து தானாகவே பால் சுரக்கும்.
குஞ்சுகள் தங்களின் கூட்டை விட்டு வெளியே வந்த பிறகு, பெரும் கூட்டமாக வாழ்கிறது. இக்கூட்டத்தில் 30,000க்கும் மேற்பட்ட பறவைகள் இருந்தாலும், குஞ்சுகளுக்கு அவற்றின் பெற்றோர் மட்டுமே உணவு ஊட்டும். குஞ்சின் குரலில் இருந்து அவை அடையாளம் கண்டு கொள்கின்றன. ஒரு ஃபிளமிங்கோ குடும்பம் பேட் (pat) என்று அழைக்கப்படுகிறது. `ஃபிளமிங்கோ பறவை தனது தலையை மேலிருந்து கீழாக வைத்துக் கொண்டு உண்ணுபவை. மற்ற பறவைகள் போல அல்லாமல், இவை தங்கள் உணவை திமிங்கிலங்கள், சிப்பி மீன்களைப் போலவே வடிகட்டிக் கொள்கின்றன. அவற்றின் அலகுகளில் வரிசையான அடுக்குகளாக உள்ள தகடுகள் நீரை வெளியேற்றி உணவை உண்ண உதுவுகின்றன. 0.05 மி.மீ. (அங்குலத்தில் 50 இல் ஒரு பங்கு) அளவுக்கும் குறைவான ஒற்றை செல் தாவரங்களையும் வடிகட்டும் அளவுக்கு இளம் பறவைகளின் வடிப்பான் அடர்த்தியாக இருக்கும். தனது அலகின் மூலம் நீரைத் தள்ளும் ஒரு பம்பைப் போல (Pump) அதன் நாக்கு செயல்படுகிறது. ஃபிளமிங்கோ பறவையின் நாக்கு உண்பதற்கு சுவை மிகுந்தது என்று பிலினி (Pliny the Elder) என்ற மூத்தவர் பரிந்துரைத்துள்ளார்.
டால்ஃபினைப் போலவே, ஒரு காலின் மீது நின்று கொண்டு, தனது உடலின் ஒரு பக்கத்தைக் கொண்டு மட்டும் ஃபிளமிங்கோக்கள் தூங்குகின்றன. அதன் உடலின் தூங்காத மற்றொரு பகுதி தன்னை வேட்டையாடக் கூடிய விலங்குகளில் இருந்து தற்காத்துக் கொள்ள இயன்ற விழிப்புணர்வுடன் இருக்கும்.
ஃபிளமிங்கோக்கள் அய்ம்பது ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. அதிக அளவு சாதா உப்பும், சோடா உப்பும் உள்ள, கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் உள்ள ஏரிகளின் வரவேற்பற்ற பகுதிகளில் அவை வாழ்கின்றன. இந்த ஏரிகளின் நீரை வேறு விலங்குகளால் அருந்தவும் முடியாது; அந்த நீரில் எந்தப் பயிறும் வளராது. அவற்றின் முக்கிய எதிரிகளே விலங்குகள் சரணாலயக் காப்பாளர்கள்தான்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)
No comments:
Post a Comment