Thursday, November 7, 2019

கப்பல் கட்டும் தளத்தில் பணியிடங்கள்

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் நிறுவனத்தில், மூன்றாண்டு ஒப்பந்த அடிப்படையில் 671 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: சீட் மெட்டல் ஒர்க்கர்- 17, வெல்டர்- 30, பிட்டர்- 214, மெக்கானிக் டீசல்-22, மெக்கானிக் மோட்டார் வாகனம்- 7, பிட்டர் பைப் (பிளம்பர்)- 36, பெயின்டர்- 5, எலக்ட்ரீசியன்- 85, கிரேன் ஆப்பரேட்டர்- 19, எலக்ட்ரானிக் மெக்கானிக்- 73, இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்-78, ஷிப்ரைட் உட்- 2, ஆட்டோ எலக்ட்ரீசியன்- 2, ஸ்காப்போல்டர்- 19, ஏரியல் ஒர்க் பிளாட்பார்ம் ஆப்பரேட்டர்- 2, செமி ஸ்கில்டு ரிஜ்ஜர்- 40, கேன்டீன்- 20. ஒவ்வொரு பதவிக்கும் கல்வித்தகுதி மாறுபடும். வயது: 2019, நவ. 15 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு, உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.  விண்ணப்ப கட்டணம்: ரூ.100
கடைசி நாள்:15.11.2019
விபரங்களுக்கு: https://www.cochinshipyard.com/career/Vacancy%20notification%20-%20Contract%20workmen%202019.pdf

கிருஷ்ணனும், கீதையும் உள்ளவரை ஜாதி வருணம் ஒழியாது (1

குடிஅரசு, 2.6.1935லிருந்து...
தோழர்களே! இன்று பொதுவாகவே மனித சமுகத்துக்கு உள்ள கஷ்டங்களையும், குறைபாடு களையும் பற்றி உங்களுக்கு நான் விளக்க வேண்டி யதில்லை.
குறிப்பாக நமது நாட்டு மக்களிடையே உள்ள குறைபாடுகள் மற்ற நாட்டு மக்கள் குறைபாடுகளைவிட அதிகமாகவே இருந்து வருகின்றன. நமது குறைகளுக்கு நிவாரணம் அரசியல் மாறுதலால்தான் முடியும் என்பது சிலருடைய அபிப்பிராயம். ஆனால் சுயமரியாதை இயக்கம் இதை ஒப்புக் கொள்ளு வதில்லை. அரசியலானது சமுதாயக் கொள்கை யையும், மதக் கட்டளைகளையும் ஆதாரமாய் வைத்தே நடைபெற்று வருவதாகும். ஆதலால் எந்த அரசியல் மாற்றத்தாலும் இன்றுள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டுவிடும் என்று நாம் கனவுகூடக் காண முடியாது. அரசியல் கொள்கைகளை, சமுகம் தான் நிர்ணயிக்க வேண்டும். சமுகத்துக்கு ஆதாரம் முன் குறிப்பிட்ட சமுதாய பழக்க வழக்கங்களும், ஜாதி மதக் கட்டளைகளுமே ஆகும்.
எந்த நாட்டிலும் அரசாங்க ஆட்சித் திட்டம் சமுதாய, ஜாதி, மத பழக்க வழக்கங்களின் மீதே இருந்து வருகின்றன. ஏதோ இரண்டொரு அற்ப விஷயங்களே இதிலிருந்து விலக்கு பெற்றதாக இருக்கலாம். நம் நாட்டு அரசியல் சீர்திருத்தம் என்பதில், அரசாங்கத்தாராவது, சமுக மக்களாவது ஜாதி மதப் பழக்க வழக்கங்களில் மாறுதல் செய்யச் சிறிதும் சம்மதிப்பதில்லை.
நமது இன்றைய அரசாங்கமோ, இந்நாட்டு மக்களிடம் ஜாதி மத பழக்க வழக்கங்களைக் காப் பாற்றிக் கொடுப்பதாக உத்திரவாதம் கொடுத்துவிட்டு ஆட்சி புரிகின்றது என்பது நாம் அறியாததா?  இன்றைய நமது அரசியல் கிளர்ச்சியும், சுயராஜ்ஜிய முயற்சியும்கூட ஜாதி மத பழக்க வழக்கங்களுக்கு உத்திர வாதம் கொடுத்துவிட்டே (கிளர்ச்சியும், முயற் சியும்) நடை பெறுகின்றது. இன்றைய தினம் தோழர் ராஜகோபலாச்சாரி யாரால் எடுத்துக் காட்டப்படும் கராச்சித் திட்டத்தில் இந்த ஜவாப்புதாரித்தனமான உத்திரவாதம் கல்லுப்போல் உறுதிப்படுத்தப்பட்டிருக் கிறது. காங்கிரசு முயற்சி செய்யும் சுயராஜ்ஜியத்தில்
1)    The article in the constitution relating to fundamental rights, shall include a guarantee to the communities concerned of protection of their culture, language, scripts, education, profession, practice religion and religious endowments.

2)    Personal Laws shall be protected by specific provision to be embodied in the constitution.
1)            சுயராஜ்ஜிய அரசாங்கத்தில் ஒவ்வொரு வகுப்பாருடையவும் அவர்களது கலைகள், நாகரிகங்கள், பாஷை, கல்வி, தொழில், பழக்க வழக்கம், மதம், மத தர்ம சொத்துக்கள், ஸ்தாபனங்கள் முதலியவைகளைக் காப்பாற்றுதலாகியவைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி கூறி, உத்திரவாத மளிக்கப்படும்.
2)            ஒவ்வொரு சமுக தனிப்பட்ட உரிமை களையும் பற்றிய சட்டங்களும் காப்பாற்றப்படும் படியான திட்டத்தையும் சேர்க்கப்படும் - என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறது. அதுதான் கராச்சித் திட்டம் என்பது.
அந்நிய அரசராகிய பிரிட்டிஷ் ஆட்சியின் வாக்குறுதிகளின் பயனாகவே சமுக வாழ்வில் ஜாதிமதக் கொடுமையில் ஒரு கடுகளவு மாறுதல்கூட செய்வது கஷ்டமாய் இருந்து வருகிறது.
சாரதா சட்டம்கூட அதனாலேயே சுயமரியா தையற்று பிணமாகக் கிடக்கிறது. இப்படியிருக்கும் போது இனி வரப்போகும் சுயராஜ்ஜியத்திலும் சமுகப் பழக்க வழக்கம், ஜாதி ஆகியவைகளுக்கு ஜவாப்புதாரித்தனமும், உத்தரவாதமும், வாக்குறு தியும் கொடுக்கப்பட்டிருக்கும் போது அவைகளில் ஒரு சிறு மாறுதலாவது செய்யப்படக்கூடும் என்று யாராவது எதிர்பார்க்க முடியுமா?
ஆகவே இன்று இந்நாட்டு மக்களுக்கு உள்ள குறைபாடுகள் நீக்கப்படுவதற்கு, இன்றைய அரசியல் மாறுபட்டு விடுவதாலேயே ஏதாவது பலன் ஏற்பட்டுவிடும் என்பது வெறும் கனவாகத்தான் முடியும். இன்றுள்ள குறைபாடுகள் எல்லாம் இந்தியாவில் சுயராஜ்ஜியம் இருந்த காலத்திலும் இருந்து வந்தது தானே ஒழிய முகமதியர் ஆட்சியிலோ, பிரிட்டிஷார் ஆட்சியிலோ ஏற்பட்டு விட்டதாகச் சொல்லிவிட முடியாது.
மனிதனை மனிதன் இழிவுபடுத்தி அடிமைப் படுத்தும் குணமும், மனிதன் உழைப்பை மனிதன் அபகரித்துப் பொருள் சேர்த்து உழைப்பாளியை பட்டினி போட்டு கொடுமைப் படுத்திய குணமும், ராமராஜ்ஜியம் முதல் தர்ம தேவதை ராஜ்ஜியம் இடையாக, பிரிட்டிஷ் ராஜ்ஜியம் வரை ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகின்றது.
உண்மையை யோக்கியமாய் வீரமாய்ப் பேச வேண்டுமானால், முகமதிய ஆட்சியிலும் பிரிட்டிஷ் ஆட்சியிலும் ஓரளவு பழைய கொடுமைகளும், இழிவுகளும், குறைவுகளும் குறைந்திருக்கின்றன என்று புள்ளி விவரங்கள் காட்டலாம்.
இந்த நாட்டில் ஜாதியால் இழிவுபடுத்தப்பட்ட மக்கள் 100-க்கு 97 பேர்களாகும். ஜாதியால் அடிமைப் படுத்தப்பட்ட மக்கள் 100-க்கு 25 பேர்களாகும். மதத் தால் இழிவுபடுத்தப் பட்ட மக்கள் 100-க்கு 100 பேர் என்றுகூட சொல்லலாம். ஒவ்வொரு மதக்காரனும் மற்ற மதக்காரனை இழிவாய்த்தான் கருதுகின்றான். ஒவ்வொரு ஜாதியானும் மற்ற ஜாதியானை இழிவாய்த்தான் கருதுகிறான். பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் கீழ் ஜாதி என்பது இந்து மத சம்பிரதாயம். இப்படிப்பட்ட இந்த இழிவான நிலைமை மாற வேண்டுமானால் இன்றைய பிரிட்டிஷ் அரசியல் மாறுவதால் முடியுமா?
பெரும்பான்மையான மக்களின் பொருளாதாரக் கொடுமைக்கும், அவர்களது வாழ்க்கை நிலை இழி வுக்கும், ஜாதியும் மதமும் காரணமாய் இருக்கின்றதை யாராவது மறுக்க முடியுமா? எங்காவது பார்ப்பனன் பட்டினி கிடக்கின்றானா? எங்காவது பார்ப்பான் சரீரப் பாடுபடுகின்றானா? கூலிக்கு மூட்டை தூக்குகின்றானா? நடவு நட்டுத் தண்ணீர் கட்டுகின்றானா?அது போலவே பறையர் பள்ளர் போன்ற கூட்டத்தினர் வாழ்க்கை எங்கும் எப்படி இருக்கிறது பாருங்கள். பாடுபட்டும் இக் கூட்டத் தாரின் நிலைமை எவ்வளவு பரிதாபகரமானதாய் இருக்கின்றது. இதற்கு ஜாதிமதம் அல்லாமல் வேறு காரணம் என்ன? ஆகவே, ஜாதி மதத்தின் காரணமாய் சிலருக்கு மாத்திரம் உயர்வும், செல்வமும் அநேகர் களுக்கு இழிவும், தரித்திரமும் மக்களிடம் நிலவு கின்றதே தவிர பாடுபடாததாலும், பாடுபடுவதாலும் அந்நிய அரசாலும், சுயராஜ்ஜியத்தாலுமா நிலவு கின்றது என்பதைத் தயவுசெய்து யோக்கியமாய் நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.
கராச்சித் தீர்மானப்படி ஆட்சிப் புரியப் போகும் சுயராஜ்ஜியம் நமக்குக் கிடைத்தால், இந்தியா இந்த விஷயங்களில் இன்றுள்ள நிலையைவிட, கேடான நிலையையே அடையும் என்பதை உறுதியாய்க் கூறுவேன். மனிதனுடைய அவமானத்தையும், இழி வையும் போக்குவதற்கு ஒப்புக் கொள்ளாத சுயராஜ்ஜியம் பித்தலாட்டச் சூழ்ச்சி ராஜ்ஜியமாகுமே ஒழிய, யோக்கியமான ராஜ்ஜியம் ஆகாது.
******
மனிதன் பகுத்தறிவுவாதி; வளர்ச்சிக்கு உரியவன். அவன், வாழ்க்கையைச் சுமையாக, அமைத்துக் கொள்ளக் கூடாது.
மனிதச் சுதந்திரத்திற்கும் கவலையற்று வாழ்வதற்கும் ஏற்ற முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும்... எனவே, மனித வாழ்வு பெண்டாட்டி கட்டிக் கொண்டு குட்டி போட்டுக் கொண்டு, காப்பாற்ற மட்டும் என்று எண்ணாமல், மனிதச் சமுதாய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் பாடுபடுவது தான் என்பதை உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும்.
- தந்தை பெரியார்


 
 
 
தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  
1000 எழுத்துகள் மீதமுள்ளன

 
Security code
Refresh

டெங்குவை விரட்டுவோம்!

தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளாக டெங்குக் காய்ச்சலின் தாக்கம் அதிகம் உள்ளது. தற்போது சென்னை அரசு மருத்துவ மனைகளில் மட்டும் 100 பேருக்கும் மேல் டெங்கு அறிகுறிகளுடன் அனு மதிக்கப்பட்டு உள்ளார்கள். இருப் பினும், மக்களிடையே டெங்கு குறித்த போதிய விழிப்புணர்வு இன்றும் ஏற் படாமல் உள்ளது என்பதே நிதர்சனம்.
மருத்துவக் கண்காணிப்பு அவசியம்
தலைவலி, காய்ச்சல், தோலில் தடிப்புகள், உடம்பு வலி, களைப்பு, வாந்தி, வயிற்று வலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்பு வலி உள்ளிட்ட அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சையைத் தொடங்க வேண்டும். டெங்குக் காய்ச்ச லுக்கு மருத்துவக் கண்காணிப்பு மிகவும் அவசியம். எனவே, கவனக் குறைவாக இருப்பது ஆபத்தில் முடியக்கூடும்.
டெங்கு ஷாக் சிண்ட்ரோம்
சிலருக்கு ரத்தக்கசிவு, ‘டெங்கு ஷாக் சிண்ட்ரோம்’ ஆகியன ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது மிகவும் நல்லது. தட்டணுக்கள் அளவு குறைந்து, நுரையீரலின் கூட்டுப் பகுதியில் நீர் தேங்கிவிடுவதே ‘டெங்கு ஷாக் சிண்ட்ரோம்’. இது அபாயகரமான நிலை, உடனடியாகச் சிகிச்சையளிக்கா விட்டால் உயிரிழப்பு ஏற்படும் சாத்தியம் உண்டு.
மீளும் வழி
காய்ச்சல் 3 நாள்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவமனைக்குச் சென்று, என்.எஸ்.அய் ஆண்டிஜன் (NS1 Ag), டெங்கு அய்.ஜி.எம். (Dengue IgM)  அல்லது டெங்கு அய்.ஜி.ஜி (Dengue IGG) உள்ளிட்ட ரத்தப் பரிசோதனை களைச் செய்துகொள்ள வேண்டும். பொதுவாக, ஒருவருக்கு ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் வரை இருக்கும். டெங்கு காய்ச்சல் வந்தவ ருக்குத் தட்டணுக்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் கீழே குறைந்து விட லாம்.
எனவே, பிளேட்லெட் (Platelet) என் னும் ரத்தத் தட்டணுக்களின் எண் ணிக்கை உள்ளிட்ட பரிசோதனைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தொடர்ந்து செய்துகொள்ள வேண்டும். காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மாத் திரையும் உடல்வலிக்கு வலி நிவாரண மாத்திரைகளும் மருத்துவர்களால் தரப் படலாம். தட்டணுக்கள் குறைந்தவர் களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூல மாகத் தட்டணுக்கள் கொண்ட ரத்தம் செலுத்தப்படலாம். உடலிலுள்ள நீர்ச்சத்து குறையாமல் இருக்கப் பழச்சாறு, தண்ணீர் போன்றவற்றைத் தொடர்ந்து அருந்துவது நன்று.
நிலவேம்புக் கஷாயம்
டெங்குக் காய்ச்சல் வந்தவர்களுக்கு அது மீண்டும் வர வாய்ப்பு இருப்பதால், மிகக் கவனமாக இருக்க வேண்டும். டெங்குக் காய்ச்சலிலிருந்து மீண் டவர்கள், மருத்துவர் அறிவுறுத்தும்வரை ஓய்விலும் மருத்துவக் கண்காணிப்பிலும் இருப்பது மிகவும் அவசியம். நீர்ச்சத்து நிறைந்த கஞ்சி, இளநீர், பழச்சாறு போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்வது நல்ல பலன் தரும். நிலவேம்புக் கஷாயம் குடிப்பது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்க உதவும். இந்தக் கஷாயத்தை அனைவரும் குடிக்கலாம்.
நன்னீரில் உருவாகக்கூடிய ‘ஏடிஸ் எகிப்தி’ என்ற கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. டெங்குவை உருவாக்கக்கூடிய இந்தக் கொசுவின் உடல், கால்களில் கறுப்பு, வெள்ளை நிறப் புள்ளிகள் இருக்கும். ‘ஏடிஸ்’ கொசுக்கள் மூன்று வாரங்களுக்கு மேல் உயிர் வாழும் தன்மையுடையவை.
இவை பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும். வீடுகளில் சரியாக மூடப்படாத நீர் சேமிப்புத் தொட்டிகள், குப்பைக் கூளம், டயர்கள், சுத்தம் சுகாதாரமற்ற இடங்கள் உள்ளிட்ட இடங்களில் தேங்கியிருக்கும் நன்னீரில் ‘ஏடிஸ்’ கொசுக்கள் வளர்ச்சி அடைகின்றன. எனவே, சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டால் மட்டுமே இந்தக் கொசுக்களின் வளர்ச்சியைத் தடுக்க முடியும். டெங்கு காய்ச்சலை விரட்டி யடிக்க முடியும்.
‘ஏடிஸ்’ கொசுக்கள் மூன்று வாரங் களுக்கு மேல் உயிர் வாழும் தன்மை யுடையவை. வீடுகளில் சரியாக மூடப் படாத நீர் சேமிப்புத் தொட்டிகள், குப்பைக் கூளம், டயர்கள், சுத்தம் சுகாதாரமற்ற இடங்கள் உள்ளிட்ட இடங்களில் தேங்கியிருக்கும் நன்னீரில் ‘ஏடிஸ்’ கொசுக்கள் வளர்கின்றன.
*இஞ்சியை சிறிய துண்டு களாக்கி மென்று சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் நீங்கும்
*தினமும் கொய்யாப்பழம் சாப் பிட்டு வந்தால் கல்லீரல் நோய்கள் வராது
*மாதுளம் பழச்சாற்றுடன் தேங் காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டு வர நரம்பு பிரச்சினைகள் நீங்கும்

Thursday, August 29, 2019

பனியில் கலந்த பிளாஸ்டிக்

ஆர்ட்டிக் பனிக் கடல் பகுதியில் தூய பனி பெய்யும். ஆனால், அதிலும் பிளாஸ்டிக் நுண் துகள்கள் கலந்திருப்பதை, ஜெர் மனியின் ஆல்பிரட் வெகெனர் இன்ஸ்டிடி யூட்டின் விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
பவேரியா பகுதியில், அவர்கள் எடுத்த ஒரு லிட்டர் பனியில், 1.5 லட்சம் பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருந்தன. உரசும் வாகன சக்கரம் முதல் குழாய்கள் வரை, பலவழிகளில் பிளாஸ்டிக் துகள்கள் காற்றில் கலக்கின்றன.
உணவு வழியே மனித குடலுக்குள்ளும், குப்பைகளாக கடலுக்குள்ளும் கலந்துவிட்ட பிளாஸ்டிக், இப்போது காற்றின் வழியே நம் சுவாச பைகளுக்குள்ளும் வருகிறதா என, விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

தழும்பை தவிர்க்கும் மஞ்சள் பிளாஸ்திரி


மஞ்சள் ஒரு கிருமி நாசினி. புண்களை ஆற்றும் திறன் கொண்டது என்பது நம் பாட்டிகளுக்கே தெரிந்திருந்தது. அதை சுவிட்சர்லாந்திலுள்ள, எம்ப்பா ஆய்வு மய்யம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
விரைவில் கரையும் உயிரி பாலிமர்களால் ஆன பஞ்சு போன்ற பொருளில், மஞ்சளில் உள்ள, 'குர்குமின்' என்ற பொருளை வைத்து, புண்களின் மேல் பிளாஸ்திரி போல போட்டு சோதித்தனர், விஞ்ஞானிகள். தோலின் செல்கள், உயிரி பாலிமர்களுக்கு இடையே உள்ள சந்து, பொந்துகளில் புகுந்து வளர ஆரம்பித்தன. இப்படி வளரும் செல்கள் வழக்க மாக தழும்பை உருவாக்கும். ஆனால், உயிரி பாலிமரில் ஊற வைக்கப்பட்ட குர்குமின், செல்களை இயல்பாக வளர வைத் தன. இதனால், பெருமளவு தழும்பு உருவாகாமலேயே புண்கள் ஆறின. மஞ்சள் பிளாஸ்திரியை புண்ணின் வடிவத் திற்கு ஏற்ப வெட்டி ஒட்ட முடியும். உயிரி பிளாஸ்திரிக்கு வளைந்துகொடுக்கும் திறன் உண்டு என்பதால், முழங்கை, முழங்கால் பகுதிகளிலும் அதை ஒட்டி வைக்க முடியும்.
சோதனை கட்டத்திலிருக்கும் மஞ்சள் பிளாஸ்திரி விரைவில் சந்தைக்கு வரும் என, எதிர்பார்க்கலாம்.

http://viduthalai.in/e-paper/187368.html


இந்தியா, மத்திய கிழக்கு பகுதி போன்ற வெப்ப நாடுகளில், பல நுற்றாண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டது தான். அதை அமெரிக்காவிலுள்ள ஸ்டான்போர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகளான அஸ்வத் ராமன் உள்ளிட்டோர் நவீன கட்டடங்களுக்கு பயன்படுத்த முடியுமா என்று ஆராய்ந்தனர்.
அந்த ஆராய்ச்சியில் வெற்றி கிடைக் கவே, 'ஸ்கை கூல்' என்ற நிறுவனத்தையும் துவங்கி, வெள்ளோட்டம் பார்க்க ஆரம் பித்துள்ளனர். அது என்ன தொழில் நுட்பம்? சூரிய ஒளியையும் வெப்பத்தையும் உள்வாங்காமல் வெளியே பிரதிபலிப் பதுதான் அந்த குளிர்ச்சி தொழில்நுட்பம்.
அந்தக் கால கட்டடக் கலை யுக்திகளை ஆராய்ந்த பிறகு, அதே தன்மையை கொண்ட ஒரு படலத்தை ஆய்வகத்தில் உருவாக்கியுள்ளனர், ஸ்டான்போர்டு விஞ்ஞானிகள். அந்தப் படலத்தை ஒரு குடுவையின் மேல் போர்த்தினால், அதைச் சுற்றியுள்ள காற்றின் வெப்பத்தைவிட, 5 முதல், 10 டிகிரி செல்ஷியஸ் வரை குடுவைக்கு உள்ளே வெப்ப அளவு குறைவாகிவிடுகிறது.
இத்தனைக்கும் ஒரு யூனிட் மின்சாரம் கூட இதற்கு தேவையில்லை.ஸ்கை கூல் படலத்தை பெரிய அளவில் தயாரித்து கட்டடங்களின் வெளி சுவர்களில் பொருத்தினால், கட்டடத்திற்குள்ளே குளிர்ச்சியாக இருக்கும். இதனால், அதிக மின்செலவில், 'ஏசி' போட வேண்டிய தில்லை. 'ஏசி'யால் உருவாகும் புவி வெப்பமாதல் விளைவும் குறையும். ராமன் குழுவினரின் வெள்ளோட்டம் பலன் தந்தால், 'ஏசி'யின் சந்தை படுத்துவிடும் என்பதோடு, மின்சார விரயமும் தவிர்க் கப்படும்.

மீனவர் வயிற்றில் அடியா? மீனவர் நலத்துறையும் மத்திய அரசின் கைகளுக்கு செல்லும் அவலம்


மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையிலும், மீனவர் நலனில் மாநில அரசிற்கு உள்ள உரிமையைப் பறிக்ககும் வகையிலும் மோடி தலைமையிலான பாஜக அரசு புதிய திட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள் ளது. இதன் மூலம் மீனவர் உரிமை பறிபோகும் அபாயம் உருவாகி யுள்ளது.
ஆழ்கடல் மீன் பிடித்தல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடர்பாக புதிய சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும், இதற்கான சட்ட முன்வடிவை மாநில அரசுகளுக்கு அனுப்பி கருத்துக் கோரியுள்ளது.
இப்புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் ஆழ்கடல் தொடர் பான மாநில அரசுகளின் அதிகா ரங்கள் பறிபோகும் மேலும், விசைப் படகு மீனவர்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரமும் மத்திய அரசின் வசம் சென்றுவிடும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையின்படி இது வரை, ஆழ்கடலில் 12 நாட்டிக்கல் மைல் வரையிலான கடற்பரப்பில் மீன்பிடி உரிமை வழங்குதல் உள் ளிட்ட கட்டுப்பாடுகள் மாநில அரசு வசம் இருந்து வருகிறது.
இந்நிலையில், புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க, விசைப்படகுகளுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசின் வசம் கொண்டு வர பா.ஜ.க முயற்சித்து வருகிறது.
இதன் மூலம் எல்லைக் கட்டுப் பாடின்றி அந்நிய கார்பரேட் நிறு வனங்களுக்கு மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுவிடும்.
மேலும், மாநில அரசின் உரிமை பறிக்கப்பட்டால் காலங்காலமாகச் செய்து வரும் மீன்பிடித் தொழில் கடுமையான பாதிப்பைச் சந்திக்க நேரிடும் மேலும் மாநில அரசு
களின் மூலம் மீனவர் களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் பறிக்கப் பட்டுவிடும், இதன் மூலம் மீனவர்கள் பெரும் கார்பரேட் நிறுவனங்களுக்கு கொத்தடிமை களாக சென்று மீன் பிடி தொழிலை செய்யவேண்டிய அவலத்திற்கு ஆளாவார்கள்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...