கருத்துப் பேழை
பேராசிரியர் முனைவர் நம். சீனிவாசன்
தந்தை பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் தமிழர்களின் கரங்களில் தவழ்கிறது. தலைவர் வீரமணி 1962ஆம் ஆண்டு விடுதலை பொறுப்பேற்கிறார். 1963 முதல் இடைவிடாது பிறந்த நாள் மலரினை வெளியிட்டு வருகின்றார். ஆசிரியர் வீரமணியின் முயற்சியில் கருத்துக் குவியலாய், தத்துவப் பெட்டகமாய், வரலாற்றுத் திரட்டாய், பாதுகாக்கப்பட வேண்டிய ஆவண மாய், அறிஞர் பெரு மக்களின் எழுத் தோவியமாய் பிறந்த நாள் மலர் ஒவ் வோர் ஆண்டும் புதுப்புதுப் பொலி வுடன் மலர்கின்றன.
இது தலைவர் உருவாக்கிய 49ஆவது மலர்.
49 மலர்களைத் தொகுத்துப் பார்த்தால் பிரமிப்பு ஏற்படும். படித்துப் பார்த்தால் வீரியம் புரியும்.
பிறந்த நாள் மலர் வெளியிடும் வர லாற்றைத் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள், அய்யாவின் அடிச்சுவட் டில்... நூலில் விவரித்திருக்கிறார். பெரியாரின் பிறந்த நாள் கட்டுரைகள் முனைவர் பட்ட ஆய்வுக்குரிய அள விற்கு கனமானவையாகும் என்று பெருமை பொங்க எடுத்துரைக் கின்றார்.
133ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 288 பக்கங்களை உடையது.
பாயாசத்தில் கிடைத்த முந்திரிப் பருப்புகள்
ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு முழுப் புத்தகத்திற்குரிய கருத்துக்கள் செறி வாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன.
தந்தை பெரியாரின் ஓவியங்களும், ஒளிப்படங்களும் மலருக்கு மெரு கூட்டுகின்றன.
ஆங்காங்கே பளிச்சிடும் பெரி யாரின் பொன்மொழிகள் சிந்தைக்கு விருந்தளிக்கின்றன.
மலர் முழுதும் கொட்டிக் கிடக் கின்ற பெட்டிச் செய்திகள் பாயாசத் தில் கிடைத்த முந்திரிகளாய்ச் சுவை கூட்டுகின்றன. வழுவழுப்பான தாள்களில் வளமான கருத்துக்கள் இறைந்து கிடக்கின்றன.
வானவில்லின் அத்தனை நிறங்களும் மலரில் நிறப்பிரிகை நடத்துகின்றன. மாற்றுக்கட்சியினர், சனாதனிகள், புராணிகர்கள், பிற் போக்குவாதிகள் எழுப்பிய வினாக் களுக்கெல்லாம் ஆணித்தரமாய் விடை அளித்தவர் தந்தை பெரியார். ஆனால் பெரியார் தொடுத்த வினாக்களுக்கு இதுவரை எவரும் பதில் அளித்ததில்லை என்று தலைவர் வீரமணி பொதுக் கூட்ட மேடையில் பெரியாரைப் படம் பிடித்துக் காட்டு வார். 133ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில் முதல் கட்டுரை, தந்தை பெரியார் தொடுக்கும் வினாக்கள் என்பதாகும்.
யார் தமிழர்? யார் துரோகி?
யார் தமிழர்கள்? யார் தேசத் துரோகி?
எது சுதந்திரம்? எது தகுதி?
யார் மைனாரிட்டி? யார் மெஜாரிட்டி?
ஜாதி ஒழிந்து விட்டதா? கோவில் சமத்துவமா? என்று பெரியார் எழுப்பிய வினாக்களை, குடியரசு, விடுதலை இதழ்களின் பதிவிலிருந்து தேதி - மாதம் - ஆண்டு முதலிய குறிப்புக்களோடு முதல் கட்டுரை கம்பீரமாய் மலரை அலங்கரிக்கின்றது.
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் பெரியார் பிறந்த நாள் மலரில் கட்டுரை தீட்டுவார். அவருடைய கட்டுரை பட்ஜெட் போல அமைந்திருக்கும். செயல் திட்டங்களை அறிவிப்பார்; சென்ற ஆண்டு திட்ட மிடப்பட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டிருந் தால் சுட்டிக் காட்டிப் பாராட்டுவார். தேங்கி நிற்கும் பணிகளையும் நினைவூட்டி செயல் முடிக்க சூளுரை செய்வார்.
பிறந்த நாள் மலர்கள் 1977லிருந்து 2011 வரை 35 மலர்களில் தலைவர் வீரமணி அவர்களின் கட்டுரையை எடுத்து, அவர் அறிவித்த திட்டங்களைப் பட்டியலிட்டு, அதில் செயல்படுத்தப்பட்டவை - செயல்படுத்தாமல் நிலுவையில் உள்ளவை என்று பிரித்துப் பார்த்தால் 96 சதவீதம் நிறைவேற்றப்பட்டிருப்பதைக் கண்டு உள்ளம் பூரிக்கலாம்.
புதுயுகம் படைப்போம்!
புதுயுகம் பப்போம் எனும் தலைப்பில் தலைவர் வீரமணி வடித்த கட்டுரை 133ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரை அலங்கரிக்கின்றது.
உண்டி, உறையுள் மட்டும் பெற்று கொள்கை பரப்பிட ஆயிரம் இளைஞர் களின் பாசறை உருவாக்கம், வறுமையில் வாடும் இருபால் இளைஞர்களுக்கு கணினி - இணைய தள பயிற்சிகள் நல்கல், மாணவர்களிடம் ஒழுக்கமும், மனித நேயமும் தழைக்க பெரியார் தலைமைத் தத்துவ பயிற்சிப்பட்டறை நடத்துதல், பல்வேறு முறைகளில் பகுத்தறிவுப் பிரச்சாரம், திராவிடன் புத்தக நிலையம் எனும் பெயரில் புதிய இணைய தளம், மேலை நாடுகளில் பரவலாகக் காணப்படும் ஒலிப்புத்தகங்கள் பெரியா ரின் கருத்துக்களைத் தாங்கி தமிழகத் திலும் விற்பனை, ஆப்பிள் ஐ ஞடின, ஐ-யீயன கருவிகளில் விடுதலை நாளிதழ், பெரியார் கையெழுத்திலே பெரியாரின் டைரிக் குறிப்புகள் பெரியார் பேருரைகள் ஆயிரம் பக்கங்களில் வெளியீடு, பன்மொழிகளில் பெரியார் பன்னாடுகள் நோக்கிப் பயணிக்கும் பெரியார் என்கின்ற புது உத்தி, முதலியனவற்றை அறிவித்து பெரியார் பிறந்த நாளில் இயக்கத்திற்கும் தோழர்களுக்கும் ஓர் உத்வேகத்தை புது முறுக்கினை, குருதி ஓட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர்.
உலக நாத்திகர் மாநாடு
திருச்சியில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாடு, ஆந்திராவில் வெற்றி நடைபோட்ட பெரியார் திரைக்காவியம், வைக்கத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற முப்பெரும் விழா முதலியனவற்றையும் தமிழர் தலைவர் அவர்கள் மலரில் சுட்டிக் காட்டியதோடு அய்ரோப்பிய நாடுகளில், வளைகுடா நாடுகளில், கிழக்காசிய நாடுகளில் பூரிப்புடன் நடைபெற்ற பிரச்சாரக் களங்களைச் சொல்லோவி யமாய்த் தீட்டியிருக்கின்றார்.
புதுயுகம் படைப்போம் எனும் தலைப் பில் திராவிடர் கழகத் தலைவர் எழுதும் போது இயக்கத் தன்மையையும், தோழர் களின் நிலையையும் உறுதிபட தெளிவாய் அறிவிக்கின்றார். வீரமணியின் எழுத்தைப் பாருங்கள்.
மிகவும் கடினமான, கசப்பான கொள்கைகளையும், எவராலும் எளிதில் ஏற்று விட முடியாத சமூகப் புரட்சி அணுகு முறைகளையும், சுயநலத்தையும் ஏன் சுய விளம்பரத்தையும்கூட தியாகம் செய்தோ, மறுத்தோ தொண்டாற்றும் தூய இயக்கம் மானம் பாராது, நன்றி எதிர்பாராது, பதவி ஏற்காது, புகழ் நோக்காது, லாபங்களை அடைய எண்ணாது எந்தவித தன்னல மறுப்புக்கும் எப்போதும் தயாராகும் பாசறை!
கறுப்பு மெழுகுவத்திகள்
பெரியார் மொழியில் சொந்த சோற்றைத் தின்று கொண்டு சிறைகள், அடக்கு முறைகள், இருட்டடிப்புகள், இமயம் போன்ற எதிர்ப்புகள் இவைகளை தமது வாழ்க்கை முறையாக்கி, உண்மைத் துறவிகளாகவும், கட்டுப்பாடு காக்கும் இராணுவ வீரர் களாகவும், கடைசி வரை தம்மை எரித்துக் கொண்டு அழித்துக் கொள்வதற்கும் எப் போதும் தயார் என்று பிரகடனப்படுத்தக் கூடியவர்களாக உள்ள கறுப்பு மெழுகு வத்திகள்.
தற்கொலைப் பட்டாளங்களாகி லட்சியப் பதாகையை எப்போதும் சுமக்கும் கொள்கைப் போர் வீரர்களாக, எதற்கும் அஞ்சாது, சோக சுனாமிகள், அவதூறு அடை மழைகள், பொறாமையாளர்களின் பொசுக்கும் தீப்பிழம்புகள் முதலானவற்றைக் கண்டு அதை எதிர்கொள்ளும் ஆற்றல் மறவர்களைக் கொண்டதுதான் சுய மரியாதை வீரர்களைக் கொண்ட பாசறை!
என்று கழகத் தலைவர் உறுதிபட அறிவிக்கின்றார். சுயநலமே வாழ்க்கை என்றாகி விட்ட சூழலில், வானளாவிய அதிகாரமும், கோடி கோடியாய் பணமும், கிறங்க வைக்கும் புகழ்ப் போதையும், விளம்பர வெளிச்சங்களும், காமதேனுவாய் அள்ளி வழங்கும் அரசியல் கட்சிகளை விடுத்து, கிராமங்கள் - நகரங்கள், படித்த வர்கள் - படிக்காதவர்கள், இளையவர்கள் - முதியவர்கள் என்று லட்சக்கணக்கான தொண்டர்கள் குடும்பம் குடும்பமாய் திராவிடர் கழகத்தில் பிணைந்திருப்பது வியப்பானதுதான். பெரியாரின் கொள் கையும், வீரமணியின் அணுகுமுறையும் இந்தச் சரித்திரச் சாதனையை நிகழ்த்தி யிருக்கிறது. பொது நல உணர்வு உள்ளத் தில் பூக்காமல் திராவிடர் கழகத்தில் இணைவது சாத்தியமில்லை. சீர்திருத்த வேட்கை பிரவாகம் எடுக்காமல் அய்யா வின் தொண்டராய் வலம் வர வாய்ப்பில்லை.
புதுயுகம் படைப்போம் என்ற தலைவர் வீரமணியின் கட்டுரை செறி வானது. பெரும் ஆலமரம் சிறுவித் துக்குள் புதைந்து கிடப்பது போல் தொகை தொகையாய்ச் செய்திகள் கட்டுரையினுள்ளே அடுக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. மனிதகுல வளர்ச் சியின் வரலாற்றை எட்டே வரிகளில் ரத்தினச் சுருக்கமாய் வரைகிறார் வீரமணி. முன்பு வேட்டையாடி உண்ட மனிதகுலம் விவசாயத்தில் நிலைத்து பிறகு தொழில் புரட்சியால் தோள் தட்டி, மின்னணு யுகத்தால் மேலோங்கிப் பாய்ந்து, தகவல் தொழில் நுட்பப் புரட்சியால் தழைத்தோங்கிய நிலையில், நுண்ணுறிவு யுகத்தை நோக்கி வேகமாக நகருகிறது! என்று கால சுழற்சியைத் தம் எழுதுகோலால் வேகமாக தீட்டிச் செல்கின்றார்.
வீரமணி அய்ம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தலைவராக, பத்திரிகை ஆசிரியராக, பேச்சாளராக, வழக்கறிஞராக, சிறந்த நிர்வாகியாக, போராளியாக, சிந்தனையாளராக மிளிர்பவர். வீரமணி சிறந்த எழுத் தாளர். அவருடைய நூல்கள் விற்பனை யில் சாதனை படைத்திருக்கின்றன. பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. அவருடைய எழுத்தாற்றலுக்கு இக்கட்டுரையிலி ருந்து ஒரு சான்று. உருவத்தில் பெரியார் இல்லை என்பது அவர்களது பழுதான பார்வையாகும். மருந்து கண்டுபிடித்தவர்கள் மறைந்து விட்டதாலேயே மருந்துகள் பரவாமல் இருந்ததில்லை இந்த எழுத்துக்கள் யாருக்கு வாய்க்கும்? கருத்து சுகமாய் காதில் விழுகிறது; பாமரனுக்கும் எளிதில் புரிகிறது. எதிரியின் எண்ணத் திற்கு ஒரு தாக்குதல்; அவர்களின் அறியாமையை விரட்டிட ஓர் எடுத்துக் காட்டு. உவமையின் மூலம் ஒரு தெளிவான விளக்கம். இத்தனையும் மூன்று வரிகளுக்குள்ளே அடக்கம்.
நாத்திகன் வெற்றி
அக்னிஹோத்திரம் தாத்தாச்சாரி யாரின் எழுத்தும், உலகின் மிகப் பெரிய மத குருவான போப் அவர்கள் ஸ்பெயின் தேசத்தில் நிகழ்த்திய உரையும் நாத்திகத்தின் வெற்றியைப் பறைசாற்று கின்றன என்று குறிப்பிடும் வீரமணி அவர்கள், கருஞ்சட்டைப் படை மாநாட்டை, அண்ணாவின் மரண சாசனத்தை, கடலூர் மாநாட்டை, வர லாற்று நிகழ்வுகளை இணைத்து கட்டு ரையை ஓர் ஆவணமாக்கியுள்ளார். வீரமணியின் கட்டுரை மலருக்குப் பெருமை சேர்க்கின்றது. மதிப்பைக் காட்டுகின்றது. வாசகர்களின் அறிவை விரிவு செய்கின்றது. கழகத் தோழர் களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றது. படிக்க வேண்டிய கட்டுரை. பாதுகாக்க வேண்டிய கட்டுரை.
வீரமணி ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கின்றார். சமூகநீதி விருது, டாக்டர் பட்டம், பாரத்ஜோதி விருது, பேரறிவாளர் விருது, இனமானப் போராளி விருது முதலியன தலைவரை நாடி வந்து ஒட்டிக் கொண்ட விருது களாகும். 2011 பிப்ரவரி 25ஆம் தேதி கோவை கே.ஜி. அறக்கட்டளை சார்பில் ஆற்றல்மிகு இந்தியர் விருது அளிக் கப்பட்டது. அவ்விழாவில் வாசித்து அளிக்கப்பட்ட கவிதை சொல்லால் செதுக்கப்பட்ட சிற்பம். கற்பனை கலவா கலைப் படைப்பு.

(வளரும்)
No comments:
Post a Comment