Sunday, October 9, 2011

நம்பிக்கையாளர்களை மாற்ற நாம் விரும்புகிறோமா? 3


நம்பிக்கையாளர்களை மாற்ற நாம் விரும்புகிறோமா? 3

ரொனால்ட் ஏ. லின்ட்சே


மதநம்பிக்கை அற்றவர்களும், நியாயமாகவும், சமமாகவும் நடத்தப்பட வேண்டும்

அனைத்தையும் தொகுத்துக் கூறுவதானால், மதம் என்பது முற்றிலும் ஒரு தனிப்பட்ட விவகாரம் என்றால்,  மற்றவர்களின் மத நம்பிக்கைகள் பற்றிய கவலை நமக்கு சிறிதும் இருக்க முடியாது. நமது  முக்கியமான கவலை யெல்லாம் மதச்சார்பின்மையை ஆதரிப் பது பற்றித்தான்.  ஒரு மதச்சார்பற்ற அரசாங்கம் நமக்கு வேண்டும். மத நம்பிக்கை அற்றவர்களும் சமமாகவும், நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். பொதுக் கொள்கை மதத்தின் செல்வாக்கு அற்றதாக சுதந்திரமானதாக இருக்க வேண்டும் என்றும் நாம் விரும்பு கிறோம்.

இந்த நோக்கங்களை எட்ட வேண்டுமென்றால், மதநம்பிக்கை யாளர்கள் அனைவரையும், பெரும் பாலானவர்களைக் கூட, மாற்ற வேண்டும் என்ற தேவையே இல்லை. மதச்சார்பின்மை என்ற கொள்கையை குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை கொண்ட  தனிப்பட்ட மனிதர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்வதே போதுமானது.

அதற்கு, சில நம்பிக்கையாளர்களை நம்பிக்கை அற்றவர்களாக மாற்றுவதற்கு அவர் களை ஒப்புக் கொள்ளச் செய்ய வேண் டும்.  இல்லாவிட்டால் மதச்சார் பின்மையை அவர்கள் ஏற்றுக் கொள் ளவே மாட்டார்கள். ஆனால் அப்படிப் பட்டவர்கள் மிக அதிகமாக இருப்ப தில்லை; மிகக் குறைவானவர்களா கவே இருப்பர். அதுவும் நல்லதுதான்.  ஏனென்றால் மனமாற்றம் செய்யும் இத்தகைய பணியை கவர்ச்சியான தாகவும், பயனளிப்பதாகவும் நாம் காண்பதில்லை.

மதநம்பிக்கையாளர்களைக் கையாள்வதற்கான உத்திகள் மற்றும் அணுகுமுறைகள்

மதநம்பிக்கை கொண்டவர்களை மனமாற்றம் செய்யும் பணியில் நமது கவனத்தைக் குவிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு விடை காண்பதில் சிறிது காலத்தை நான் செலவிட்டிருக் கிறேன். நமது அமைப்புகளின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள அது பெரும் அளவு உதவுகிறது என்பதே இதன் காரணம். (நமது எந்த பகுத்தறிவு, மனிதநேய அமைப்புகளின் நோக்க அறிவிக்கைகளிலும், மத நம்பிக்கையாளர்களை மனமாற்றம் செய்விப்பது பற்றி எந்த விதக் குறிப்பையும் காணமுடியாது).

ஏற்றுக் கொள்பவர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களிடையே - நிலவும் கருத்து வேறுபாடுகளை  மிகச் சரியான கண்ணோட்டத்தில் அது அளிக்கிறது என்பதும் அதன் காரணம். கடந்த அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற கவுன்சிலின் 13 ஆவது ஆண்டுவிழாவின் போது,  இந்தத் தலைப்பில் ஒரு குழு விவாதத்தை நாம் மேற்கொண்டோம் என்பதை உங்களில் சிலர் அறிந்திருக் கலாம். மையர்ஸ், விக்டர் ஸ்டெஞ்சர், கிறிஸ் மூணி, ஈகுயின் ஸ்காட் ஆகியோர் கலந்து கொண்ட விவாதத்தில்,

மத நம்பிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் நம்பிக்கைகளைக் கையாள்வதற்கான உத்திகள்,  அணுகுமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. குழு உறுப்பினர்கள் அனைவரும் தத்தம் கருத்துகளை மிகத் திறமையுடன் முன் வைத்தனர்.  ஆனால் என்னை வியப்படையச் செய்தது என்ன வென்றால், அவர்களிடையே மிகக் குறைந்த அளவு வேறுபாடுகள் இருந்தன என்பதுதான்.

மேலும், குறிப்பிட்ட மத நம்பிக்கை கொண்ட தனிப்பட்டவர்கள் மற்றும் அமைப்புகளைக் கையாள்வதற்காக என்ன உத்திகளைப் பயன்படுத்துவது என்பதை முடிவு செய்யும் முன்னர்,  நமது நோக்கங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை முதலில் நாம் பரிசீலித்தால், இப்போது நம்மிடையே நிலவும் வேறுபாடுகளும் பெருமளவில் குறைந்து போய்விடும் என்ற சிந்தனை யுடன் அந்த விவாதத்தில் இருந்து நான் திரும்பி வந்தேன்.

நாத்திகர்கள் உண்மைக்கு உண்மையாக (விசுவாசமாக) இருக்க வேண்டும்

குழு விவாதத்தின் போது,  நாத்திகர் கள் எப்போதுமே தங்களின் சொந்த நம்பிக்கைகள் பற்றியோ  அல்லது மதிப்பீடு செய்வதில் உள்ள உண்மைகள் உள்ளிட்ட அறிவியலின் பாதிப்புகள் பற்றியோ, உண்மை அற்றவர்களாக இருக்கக் கூடாது என்று மையர்ஸ் மிகுந்த திறமையுடன் தனது கருத்துகளை முன் வைத்து விவாதித்தார்.  அதனை நான் முழுமனதுடன் ஏற்றுக் கொள்கிறேன்.  உண்மை என்பது ஒரு முக்கியமான மதிப்பீடு ஆகும். உண்மைக்கு உண்மையாக (விசுவாசமாக) இருத்தல் என்பது நமது நடத்தையின் மீது ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

மற்றொரு பக்கத்தில், தத்துவரீதியாக விவாதம் செய்யும் ஒரு சமூகத்தில் நாம் வாழவில்லை. இனப் பெருக்க உரிமைகளை முழு அளவில் பெண்கள் தொடர்ந்து பெற இயலுமா, ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு அரசால் ஆதரவு தர இயலுமா, பொதுப் பள்ளிகளில் டார்வினின் உயிரினத் தோற்றம் மற்றும் வளர்ச்சி பயிற்றுவிக்கப்படுமா என்பது போன்ற பிரச்சினைகளே முக்கியமான கவலைகளாக நம்மில் பெரும்பாலோருக்கு உள்ளது. வேறு சொற்களில் கூறுவதா னால், 

நடைமுறையில் முக்கியத்துவம் வாய்ந்த, பின்விளைவுகளை ஏற்படுத்தும் பிரச்சினைகள் பற்றியே நாம் முக்கியமாகக் கவலை கொண்டுள்ளோம் என்று கூற வேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற ஒரு விவாதத்தில் வெற்றி பெறுவது நன்றாகத்தான் இருக்கும். ஆனால் குறிப்பிடத்தக்க பின்விளைவு களை அது மிக அரிதாகத்தான் ஏற்படுத் தும்.  அறிவே அற்றவர்கள் என்பதை வெளிப்படுத்தும்  நம்பிக்கைகளைக் கொண்ட ஆஸ்திகர்களும் கூட அந்த நம்பிக்கைகளைக் கைவிடுவதோ, தங் களின் நடத்தையை மாற்றிக் கொள்வதோ இல்லை.

மதநம்பிக்கையாளர்களைக் கையாள் வதில் எத்தகைய உத்திகளைப் பயன்படுத் துவது என்பதை முடிவு செய்வதில்,  நமது பரிசீலனையில் இரண்டு விஷயங்கள் முன்னிலை பெற்றிருக்க வேண்டும்.  நமது நாணயமும், நமது நோக்கங்களும்தான் அவை.  முன்னதைப் பொறுத்தவரை மையர்ஸ் சரியாகச் சொல்லிவிட்டார்.

உண்மையில் நாம் எந்த வித சமரசமும் செய்துகொள்ள இயலாது. ஆனாலும்,  உண்மையாக இருக்கக் கூடிய மாறு பட்ட பல முன்னிலைகளும் இருக்கத் தான் செய்கின்றன. நமது நோக்கத்தை வலியுறுத்த நாம் தேர்ந்தெடுக்கும் உத்தியே நமது நோக்கங்களைப் பாதிப்பதாக இருக்கக்கூடாது. இதற்கு சரியான எடுத்துக்காட்டு ஒன்றைக் காண்போம்:

கடவுள் இருக்கிறாரா என்பதற்கு விடை காணாமல் கருக்கலைப்புக்காக மதக் கோட்பாடுகளைப் பார்ப்பதற்கு அரசுக்கு எந்த உரிமையும் இல்லை

கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்ற கேள்விக்கு விடை காணாமல்,  கருக்கலைப்பு பற்றிய வழிகாட்டுதலுக் காக மதக் கோட்பாடுகளைப் பார்ப்ப தற்கு அரசுக்கு எந்த வித உரிமையும் இல்லை என்பதை ஒரு மனிதனாக எவரையும் என்னால் ஏற்றுக் கொள்ளச் செய்ய இயலுமானால்,  கடவுள் இருக் கிறாரா இல்லையா என்பதை ஆராய் வதில் எனது நேரத்தையும், ஆற்ற லையும் ஏன் நான் வீணாக்க வேண் டும்? மேலும், ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதா - இல்லையா என்பதை அனைத்துப் பெண்களும் தாங்களாகவே முடிவு செய்து கொள் ளும் உரிமை அவர்களுக்கு உள்ளது என்பதை ஒரு பெண் ஆதரிப்பவராக இருந்தால்,  கருக்கலைப்பு முடிவுக்கு வரவேண்டும் என்று  தனது வீட்டில் தனியாக கடவுளிடம் அவர் பிரார்த் திப்பது பற்றி எனக்கு எந்தவித அக் கறையும், ஆட்சேபணையும் இருக்க முடியாது.

பல விஷயங்களில் பேரரறிவு கொண்டவராக விளங்கிய ஜெஃபர்சன், மிகச் சிறந்த முறையில் கூறினார்: இருபது கடவுள்கள் இருக்கின்றனர் என்றோ, கடவுளே இல்லை என்றோ எனது பக்கத்து வீட்டுக்காரர் கூறுவதில் எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. அது எனது சட்டைப் பையைக் கொள்ளை அடிப்பதாகவும் ஆகாது; எனது காலை உடைப்பதாகவும் ஆகாது.  நமது சட்டைப் பைகளைக் கொள்ளையடிக்கவும், நமது கால்களை உடைக்கவும் அவர்களது நம்பிக்கை களால் நம்பிக்கையாளர்கள் ஊக்கம் அளிக்கப்படுகின்றனர் என்பதைத் தவிர, எவ்வளவுதான் முட்டாள்தன மானவையாக அவர்களது நம்பிக்கை கள் இருந்தாலும், குறிப்பிடத்தக்க கவலை அளிக்கும் ஒரு விஷயமாக அது இருக்க முடியாது.
(நிறைவு)
(நன்றி: ஃப்ரீ என்கொயரி - ஏப்ரல் , மே -2011
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்)

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...