நெய்வேலி - திராவிடர் கழக சாதனை ஓட்டத்தில் ஒரு மைல் கல் நெய்வேலியில் திராவிடர் கழகம் நடத்திய பேரணி? (5)
முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
மனுவைக் கொடுத்துவிட்டோம் என்று சும்மா இருந்து விடவில்லை தமிழர் தலைவர். 30.9.1989 அன்று நெய்வேபலியில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்:
தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது; பொருளாதாரத் துறையிலே, திட்டங் களிலே, சமுதாயத் துறையிலே தமிழ கம் வஞ்சிக்கப்படுகிறது என்றவர் இங்கே இவ்வளவு பிரச்சினை இருக்கின்றது; இதை எல்லாம் பிரதமரிடத்திலே எடுத்துச் சொல்லி காபினெட் அமைச்சரவைக் கூட்டம் நடக்கும்பொழுது வாதாடக் கூடிய திறமை தமிழகத்திலே இருந்து போன டில்லி அமைச்சர்களுக்கு உண்டா? எனக் கேள்வி எழுப்பினார்.
தேசியம், தேசியம் என்று பேசு கின்ற திருவாளர் தேசியம், கதர்ச் சட்டைக் கனவான்களைப் பார்த்துச் சொன்னார்: இந்த நாட்டிலே தேசியம் என்று சொன்னால் தமிழனுடைய உரிமையை அடகு வைப்பதுதானே தேசியம் என்கின்ற தவறான கணக்கு இருக்கின்றதே. மற்றவர்களுக்கு எல்லாம் உணர்ச்சி வருகின்ற நிலை யிலே, காங்கிரஸ் நண்பர்களுக்கு உணர்ச்சி வராதா? இங்கேஇருக்கிற எங்களுடைய பிள்ளைகளுக்கு வேலை வேண்டும் என்று கேட் கிறோம்; இன்ன கட்சிக்காரருடைய பிள்ளைகளுக்குக் கொடுங்கள் என்றா கேட்கிறோம்? அல்ல, அல் லவே அல்ல.
ஏன் கேட்கிறோம் ராயல்டி, என்ப தற்கு விளக்கமும் அளித்தார்.
எந்தக் கட்சிக்காரராக இருந்தா லும் பயப்படுவார்கள்; எந்த ஆட்சியாள ரும் இந்தக் கொள்கையை ஒப்புக் கொண்டால் அதற்குப் பயன் உண்டு என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதை எடுத்து அவர்களே கேட்கக் கூடிய நிலையிலே இருக்கிறார்கள். அந்த அளவிற்கு நாம் போராடிக் கொண்டு, சத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தால் ஒழிய வழி கிடையாது. எனவே நரிமணத்திற்கு, நெய்வேலிக்கு என்று ராயல்டி தொகை கேட்கின்றோம். ஈட்டுத் தொகை என்று சொன்ன உடனே நல்ல வாய்ப்பாகக் கடந்த தேர்தலிலே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்தது.
தி.மு.க. வெற்றி பெற்று உலகத்தினுடைய ஒப்பற்ற முதல்வர் களிலே ஒருவர் ; செயல் திறன் மிக்க முதல்வர், எதையும் விரைந்து முடிவெடுக்கக்கூடிய முதல்வர் என்று எதிரிகளால் கூட ஒப்புக் கொள்ளப் பட்டு, புகழப்படக்கூடியகலைஞர் அவர்களாலே உள்ளஆட்சி வந்த காரணத்தால், அவர் முதல் முதலாக டில்லி போனபோது அவர் முதலாவது எடுத்து வைத்த கோரிக்கையிலே ஒன்று டில்லியில் பேசிய பேச்சு இந்த ராயல்டியைப் பற்றிய பிரச்சினை. எங்களுக்கெல்லாம் பெரிய மகிழ்ச்சி.
பெருத்த வருவாய் வருவதெல் லாம் மத்திய அரசுக்கு! உங்களுக்குத் தெரியும்; படித்தவர்கள் விவரம் தெரிந் தவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் மாறிய அரசு டில்லியைப் பார்த்துப் பிச்சை எடுத்துத் தான் ஆகவேண்டும். இன்றைய அரசியல் அமைப்பிலே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எவ்வளவு பெரிய புரட்சியான கட்சி ஆட்சிக்கு வந்தா லும் கூட டில்லியைப் பார்த்து பிச்சை போடுங்கள்; பிச்சை போடுங்கள் என்று டில்லியிடத்திலே போய்க் கேட்க வேண்டிய நிலையிலேதான் இந்த அமைப்பையே அவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
அந்த நேரத்தில்தான் உரிமைக்குக் குரல் கொடுக்க வேண்டும் என்ற அளவிலே அவர்கள் உரிமைக் குரல் கொடுத்ததைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். அதிலே சில கொள்கை அளவிலே ஒப்புக் கொள்ளப்பட்டிருக் கிறது; இதைச் சொன்னால் மட்டும் போதாது. இது நடைமுறைக்கு வந்தாக வேண்டும். அவசர அவசரமாக வந்தாக வேண்டும். இதிலே காலதாமதம் செய்வ திலே பொருள் இருக்க முடியாது.
எப்படி இருந்தாலும் ஒரு கணிசமான தொகை; ஒரு நியாயமான தொகை ராயல் டியாக, ஈட்டுத் தொகையாகக் கொடுக் கப்பட வேண்டும்; இது கொள்கையள விலே ஒப்புக் கொண்டால் மட்டும் போதாது. உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்பதற்குத்தான் ஆர்ப்பாட்டம்.
என்.எல்.சி.யில் 1975,1976 இல் இருந்து கிடைத்திருக்கின்ற லாபம் 351 கோடி ரூபாய். அது மட்டுமல்ல. என்.எல்.சி.; சொந்தக் காலிலே நிற்கக் கூடிய அளவிற்குவந்திருக்கின்றது. வெளிநாட் டிலுள்ள தொழில் நுணுக் கங்களை எதிர்பார்த்து அது இயங்க வேண்டிய நிலை மாறி சொந்தக் காலிலே நிற்கக் கூடிய அளவிற்கு வளர்ந்தோங்கி நிற்கின் றது. நாங்கள் கேட்பதெல்லாம் 351 கோடி ரூபாய் இலாபம் வந்திருக்கிறது என்று சொல்லும் போது குறைந்த பட்சம் 10 சத விகிதம் என்று பார்த்தாலும் கூட, தமிழக அரசுக்கு ராயல்டி 36 கோடி ரூபாய் வர வேண்டும் என்பதை யாராவது மறுக்க முடியுமா?
நாங்கள் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குச் சொல்லுகின்றோம். இது ஏதோ காவிரி எண்ணெய்க்காக என்று மட்டும் நீங்கள் தயவு செய்து நினைத்து உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளா தீர்கள். ராஜஸ்தானுக்கு நீங்கள் கொண்டு போக இருக்கக்கூடிய திட்டமிருக்கிறதே, அந்த நெய்வேலி நிலக்கரிக்கும் சேர்ந் தேதான் இந்தத் திட்டம் என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் 60 கோடி ரூபாய் நட்ட மானாலும்கூட, 700 கோடி ரூபாய் அங்கு கொண்டு போய்க் கொட்ட வேண்டிய அவசியம் என்ன? இல்லை; எங்களுக்கு நிலக்கரி அங்கு கிடைக்கிறது; உங் களுக்கு அனல் மின்சாரத்தை உருவாக் குவோம் என்று நீங்கள் சொல்லமுடியுமா? பக்கத்திலே இருக்கிறது கங்கை கொண்ட சோழபுரம். அங்கு ஏராளமான நிலக்கரிப் படிவங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
அங்கு போய் அதை எடுத்து விட்டோமா? அங்கே சுரங்கம் தோண்டி விட்டோமா? இந்தப் பணத்தைத் தமிழகத் திட்டங்களுக்குச் செலவிட்டால் வேலை வாய்ப்பு தமிழர்களுக்கு அதிகம் ஏற்படும். நான் ஏதோ அரசியல் கண் ணோட்டத்தோடு பேசவில்லை.
சாதி சமயக் கண்ணோட்டத்திற்கெல் லாம் அப்பாற்பட்டுத் தமிழ் நாட்டு மக் களுடைய நலன்; தமிழ்நாட்டினுடைய எதிர்காலம், தமிழ்நாட்டின் பொருளாதார வளம் என்பதை வைத்து நாங்கள் பேசக் கடமைப்பட்டிருக்கிறோம். மற்றவர்கள் இதைப் புரிந்து கொள்வதற்கே கொஞ்சம் நாட்களாகும். ஆனால் ஈரோட்டுக் கண் ணாடி இருக்கிறதே! இது மைக்ராஸ் கோப்பு ஆகையினால் எங்கே திரும்பி அப்படி இப்படி நெளிந்தாலும் கூட இந்த ஈரோட்டுக் கண்ணாடிக்கு எதுவுமே தப்பாதே!
நரிமணத்திலும் ஆர்ப்பாட்டம்
நரிமணத்தில் உள்ள எண்ணெய், எரிவாயுக் கழக அலுவலகம் முன்பு ராயல்டி தருமாறு டில்லி அரசை வலியுறுத்தி 29.9.1989 அன்று திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் எடுக்கப்படும் பெட் ரோலுக்கு அசாம் மாநிலத்திற்கு வழங்கப் படுவதுபோல் ராயல்டி தர வலியுறுத்தியும், உள்ளூர்க்காரர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரக் கோரியும் கழகத் தலைவர் உரையாற்றிய போது, பெட்ரோல் தொடர்புடைய சிறு தொழிற் சாலைகள் அமைக்கும் முன்னுரிமை தமிழர்களுக்கே தரப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
அப்போதைய கழகத் தலைமை நிலை யச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் முன்னதாக ஏன் இந்தப் போராட்டம் என விளக்கிக் கூறியது, தமிழர் தலைவரின் பேச்சுக்குச் சரியான முன்னோட்டமாக அமைந்தது. கழகப் பொருளாளர் கா.மா. குப்புசாமி, பிரச்சாரச் செயலாளர் துரை. சக்கரவர்த்தி, கீழ்த்தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர் எஸ்.எஸ்.மணியம், மேல் தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர் ஆர். பி.சாரங்கனும் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் ராயல்டி கோரிக்கை உள்ளிட்ட ஏராளமான முழக்கங்களும், ஓர வஞ்சக டில்லிக்கு எதிரான கண்டன முழக்கங்களும் விண்ணை அதிரடித்தன. அய்யாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட உரிமைப்போர் இது.
தமிழர் தலைவர் பெற்ற வெற்றி
நெய்வேலியில் எடுக்கும் நிலக்கரிக்கு (ராயல்டி) ஈட்டுத் தொகை கேட்டுத் தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் அய்யாவின் பிறந்த மாதத்தில் மக்கள் மன்றத்தில் முதன் முதலாக வைத்துப் போராடிய திராவிடர் கழகம் - குறிப்பாகத் தமிழர் தலைவர் ஒரே மாதத்தில் தம் கோரிக்கை வெற்றி பெற்ற இனிப்புச் செய்தி கேட்டார். அதன் பின்னர்தான் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் இதே கருத்தை மய்ய அரசிடம் வலியுறுத்தினார்.
நெய்வேலி லிக்னைட் நிறுவனத் தலைவர் திருச்சியில் பேசுகையில் ராயல்டி பாக்கித் தொகையாக 40 கோடி ரூபாய் வரை தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்தார். நெய்வேலி சுரங்கத் திலிருந்து எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரிக் காகத் தமிழக அரசுக்கு 1976-ஆம் ஆண்டு முதல் மெட்ரிக் டன்னுக்கு 2.50 ரூபாய் வீதம் ராயல்டி வழங்க நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஒப்புக் கொண்டு விட்டது. திராவிடர் கழகம் நிகழ்த்திய அமைதிப் புரட்சிக்குக் கிடைத்த பரிசு இது. தலைவர் கலைஞரைச் சந்தித்தார் தமிழர் தலைவர்
தமிழர் தலைவர் தமிழக முதல்வர் கலை ஞரைச் சந்தித்து, மய்ய அரசு வழங்குவதாக அறிவித்த ராயல்டி வருகிறதா என்று வினவியபோது, கலைஞர் அவர்கள் குறிப் பிட்டாராம். நீங்கதான் தமிழ்நாட்டிலே ஒரு சுவர் விடாமல் நெய்வேலி நிலக்கரிக்கு ராயல்டி வேண்டும் என்று திரும்பிய திசையெல்லாம் எழுதி வைத்திருக்கிறீர்களே. அதைப் பார்க்காமல், கவனிக்காமல் விட்டுவிட முடியுமா? மய்ய அரசை வலியுறுத்த அது உதவிற்று என்று கூறினாராம்.
தமிழர் தலைவர் கூறிய மற்றொரு தகவல் அது. தமிழக அரசு நிதி நெருக்கடி ஏற்படுகின்ற காலங்களில் எல்லாம் முன்னதாகவே அதாவது அட்வான் சாகவே கூட ராயல்டியை என்.எல்.சி. நிறுவனத்திட மிருந்து பெற்றுக் கொண் டுள்ளது எனும் கூடுதல் தகவலையும் அளித்தார்.
இத்தோடு நெய்வேலிப் பிரச்சினை முடிந்ததா? தொடர்ந்தது. கழகம் அவ்வப் போது போராடி வந்துள்ளது.
திராவிடர் கழகத்தின் தொடர் போராட்டம்
தமிழகத்தில் உள்ள மய்ய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தலைமை அலுவலகங்கள் அனைத்தும் டில்லியிலேயே உள்ளன. சுரங்கங்களின் தலைமை அலுவலகம் தன்பாத்தில் (பீகார்) உள்ளது. நெய்வேலி நிறுவனத் தின் தலைமை அலுவலகம் மட்டுமே நெய்வேலியில் இருந்து வந்தது. அதனைச் சென்னைக்கு மாற்றவும் 2.6.1997 இல் கூடிய பங்குதாரர் கூட்டம் ஏற்பாடு செய்தது.
சென்னைக்கு மாற்றுவது பின்னா ளில் டில்லிக்கு மாற்றப்படாது என்ப தற்கு என்ன உத்திரவாதம்; பெருவாரி யான பங்குகள் வடநாட்டுத் தொழில் அதிபர்களின் கையில் உள்ளது. எனவே தமிழக நலன் கருதி நெய்வேலியின் கட்டுக்கோப்பான வளர்ச்சி தொழி லாளர் நலன் ஆகியவை கருதித் தலைமை அலுவலகம் நெய்வேலி யிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று குரல் கொடுத்தது. இருப்பினும் தலைமை அலுவலகப் பணிகள்எல்லாம் நெய்வேலியில் நடை பெற, பதிவு அலுவலகம் மட்டும் தந்தை பெரியார் சாலையில் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் நலனில் தமிழ் மக்கள் வளர்ச்சியில் தந்தை பெரியர் காலம்; தொட்டு அக்கறை கொண்டு ஆர்ப் பாட்டம் இல்லாது செயல் ஆற்றுவது திராவிடர் கழகம். அப்படித் திராவிடர் கழகம் எடுத்துச் செயல்படும் போது அல்லது போராடும்போது அதைக் கிண்டல் செய்பவர்கள், ஏகடியம் பேசுபவர்கள், எக்கலிப்பவர்கள் அதனை எதிர்ப்பவர்கள் பின்னர் தங்கள் அறி யாமைக்கு வெட்கி நாணுவதும் திரா விடர் கழகத்தின் முயற்சியைப் பாராட் டுவதும் போற்றுவதும் திராவிடர் கழகத் தின் வரலாற்றில் ஒரு வழமையான நிகழ்ச்சியே. இப்படிப் பாராட்டுக்கள் பலமுறை - ஒருமுறை இரு முறையல்ல - பல நூறுமுறை பதிவு செய்யப்பட்டுள் ளன.
நெய்வேலி தொடர்பான சிக்கல் களில் திராவிடர் கழகம் தலையிட்டுத் தீர்வு காண முயன்றே வந்துள்ளது. 750 கோடி ரூபாயைக் கொட்டிய ராஜஸ் தான் சுரங்கத்தை மூட 2.6.1997 அன்று குரோம்பேட்டை எம்.அய்.டி. வளாகத் தில் பங்குதாரர் கூட்டம் கூட்டப்பட்டது. பாரதீய ஜனதா ஆட்சிக் காலத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனப் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் தகவல் வெளி வந்தது. நல்ல லாபம் தரும் பொதுத் துறை நிறுவனம் என்.எல்.சி. நிறுவனத் தின் 51 விழுக்காடு பங்குகளை விற்க மத்திய பொதுத்துறைப் பங்குகள் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. தலைமை அமைச்சர் வாஜ்பாயி பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கமாட்டோம் என அறிவித்த சில நாட்களில் என்.எல்.சி. நிறுவன பங்குகள் 51 விழுக்காடு விற்கப் பரிந்துரை என்ற தகவல் கேட்டதும், நெய்வேலி நகர் திராவிடர் கழகம், இளைஞர்அணி, தொழிலாளர் அணி விழித்துக் கொண்டது.
ஏனென்றால், இதனால் புதிய டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ் உருவாக்கப்படு வார்கள். இவர்களின் வரவால் பார்ப்பான் பண்ணையம் கேட்பார் இன்றி ஆகி விடுமே. மீண்டும் வர்ணா சிரமம் புதுப்பிக் கப்படும் எனும் நியாய மான அச்சம் தலை தூக்கியது. அது மட்டுமல்லாது, என்.எல். சி.யில் நேரடியாகப் பணிபுரியும் 19 ஆயிரம் பணியாளர் வேலை கேள்விக்குறியாகும்.
என்.எல்.சி. நிறுவனத்தை நம்பியுள்ள பிற தொழிலாளர்களின் 5000 குடும்பங்கள் வறுமைக் குழியில் தள்ளப்பட்டுப் பட்டினிச் சாவு, தற்கொலை போன்றவை அன்றாட நிகழ்வுகளாகும். படித்துப் பட்டம் பெற்று வரும் திராவிட இனத்துப் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்புக் கானல் நீராகி, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு ஒரு தலைமுறை யோடு அரசு வேலை முடிந்துவிடும். தமிழகத்தின் ஒட்டு மொத்த முன்னேற்ற மும் தடைப்படுவதோடு, நெய்வேலி மீண்டும் பூணூல் வேலியாகும் எனும் நியாயமான அச்சத்தில் ஆழ்ந்தனர்.
எனவே இப்போதும் திராவிடர் நலன் காக்கும் தமிழர் தலைவர் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதைக் கண்டித்துக் கண்டனப்பேரணி நடத்த ஆணையிட்டார்.
தமிழர் தலைவர் ஆணைக்கேற்பத் துணைப் பொதுச் செயலாளர் துரை.சக்கர வர்த்தி தலைமையில் மாநிலத் தொழிற் சங்கச் செயலாளர் வெ.செயராமன், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் முன்னிலையில் நெய் வேலி நகர் வட்டம் 17 இல் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலையிலிருந்து 14.4.2002 இல் கண்டனப் பேரணி தொடங்கியது. ஒன்றியப் பொறுப் பாளர்கள், நகரப் பொறுப்பாளர்கள், மாவட்ட மகளிரணிப் பொறுப்பாளர்கள், திராவிடர் தொழிலாளர்கள் கழகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள், தோழியர்கள், பெரியார் பிஞ்சுகள், பெரியார் பெரும் தொண்டர்கள் உள்ளிட்ட பெரியாரின் இனமானப்படையினர் அனைவரும் கழகக் கொடியுடன்,
விற்காதே! விற்காதே!
என்.எல்.சியைத் தனியாருக்கு விற்காதே!
ஆயிரம் கோடி லாபம் தரும் என்.எல். சி.யை விற்காதே!
மத்திய அரசே! பி.ஜே.பி. அரசே!
தொழிலாளர் நலச் சட்டத்தைத் திருத்தாதே!
எனும் அட்டைகளுடனும் பேரணியில் சென்றனர். ஆட்டோக்களில் ஒலி பெருக்கி அமைத்துக் கண்டன ஒலி முழக்கக்ஙகள் ஒலித்தன.
மாநில திராவிடர் தொழிற்சங்கச் செயலாளர் கண்டனப் பேரணியைத் துவக்கி வைக்க துரை சந்திர சேகரன், ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் கண் டனப் பேரணியின் நோக்கத்தை எடுத்து ரைத்தனர். மதியம் ஒன்றரை மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் முடிவுற்றது.
இதன் விளைவு நெய்வேலி தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுப்பது தடுக்கப்பட்டது எனப் பெருமை பொங்கக் கூறுகிறார், நெய்வேலி நகரத் திராவிடர் கழகத் தலைவராய் விளங்கிக் கண்டன ஆர்ப் பாட்டத்தை வெற்றிகரமாய் நடத்திக் காட் டிய செயல்வீரர் நெய்வேலி ஞானசேகரன் அவர்கள்.
நெய்வேலியில் திராவிடர் கழகம், கோட்டையாக விளங்கித் தொழிலாளர் நலன், என்.எல்.சி.நலன், தமிழ் நாட்டு நலனைக் காப்பதில் முனைப்புடன் செயல்படுவதை மனச்சான்று உள்ள எவரும் மனம் திறந்து பாராட்டாமல் இருக்க முடியாது.
இன்றைய காங்கிரசு அரசும் கூட இரண்டு முறை பங்குகளைத் தனியாருக் குத் தாரை வார்க்க முயன்றும் திராவிடர் கழகம் முயன்று அதைத் தடுத்துள்ளது. நெய்வேலி நிதியை 1500 கோடி ரூபாயை எடுத்து வடநாட்டில் ராஜஸ்தானில் கொட்ட முயலும் முயற்சியை முன் நின்று தடுத்துத் தமிழ்நாட்டு நலன் காத்து வருகிறது.
திராவிடர் கழகம் - ஏதோ எதிர்மறை யான - கடவுள் இல்லை - பார்ப்பனீயம் ஒழியவேண்டும் என்று குரல் கொடுக்கும் கட்சி மட்டுமல்ல - உயரிய பொருளாதாரச் சிந்தனை, தமிழ்நாட்டு நலன், தமிழர் நலம் பேணும் இயக்கம் - மாபெரும் இயக்கம்.

- நிறைவு
No comments:
Post a Comment