Monday, January 9, 2012

உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா?


பிரிவினையைத் தூண்டுவோர் யார்? பூணூல் போட்டுக்கொண்டு திரியும் நீங்களா - நாங்களா? பார்ப்பன எடுபிடிகளின் முகத்திரையைக் கிழித்தார் தமிழர் தலைவர்
உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? என்ற தலைப்பில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். உடன்: திராவிடர் வரலாற்று ஆய்வு  மய்யத் தலைவர் பேராசிரியர் அ. இராமசாமி, திராவிடர் வரலாற்று ஆய்வு  மய்ய செயலாளர் முனைவர் ந.க. மங்களமுருகேசன், கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோர் உள்ளனர். (சென்னை  பெரியார் திடல் - 8.1.2012)
சென்னை, ஜன.9- பிரிவினையைத் தூண்டுவோர் யார்? இந்தியாவை உடைப்பவர்கள் யார்? ஜாதியின் சின்னமான பூணூலை அணிந்துகொண்டு திரியும் நீங்களா? நாங்களா? என்று கேட்டார்-திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
உடையும் இந்தியாவா? ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் எனும் தலைப்பில் ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் ஆகியோரால் எழுதி வெளியிடப்பட்ட நூலின் ஆரியத்தன முகத் திரையைக் கிழிக்கும் நோக்கில் திராவிடர் கழகத்தின் சார்பில் சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் நேற்று மாலை சென்னைப் பெரியார் திடலில் உரையாற்றினார்.
அவர்தம் உரையில் குறிப்பிட்டதாவது:
திராவிடம் என்பது ஒரு புரட்டு என்று ஒரு காலத்தில் சொல்லிக்கொண்டிருந்தனர். இப்பொழுது ஆரியமும் புரட்டு என்று சொல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
கிறித்தவர்கள்தான் இந்த ஆரிய-திராவிடர் என்ற புரட்டை உருவாக்கினார்களாம்! மனுதர்மம், கிறித்தவர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன் உருவாக்கப்பட்டதா? வெள்ளைக்காரர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததற்குப் பிறகு எழுதப்பட்டதா?
அபிதான சிந்தாமணி எனும் களஞ்சியத்தில் கூறப் பட்டுள்ள 56 தேசங்களுள் திராவிடம் என்பதும் ஒன்றாக உள்ளதே. ருக் வேதத்தில் திராவிடர் வருகின்றனரே.
இவர்களின் குருநாதரான கோல்வால்கர் ஆரியம் பற்றிப் பேசவில்லையா? வருணாசிரமத்தையும் ஜாதி யையும் நியாயப்படுத்திப் பேசவில்லையா?
பி.டி.சீனிவாச அய்யங்கார் தமிழர் வரலாறு எனும் நூலில் திராவிடர் பற்றி கூறப்பட்டுள்ளதே என்ற வினாக்களைத் தொடுத்தார் திராவிடர் கழகத் தலைவர்.
திருக்குறளைப் பற்றி ஆர்.எஸ்.எஸ்.ஸின் குருநாதரான கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸின் வேதநூலான ‘BUNCH OF THOUGHTS’ எனும் நூலில் என்ன குறிப்பிட்டுள்ளார்?

திருக்குறளில் நாம் காண்ப தென்ன? நாடெங்கும் அறிமுகமான நான்கு வித வாழ்க்கைமுறை (சதுர் வித புருஷார்த்தம்) அதில் விஷய மாகக் கூறப்பட்டுள்ளது. மோட் சத்தைப் பற்றிய அத்தியாயத்தை மட்டும் முன்னால் வைக்கப்பட்டுள் ளது. திருக்குறள் சிறந்த ஹிந்துக் கருத்துக்களைத் தூய ஹிந்து மொழியில் எடுத்துக்கூறும் ஹிந்து நூல் ஆகும் என்று கோல்வால்கர் எழுதியுள்ளார்.
அதே கருத்தை வேறு சொற்களில் இந்த நூலில் எழுதியுள்ளனர்.  குறள் பல இடங்களில் புராணச் செய்தி களையும் இதர வேத மரபு நூல்கள் சார்ந்த செய்திகளையும் ஹிந்து தெய்வங்கள் குறித்துக் கூறு கிறது.
திருக்குறள் முன் வைக்கும் சந்தேகமற்ற ஹிந்து வாழ்வியலை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று இவர்கள் எழுதியுள்ளனர் என்றார். இவர்கள் யார்? கோல்வால்கரின் சீடர்கள்தானே. பச்சையான ஆர். எஸ்.எஸ். காரர்கள்தானே என்று. இந்நூலாசிரியர்களின் உண்மை உருவத்தை வெளிப்படுத்தினார் திராவிடர் கழகத் தலைவர்.
வரலாற்றைப் புரட்டுவதிலே ஆர். எஸ்.எஸ். காரர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவா வேண்டுமா? பி.ஜே.பி. மத்திய ஆட்சியில் இருந்தபோது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கவில்லையா?
ஓர் ஆண்டு முழுவதையும் சமஸ் கிருத ஆண்டு என்று அறிவித்து கோடிக்கணக்கான ரூபாய்களை அந்தச் செத்த மொழிக்காக ஒதுக்க வில்லையா?
சிந்து சமவெளி நாகரிகம் திராவி டர் நாகரிகம் அல்ல; ஆரியர் நாகரிகம் என்று கூறி கணினி மூலம் எருதைக் குதிரையாக்கவில்லையா?
இவர்களுக்குத் தேவைப்பட்டால் ஆரியர்-திராவிடர் பேசுவார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். உண்மையிலே இந்தியாவை உடைப்பவர்கள் கிறித்தவர்களோ, இஸ்லாமியர்களோ, சிறுபான்மை யினரோ அல்ல. ஜாதி வாதம் பேசும் இந்தக்கூட்டத்தினர்தான்.
என் முதுகு வெறும் முதுவாக இருக்கும்போது உன் முதுகில் மட்டும் ஏன் பூணூல்?
பூணூல் என்பது ஜாதியின் பிரிவினையின் சின்னம்தானே? பிரி வினையைத் தூண்டுவது நாங்களா? நீங்களா? என்ற வினாவுக்குப் பதில் என்ன? இந்த நூலை நாங்கள் ஒன்றும் காசு கொடுத்து வாங்க வில்லை. மதிப்புரைக்காக அனுப்பி வைத்தனர். அதற்காகத் தான் இந்தக்கூட்டம். இவ்வளவுப் பெரிய புத்தகமாக இருக்கிறதே என்று நினைக்காதீர் கள். இது வெறும் பலூன். இதனை வெடிக்கச் செய்ய குத்தூசி கூடத் தேவைப்படாது. சின்ன குண்டூசியே போதுமானது என்று குறிப்பிட்டார். (முழு உரை பின்னர்)
முதல் நாள் சொற்பொழிவு
சென்னை, ஜன.9-உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? என்ற தலைப்பில் முதல் நாள் சொற்பொழிவு திராவிடர் கழகம் சார்பில் 8.1.2012 அன்று இரவு 7 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத் தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி
இக்கூட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் இணைப்புரை வழங்கினார். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் முனைவர் ந.க. மங்களமுருகேசன் கூட்டத்திற்கு வந்திருந்த அனை வரையும் வரவேற்றுப் பேசினார். திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர்  பேராசிரியர் அ.இராமசாமி தலைமையுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.  திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பி னர் பொன்னேரி பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
இச்சிறப்புப் பொதுக்கூட்டத்திற்கு ஞாயிற்றுக் கிழமையையும் பொருட்படுத் தாது ஏராளமானோர் வந்திருந்திருந் தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...