தசரா பண்டிகையின் நிறைவு நாளான நேற்று விஜயதசமி என்ற பெயரில் வடக்கில் பல மாநிலங்களில் வழக்கம் போல இராவணன், கும்ப கர்ணன், இந்திரஜித்தின் உருவங்கள் எரிக்கப்பட்டு ராம் லீலா கொண்டாடப் பட்டுள்ளது.
டில்லியில் பிரதமர் மன்மோகன்சிங், காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதலியோர் கலந்து கொண்டு குதூ கலித்துள்ளனர்.
பீகாரில் முதல் அமைச் சர் நிதீஷ்குமார், ஆளுநர் தேவானந்த் கொன்வார் உள்படப் பங்கு கொண்டு மகிழ்ந்திருக்கின்றனர்.
65 அடி உயரத்தில் இராவணன் உருவமாம் தீயிட்டும் கொளுத்தப் பட்டதாம். ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசு கள் வெடிக்கப்பட்டன வாம். (இன்னும் சொல்லப் போனால் வடக்கில்கூட இராவணனை குல தெய்வமாக வழிபடும் மக்கள் இருக்கிறார்கள்)
இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டம் என்றும், இராமாயணத்தில் சொல் லப்படும் அரக்கர்கள், குரங்குகள் என்பவை எல்லாம் திராவிடர்களைத் தான் என்றும் பண்டித ஜவகர்லால் நேரு உட்பட (விவேகானந்தரையும் சேர்த்துக் கொள்ளலாம்) பி.டி. சீனிவாசய்யங்கார் போன்ற வரலாற்று ஆசிரி யர்களும் அய்யந்திரிபறக் கூறியுள்ளனர்.
இவையெல்லாம் நேரு குடும்பத்தினருக்குத் தெரியாதா? விஜயதசமி வெற்றி விழா கொண் டாடும் வட நாட்டுக்காரர் களுக்குப் புரியாதா?
1974 டிசம்பர் 25ஆம் தேதி தந்தை பெரியார் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி சென் னையில் பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் அன்னை மணி யம்மையார் லட்சக்கணக் கானோர் முன்னிலையில் இராவண லீலா! நடத்தினாரே நினைவிருக் கிறதா? இராமன், சீதை, லட்சுமணன் உருவங்கள் தீக்கு இரையாக்கப்பட்டனவே - மறுபடியும் அரங்கேற்றப்பட வேண்டுமா?
அதுகுறித்த வழக்கில் திராவிடர் கழகம் வெற்றி பெற்று தான் இருக்கிறது என்பதையும் மறந்து விட வேண்டாம்.
இந்திய சுதந்திரம் பார்ப் பன - பனியா (வடவர்)வுக் குக் கிடைத்த அதிகார மாற்றம் (Made Over) என்று தந்தை பெரியார் கல்வெட் டாகக் கூறிச் சென்று இருக்கிறாரே - அந்தக் கருத்து களை மேலும் கூர் தீட்ட வேண்டுமா? அதனைத் தான் ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்களா?
அண்ணாவின் திரா விட நாடு இதழில் ஒரு தகவல்:
கடந்த சில தினங் களுக்குமுன் டில்லி மாநக ரில் ராம லீலா கொண்டாடி னராம் - வைதீகர்கள்; இராவணனையும் அவன் சந்ததிகளையும் அழித்த ராமனின் திருநாளாம் அது.
அந்த சரித்திர எழுத் தாளர் நேரு பேரனுடன் சென்று இராவணனையும், கும்பகர்ணனையும், இந்திரஜித்தையும் கொடும் பாவியாக்கி எரிக்கும் காட்சி - அல்ல, அல்ல; விழா காணச் சென்றிருக் கிறார்.
இந்திய சர்க்காரின் செய்தி இலாகா அந்தக் கோலாகலத்தை திரைப்பட மாக்கி சினிமா கொட்டகை யில் திரையிட்டனர். திரை யிலே காட்சி பக்கத்தி லேயிருந்த நண்பர் கருணா நிதி கேட்டார். நாம் ராமன் உருவம் செய்து கொளுத் தினால் என்ன?
நான் பதில் தர வில்லை. நண்பர் கேட் டதுபோல் செய்தால் யார்தான் என்ன செய்ய முடியும்?
- அறிஞர் அண்ணா
(திராவிட நாடு 28.10.1951)
(திராவிட நாடு 28.10.1951)
பிரதமராக இருந்தா லும் சரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியானாலும் சரி, அந்த அண்ணா உரு வாக்கிய திமுக மத்திய அரசின் அமைச்சரவை யிலும் இடம் பெற்றிருக் கிறது என்பதை மறக்க வேண்டாம்.
ஆட்சியில் இருப்பவர்களே மதச் சார்பின்மைக்கு விரோதமாகவும், இனவுணர்வைத் தூண்டும் வகையிலும், வடக்கு - தெற்கு வாதத்தைக் கிளறும் வகையிலும் நடந்து கொள்ளலாமா?
ஆட்சியில் இருப்பவர்களே மதச் சார்பின்மைக்கு விரோதமாகவும், இனவுணர்வைத் தூண்டும் வகையிலும், வடக்கு - தெற்கு வாதத்தைக் கிளறும் வகையிலும் நடந்து கொள்ளலாமா?
No comments:
Post a Comment