Sunday, October 9, 2011

கான்சிராம்


கான்சிராம்


பகுஜன் சமாஜ் கட்சி யைத் தோற்றுவித்த கான்சி ராம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இந்நாள்.
மத்திய அரசில் பணி புரிந்த இவர் அரசுப் பதவியை உதறித் தள்ளிவிட்டு, 1981ஆம் ஆண்டில் சோஷித் சமாஜ் சங்கர்ஸ் ஸமிதி என்னும் ஓர் அமைப்பைத் தொடங்கினார். அதுதான் பிற்காலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியாகப் பரிணாமம் பெற்றது.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள்தான் இந்நாட்டின் பெரும்பான்மையான வெகு மக்கள்! அவர்களின் கைகளில்தான் நாட்டின் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டும் என்பதுதான் அதன் அடிநாதம்!
இந்தக் கொள்கையைப் பரப்புரை செய்வதற்காக இந்தியா முழுமையும் சைக் கிள் பேரணியை நடத்தினார். கோசிமா, கார்கிஸ், பூரி, போர்பந்தர் ஆகிய இடங் களிலிருந்து இத்தகைய சைக்கிள் பேரணிகள் நடத் தப்பட்டதுண்டு.
1988இல் தந்தை பெரி யார் பிறந்த நாளில் (செப் டம்பர் 17இல்) குமரிமுனை யிலிருந்து புறப்பட்ட அந்த சைக்கிள் பயணத்தை தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.
1995 செப்டம்பரில் தந்தை பெரியார் பிறந்த நாளை யொட்டி உத்தரப்பிரதேசத் தின் தலைநகரமான லக்னோவில் மூன்று நாட்கள் பெரியார் மேளாவை மண்ணும், விண்ணும் துகள் கிளப்ப நடத்திக் காட்டி - இந்தியாவையே தன்பக்கம் திரும்பிப் பார்க்க செய்தார்.
தமிழ்நாட்டிலிருந்து தனி ரயில் மூலம் சென்று திரா விடர் கழகக் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
இந்த அதிர்விலிருந்து மக்களைத் திசை திருப்பிட ஆர்.எஸ்.எஸின் பின்னணி யில் ஆயுத வியாபாரி சந்திரிசாமியின் ஏற்பாட்டில் பிள்ளையார் பால் குடித்தார் என்ற ஒரு கட்டுக் கதையை நாடெங்கும் பரப்பினார்கள்.
(பிள்ளையார் பால் குடிப் பாரா? கொழுக்கட்டையைத் தின்னச் சொல்லுங்கள் பார்க்கலாம் - பத்து லட்சம் ரூபாய் பரிசு என்று அறி வித்து, சென்னை அண்ணா சாலையில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களே முன் வந்து டாம்டாம் அடித்தார்)
பெரியாருக்கு ஏன் விழா என்று செய்தியாளர்கள் கான்ஷிராம் அவர்களிடம் கேட்டனர் (லக்னோ 17.9.1995).
மகாத்மா பாபூலே, சாகு மகராஜ், நாராயணகுரு, டாக்டர் அம்பேத்கர் போன்ற வர்கள் பார்ப்பனர் ஆதிக் கத்தை எதிர்த்துப் பாடுபட் டார்கள். ஆனால் பெரியார் ராமசாமி அவர்களால்தான் பார்ப்பன ஆதிக்கம் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சியைச் சந்தித்தது என்று கூறினாரே!
மனுவாதிகளை செருப் பாலடியுங்கள் என்பதுதான் பி.எஸ்.பி.யின் முழக்கமாக இருந்தது. சாதிய அமைப்பு முறையை ஒழித்துக் கட்டு வேன் என்று கான்ஷிராம் சபதம் செய்தார் என்று ஆர்.எஸ்.எஸின் ஆலோசக ரான திருவாளர் எஸ். குரு மூர்த்தி தினமணியில் (17.5.2007) எழுதிய கட்டு ரையில் குறிப்பிட்டு இருந் தார். கெட்டவாய்ப்பு கான்ஷி ராம் மரணம் அடைந்தார். ஆட்சியைப் பிடிக்க வேண் டும் என்ற ஒரே பதவி ஆசை யால் கான்ஷிராம் அவர் களின் பாதையை விட்டு விலகி பார்ப்பனர்களையும் இணைத்துக் கொண்டு, கட்சியின் பொதுச் செயலாள ராகவே ஒரு பார்ப்பனரை (சதீஷ் சந்திர மிஸ்ரா) நியமித்துக் கொண்டார் மாயாவதி. பதவி என்று வந்துவிட்டால் கொள்கையில் சமரசம்தானோ! -மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...