Saturday, April 13, 2019

பாஜகவில் உள்ள தமிழர்கள் சிந்திப்பார்களா?

பாரதிய ஜனதாவோ, ஆர். எஸ். எஸ் - சோ கடந்த அய்ந்து வருடமாக தமிழ்நாட்டில் நடத்திய கூட்டங்களில் பிரச்சாரங்களில் வீர சிவாஜி, சாவர்க்கர் கேட்கேவர் படங்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்களெல்லாம் தேசபக்தர்கள்னு பொய் சொல்லுவாங்க இருந்தாலும் பரவால்ல விட்றலாம்.
இதே பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் வடமாநிலங்களில் நடத்திய கூட்டங்களில் தமிழ்நாட்டின் தேசத்திற்காக உயிரை கொடுத்த மருது சகோதரர்கள் பூலித்தேவன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், வ.உ.சி, அழகுமுத்து கோன், கட்டபொம்மன், சுந்தரலிங்கம், போன்றோரின் படங்களை வடமாநிலங்களில் எங்காவது பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி இருக்கிறார்களா?
இல்லை என்றால் அவர்களின் நோக்கம் என்ன?.
வடநாட்டு மார்வாடிகளை கூட்டிவந்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பின்புலமாக இருக்கும் பாரதிய ஜனதா, ஆர் எஸ் எஸ், தமிழ்நாட்டு முதலியார்களையோ, செட்டியார்களையோ, நாடார்களையோ, கவுண்டர்களையோ குஜராத், ராஜஸ்தான் டில்லி கூட்டிச் சென்று தொழில் தொடங்குவதற்கு, வளர்வதற்கு வாய்ப்பளித்து இருக் கிறார்களா? இந்திய துணைக்கண்ட மக்களின் பணத்தை வங்கிகளின் மூலம் கொள்ளையடிக்கவைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறவர்களில் பெரும்பான்மையோர் மோடி மற்றும் அமித்ஷா வின் இனமான குஜராத் மார்வாடி இனம் என்பதை நினைவில் கொள்வோமாக!
வடநாட்டு ராமனை, கிருஷ்ண ஜெயந்தியை, ஹோலியை தமிழ்நாட்டில் விழா எடுக்கும் பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ் தமிழ்நாட்டின் முருகனுக்கோ, கருப்பசாமிக்கோ, அய்யனார் போன்ற கடவுளர்களுக்கோ வடநாட்டில் விழா எடுத்திருக் கிறார்களா? இல்லை என்றால் அவர்களின் நோக்கம் என்ன?
இந்தியை, சமஸ்கிருதத்தை தமிழகத்தில் திணிக்கும் இந்த வடநாட்டு கொள்ளைக்கார கும்பல் தமிழை உத்தரப் பிரதேசத்திலோ, குஜராத்திலோ, பீகாரிலோ திணிப்பார்களா? அப்படி என்றால் இவர்களின் நோக்கம் தான் என்ன?
மதத்தைக்காட்டி தமிழ்மொழியை, தமிழர் பண்பாட்டை, தமிழர் வாழ்வாதாரத்தை, தமிழக இயற்கை வளங்களை சூறையாடுவது, தமிழினத்தை இரண்டாந்தர குடிமக்களாக்கி சமுகநீதியை ஒழித்து அவரவர் குலத்தொழிலை செய்ய வைத்து பார்ப்பன அடிமைகளாக்குவது என்பதைத்தவிர வேறொன்றுமல்ல!
பிஜேபி, ஆர்எஸ்எஸ் என்பது தமிழர்களின் நான்காயிரம் ஆண்டு வரலாற்று எதிரியின் நவீன வடிவம் என்பதை புரிந்து கொண்டால் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.
சிந்து சமவெளியில் இருந்து நம்மை விரட்டி அடித்தவர்கள் இப்போது தமிழ்நாட்டிலும் நம்மை துடைத்தெறிய மதம் என்னும் ஆயுதத்தைக் கொண்டு பரவி இருக்கிறார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகமான அறிவுச் சமுகம் ஆகிய தமிழ் சமுகம் இந்த எதிரிகளை புத்திசாலித்தனத்தோடு துடைத்தெறிய வேண்டும்.. தமிழ் சமுகத்திற்கு வரும் பிரச்சினைகளுக்கு மூல காரணம் இவர்கள் தான் என்பதை புரிந்துகொள்வோம். நம் கையை வைத்தே நம் கண்ணை குத்துவது தான் ஆரிய பார்ப்பன குள்ளநரித்தந்திரம்.
தமிழன் கண்டாய்! ஆரியன் கண்டாய்! - என்ற திருமூலர் ஆரிய இனத்தை வேறுபடுத்திக்காட்டியதும், ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன் என்ற தமிழிலக்கியப்பதிவுகளும், "ஆரிய பாசையாகிய சமஸ்கிருதத்தில் நாட்டம் கொள்ளாமல் தென்மொழியாகிய தமிழில் நாட்டம் கொள்ளச்செய்த இறைவனுக்கு நன்றி" - என்று வள்ளலார் சொன்னதெல்லாம் ஆரிய இனத்திற்கும் தமிழினத்திற்குமான முரண்பாடுகளின் வரலாற்று தொகுப்பாக நாம் பார்க்கவேண்டாமா?

தமிழர்கள் மாட்டிறைச்சி உண்ணாதவர்களா?

தமிழர்கள் மாட்டிறைச்சியை சாப்பிடாத வர்களா? பாஜகவினரின் பொய்ப்பிரச்சாரத் திற்கு பதில் சங்ககாலம் முதலே மாட்டிறைச்சி தமிழர்களின் உணவாக இருந்தது.  தமிழக பாஜகவினர் மாட்டிறைச்சித் தொடர்பான விவகாரத்தில் தமிழர்கள் மாடுகளைத் தெய்வமாக மதிப்பவர்கள், தெய்வமாக மதிக்கும் ஒன்றை எப்படி அவர்கள் கொலை செய்து உண்ணுவார்கள்.
தமிழர்கள் வரலாற்றில் மாட்டிறைச்சி உண்டதாக சரித்திரம் இல்லை, இதெல்லாம் அரபு நாட்டிலிருந்து வந்த இஸ்லாமியர்களும், முகலாயர்களும் தமிழகத்தில் வந்த பிறகு மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் தாழ்த்தப் பட்டவர்களிடம் தொற்றிக்கொண்டது தமிழகத்தில் உயர் ஜாதியினர் இன்றும் மாட்டிறைச்சி உண்ணுவதில்லை, என்று எல்லா விவாதங்களிலும் பேசி வருகின்றனார். இதையே புதிய தமிழகம் கட்சி கிருஷ்ண சாமியும் கூறிவருகிறார். தமிழர்கள் மாட்டி றைச்சியை உண்ணுவதில்லை, சில அரசியல் கட்சித்தலைவர்களும் அமைப்பு களும் தமிழர் களின் வரலாற்றை திரிக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர் என்று கூறினார்.
ஆனால் தமிழர்கள் கிறிஸ்துபிறப்பிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உணவிற்காக பசு மாட்டிறைச்சியை சாப்பிட்டனர் என்ற வரலாற்றுச் சான்றுகள் தமிழர்களின் அன்றாட வாழ்க்கை முறைகளைக் கூறும் சங்க காலப் பாடல்களில் பெருகிக் கிடைக்கிறது, அதில் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம்.

அகநானூறு 129ஆம் பாடலில் பின் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

கலங்குமுனைச் சீறூர் கைதலை வைப்பக்
கொழுப்புஆ தின்ற கூர்ம்படை மழவர்

விளக்கம்: சிறிய ஊரினர் கையைத் தலைமீது வைத்து வருந்தும்படி அவருடைய கொழுத்த ஆவைக் (பசுவை) கவர்ந்து சென்று தின்ற கூரிய படையையுடைய மழவர்.
இதேபோன்று அகநானூற்றின் 249ஆவது பாடல் மாட்டிறைச்சியைப் பண்டைத் தமிழர்கள் உண்பது பற்றிப் பின்வருமாறு கூறுகின்றது:

“தோகை தூவித் தொடைத்தார் மழவர்
நாகுஆ வீழ்த்துத் திற்றி தின்ற
புலவுகளம் துழைஇய துகள்வாய்க் கோடை
நீள்வரைச் சிலம்பின் இரைவேட்டு எழுந்த”

விளக்கம்:
மயிலின் தோகையிலுள்ள இறகுகளை மாலையாகத் தொடுத்து அணிபவர் மழவர்கள். பல்வகையான பூக்களை உடையதான காட்டின் சுருங்கிய நிழல்களிலே தங்கிக் கன்றினையுடைய பசுவைக் கொன்று அதன் ஊனைச் சுட்டுத் தின்பார்கள். புலால் வீசும் அந்த இடத்தைத் துழாவியவாறு ஊண் துணுக்குள் கலந்த புழுதியைத் தன்பால் கொண்டதாக மேல்காற்று எழுந்து வீசும்.
அகநானூற்றின் 309ஆவது பாடல் பசுவை தமிழ்க் கடவுளுக்கு பலிகொடுத்துப் பின்னர் அதன் இறைச்சியை மறவர்கள் உண வாக உட்கொண்டது பற்றிக் குறிப்பிடு கின்றது:

“வயவாய் எறிந்து வில்லின் நீக்கி
பயநிரை தழீஇய கடுங்கண் மறவர்
அம்புசேண் படுத்து வன்புலத்து உய்த்தெனத்
தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்
கொழுப்பா எறிந்து குருதி தூஉய்ப்
புலவுப் புழுக்குண்ட வான்கண் அகலறைக்”

விளக்கம்:
கொழுப்பா  கொழுத்த பசு
வெற்றி வாளினாலே வெட்டிக் கொன்றும், வில்வினைத் தொழிலினாலே அடித்து வெருட்டியும், பசுமந்தைகளைக் கைக்கொண்ட அஞ்சாமையாளரான மற வர்கள், அம்புகளைத் தொலைவுக்குச் செல்லுமாறு செலுத்தி நிரைகாவலரை ஓட்டியபின், வன்மையான காட்டு நிலத்தை அடைந்தனர். அடைந்தவராக தெய்வம் குடிகொண்டிருக்கும் பருத்த அடியினை யுடைய வேம்பிற்கு கொழுத்த ஒரு பசுவினைக் கொன்று பலியிட்டனர். அதன் குருதியைத் தூவித் தெய்வத்தைப் போற்றி வழிபட்டனர். பின் அப் பசுவின் புலாலினைப் பொசுக்கி உண்டு விட்டுச் சென்றனர்.
இச்சங்க இலக்கியங்களில் இருந்து பண்டைத் தமிழர்கள் ஏனைய இறைச்சி வகைகளை மட்டுமன்றி மாட்டிறைச்சியையும் உட்கொண்டனர் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அத்தோடு தாம் வழிபட்ட தெய்வங்களுக்கு ஆடுகளையும், பசுக் களையும் பலிகொடுத்துப் பின்னர் அவற்றைப் பண்டைத் தமிழர்கள் உட்கொண்டனர் என்பதையும் நாம் உணர முடியும்.

பிரதமரின் உள்நாட்டுப் பயணச் செலவுகள்: ஆர்டிஅய்-யில் தகவல் இல்லையாம்!

பிரதமரின் உள்நாட்டு பயணங்களுக் கான போக்குவரத்து செலவுகள் குறித்து நாங்கள் எந்த ஆவ ணங்களையும் பராமரிக்க வில்லை என்று  பிரதமர் அலு வலகம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(ஆர்டிஅய்) கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரதமர் அலுவலகம் இவ்வாறு பதிலளித்துள்ளது.
மகாராட்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த ஆர்வலர் அனில் கல்கலி ஆர்டிஅய் சட் டத்தின்கீழ், பிரதமர் நரேந்திர மோடியின் உள்நாட்டு பயணங் களுக்கான செலவு மற்றும் வெளிநாடுகளுக்கு பிரதமர் மேற்கொள்ளும் பயணங் களுக்கு ஏற்படும் செலவு குறித்த தகவலை பிரதமர் அலு வலகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பதி லில் கூறப்பட்டிருப்பதாவது:
பிரதமரின் உள்நாட்டு பய ணங்களுக்கு ஏற்படும் செல வுகள் குறித்து ஆவணங்கள் பராமரிக்கும் பணி பிரதமர் அலுவலகத்தின் பணிகளுக்குள் வராது. ஏனெனில், பிரதமர் மேற்கொள்ளும் உள்நாட்டு பயணங்கள் பல அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். தேர்தல் பிரச்சாரத்துக்காக  பிரதமர்  மேற்கொள்ளும் பய ணங்கள் அதிகாரப்பூர்வமானது அல்ல.  அந்த பயணங்களுக்கு நாங்கள் செலவு செய்ய வேண் டியதில்லை. அதனால் அந்த தகவல்கள் குறித்து எந்த ஆவணங்களையும் நாங்கள் பராமரிக்கவில்லை. பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கு ஏற்பட்ட செலவுகள் குறித்து பிரதமர் அலுவலகத்தின் இணையதளத்தை பார்வையிடுங்கள் என்று கூறப்பட் டிருந்தது.


மத்திய அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு ஏற்பட்ட செலவுகள் குறித்து கல்கலி எழுப்பியிருந்த கேள் விக்கு,  இதற்கான பதிலை வழங்குவதற்கான அதிகாரம் உள்துறை அமைச்சகத்திடம் தான் உள்ளது என்று கூறி அந்த  அமைச்சகத்துக்கு கல்கலியின் மனுவை பிரதமர் அலுவலகம் அனுப்பி வைத்தது.

நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை

இந்திய நாடாளுமன்றத்தில் இசுலாமியர்களின் எண்ணிக்கை கேள்விக்குறியாகிவிட்டது.
இந்தியாவின் எட்டாவது மக்களவையில் மொத்தம் 46 உறுப்பினர்கள் முஸ்லிம்களாக இருந்ததுண்டு.  2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 282 இடங்களில் வெற்றிபெற்றது. அப்போது முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 22ஆக சரிவடைந்தது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது உத்தரப்பிரதேசத்திலுள்ள 80 மக்களவைத் தொகுதிகளி லிருந்து ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி, நாட்டில் மொத்தம் 14.2 சதவீதம் பேர் இசுலாமிய சமயத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்.
குறிப்பிட்ட சமுதாயத்தின் மக்கள் தொகைக்கேற்ப பிரதிநித்துவம் இருக்க வேண்டுமென்ற ஒரு கருத்துண்டு. அந்த வகையில் பார்த்தாலும் கூட, இந்திய மக்களவையில் மொத்தம் உள்ள 545 இடங்களில், 77 இடங்களில் இசுலா மியர்கள் இருக்க வேண்டும். ஆனால், இந்திய மக்களவை வரலாற்றில் இந்த எண்ணிக்கை தொடப்பட்டதாக சரித் திரமே இல்லை. இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்த லின்போது மொத்தம் 449 இடங்கள் இருந்தன. அவற்றில் இசுலாமிய உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 21, அதாவது 4.29 சதவீதம் மட்டுந்தான்.
16ஆவது மக்களவைத் தேர்தலின்போது, நாட்டிலுல்ள 29 மாநிலங்களில் வெறும் 7 மாநிலங்களில் இருந்து மட்டும் தான் முஸ்லிம் வேட்பாளர்கள் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதாவது, அதிகபட்சமாக மேற்கு வங்கத்திலிருந்து எட்டு பேரும், பீகாரிலிருந்து 4 பேரும், ஜம்மு  காஷ்மீர் மற்றும் கேரளாவிலிருந்து தலா மூன்று பேரும், இருவர் அசாமிலிருந்தும், தமிழ்நாடு-தெலங்கானா மற்றும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு ஆகியவற்றிலிருந்து தலா ஒருவர் எனத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தனர். மேற்குறிப்பிட்டுள்ள இந்த மாநிலங்களில் மட்டும், இந்தியாவிலுள்ள மொத்த முஸ்லிம்களில் 46 சதவீதத்தினர் வசிக்கின்றனர்.
மற்ற 22 மாநிலங்கள் மற்றும் ஆறு யூனியன் பிரதேசங் களிலிருந்து ஒருவர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இதுவரை நடந்த 16 மக்களவைத் தேர்தல் குறித்த தரவுகளை உற்று நோக்கினால் சில முக்கிய விடயங்கள் தெரிய வருகின்றன. இந்தியாவின் முதலாவது மக்களவைத் தேர்தலின்போது, இசுலாமிய உறுப்பினர்களின் எண் ணிக்கை 21ஆக இருந்த நிலையில், அது சீராக அதிகரித்து, இருப்பதி லேயே அதிகபட்சமாக ஏழாவது மக்களவையில் 49 உறுப்பினர்களாக இருந்தது.
இந்தியாவில் இசுலாமியர்களின் நிலை, பட்டியல் இனமக்களை விட மோசமாக உள்ளதாக 2006ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சச்சார் குழுவின் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அய்ந்து ஆண்டுகளில் இசுலாமியர்களுக்கு எதிராக அதிக மோதல்கள் நடைபெற்றுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் சமுக விரோதிகளைக் கொல்லுகிறோம் என்ற பெயரில் சாமியார் ஆதித்யநாத் அரசு 2018ஆம்  ஆண்டில் மட்டும் 470 என்கவுன்ட்டர்கள் நடத்தினார்கள்.
இதில் 113 இசுலாமிய இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  மாட்டிறைச்சி வதந்தி தொடர்பாக 112 பேர் கொல்லப் பட்டனர், அக்லாக், பஹலுகான், இஸாஸ், அஸ்லாம், முகமது இசுமாயில், நவாஸ் கான் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது, ரயிலில் உடன் பயணம் செய்த இசுலாமிய சிறுவனை, "நீ மாட்டிறைச்சி சாப்பிட்டவன் தானே" என்று கூறி அடித்தே கொலை செய்துள்ளனர். உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய மோடி "உங்களுக்கு கபரிஸ் தான் வேண்டுமா, சம்சான்கட் வேண்டுமா?" (இசுலாமியர் சுடுகாடு வேண்டுமா - இந்து எரியூட்டும் இடம் வேண்டுமா?) என்று வெளிப் படையாகவே மதவெறுப்பை உமிழ்ந்துள்ளார். நாட்டின் தலைமைப் பதவியில் இருக்கும் ஒருவர் இப்படிப் பேசுவது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை. துணைக் குடியரசுத்தலைவராக இருந்த ஹமித் அன்சாரியைக் கூட மதரீதியாக அமைச்சரவை சகாக்கள் பேசும் போது அதை அவர் ஆமோதித்து அமைதிகாத்து இருந்தார் பிரதமர் மோடி.
வயநாட்டில் வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்த ராகுல்காந்தியை விமர்சனம் செய்யும் போது "இசுலாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் போட்டியிடுகிறார், இந்துக்கள் அவரை ஏற்கமாட்டார்கள் என்ற அச்சம் அவருக்குள்ளது" என்று மோடி மீண்டும் மதவெறி விமர்சனம் செய்தார், இது குறித்து இதுவரை தேர்தல் ஆணையம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே போல் தேசியக் கட்சிகளில் ஒன்றான முஸ்லிம் லீக் கட்சியை சாமியார் ஆதித்யநாத் "நாட்டை நோயின் பிடியில் சிக்கவைக்க வந்த வைரஸ்" என்று கூறியிருந்தார். இதற்கும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை ஒன்றுமே எடுக்காமல் அமைதி காத்து வருவதும் குறிப்பிடத்தக்க தாகும்.
எல்லாம் காவி மயம் - என்னதான் நடக்காது

பாஜ.வுக்கு வாக்களிக்கும்படி ராணுவ வீரர்கள் நிர்பந்தம்

 பாஜவுக்கு வாக்களிக் கும்படி வாக்காளர்களை துணை ராணுவ வீரர்கள்நிர்பந்தம்செய் வதாக, தேசிய மாநாட்டுகட்சியும், பிடிபி.யும் புகார் செய்துள்ளன.
மக்களவைதேர்தல் முதல் கட்டவாக்குப்பதிவுநேற்று நடந்தது.இதில்ஜம்முவில்உள்ள பூஞ்ச்மாவட்டத்தில்சிலஇடங் களில் வாக்குப்பதிவு இயந்தி ரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பிடிபி (மக்கள் ஜனநாயககட்சி)தலைவர்மெக பூபா முப்தி டிவீட்டில், பாஜ வுக்குவாக்களிக்காதசில வாக்கா ளர்களை பிஎஸ்எப் வீரர்கள் கடுமையாக நடத்தியது என்று கூறியிருந்தார்.


அவரது வீடியோவில் பாஜவுக்கு எதிராக வாக்காளர்கள் முழக்கமிட்ட காட்சிகள் இடம் பெற்றிருந்தன மெகபூபா முப்தி வெளியிட்ட பதிவில், ஒரு வாக் காளர் பாஜவுக்கு வாக்களிக்க மறுத்ததால் அவரை இழுத்து வந்து வெளியேற்றுகின்றனர். எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்ற துடிப்பில், அதிகாரத்தைத்தவறாகப்பயன் படுத்துகின்றனர்என குறிப்பிட் டுள்ளார்.தேசியமாநாட்டுகட்சி யின்ஜம்மு மாகாண தலைவர் தேவிந்தரும், அராய் மால்கா பகுதியில், வாக்காளர்களை பாஜ வுக்கு வாக்களிக்குமாறு பிஎஸ்எப் வீரர்கள் நிர்பந்தப்படுத்தியதை பதிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசு தொங்கு சதை அ.தி.மு.க. அரசு நீடிக்கலாமா?

* 2015 டிசம்பரில் சென்னை வெள்ள பாதிப்புக்கு ஆளானபோது (18 பேர் உயி ரிழப்பு) நிவாரணத் தொகையாகத் தமிழ்நாடு அரசு கேட்ட தொகை ரூ.13,731 கோடி; மத்திய பிஜே.பி. அரசு கொடுத்ததோ வெறும் 1940 கோடி ரூபாயே!
* 2011 டிசம்பரில் வர்தா புயலின்போது (38 பேர் உயிரிழப்பு) அ.தி.மு.க. அரசால் மத்திய அரசிடம் கேட்கப்பட்ட நிவாரண நிதி ரூ.22,537 கோடி. மத்திய பி.ஜே.பி. அரசு கொடுத்ததோ ரூ.266.17 கோடி மட்டும்தான்.
* 2017 நவம்பர் ஒக்கிப் புயலின்போது- (600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போயினர்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 238) இந்த இழப்பிலிருந்து மீள அ.தி.மு.க. அரசு கேட்ட தொகை ரூ.13,520 கோடி. ஆனால், மோடி அரசு தூக்கிப் போட்ட தொகையோ வெறும் 280 கோடி ரூபாய்.
* 2018 நவம்பரில் ஏற்பட்ட கஜா புயலால் (உயிரிழப்பு 63 பேர் - விவசாய நிலங்கள் அழிவு 88 ஆயிரம் ஹெக்டர் பரப்பு) பாதிக்கப்பட்டதற்காக மத்திய அரசிடம் அ.தி.மு.க. அரசு கோரிய தொகை ரூ.15 ஆயிரம் கோடி. மத்திய பி.ஜே.பி. அரசு பிச்சைக் காசாக எறிந்த தொகையோ ரூ.1,146 கோடி.
* 2017 இல் ஏற்பட்ட வறட்சிக்காக தமிழ்நாடு அரசு கேட்ட நிதியோ ரூ.39,655 கோடி. மத்திய மோடி அரசு கிள்ளிக் கொடுத்தது எவ்வளவு தெரியுமா? ரூ.1748 கோடியே!
தமிழ்நாட்டு வாக்காளர்களே, தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்கும் மோடியின் பி.ஜே.பி. அரசு மீண்டும் வரலாமா?
முதுகெலும்பு இல்லாமல் பி.ஜே.பி.யின் தொங்கு சதையாக இருக்கும் அ.இ.அ.தி.மு.க. அரசுதான் நீடிக்கலாமா?

Thursday, April 11, 2019

அஞ்சல் துறையில் ஆள் எடுப்பு வடவர்களை திணிக்க சூழ்ச்சி!

தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிளை அஞ்சல் அதிகாரி, உதவி கிளை அஞ்சல் அதிகாரி மற்றும் தபால் காரர் உள்ளிட்ட  பதவிகளுக்கான 4,442 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு எனவும், இப்பணிக்கு  இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. பணியிடங்களுக்கு  விண்ணப்பிக்க ஏப்ரல் 15ஆம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில்  இந்த அஞ்சலக இணையதள சர்வர் மார்ச் 28ஆம் தேதி முதல்  முடங்கிக் காணப்படுகிறது.  இதனால்  பணியிடங்களுக்காக  விண்ணப்பிப்பது பாதிக்கப்பட் டுள்ளது.  இந்த சர்வர் முடக்கத்தை சீர்செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை என இப்பணிக்கு விண்ணப்பிக்க காத்திருப்போர் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அஞ்சல் துறை அதிகாரிகள் இந்த  சர்வர் முடக்கத்தை சீர்செய்ய வேண்டும் எனவும், விண்ணப் பிக்கும் காலக்கெடு தேதியை  நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மார்ச் 15 ஆம் தேதி இந்திய அஞ்சல்துறை வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது, அதுவும் முக்கிய மாக வட இந்திய ஊடகங்களில் அதிகமாக விளம்பரம் வெளியிடப்பட்டது. இதில் ஒடிசா, அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உள்ளவர்கள் மிகவும் அதிகமாக விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்தில் வேலைவாய்ப்பு குறித்த விளம்பரங்கள் 5.ஆம் தேதி ஏப்ரல் அன்று வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டிலோ யாரும் விண்ணப்பிக்க முடியாத அளவுக்கு சர்வர் முடக்கப்பட்டது.  இதனை ஏதேச்சை யாக நடந்ததாக நம்ப தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்லர். புகார்கள் தெரிவிக்கப்பட்டும் சரி செய்யாததற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?

வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பெருவாரியாக விண்ணப்பித்தனர் என்பதன் மூலம் இதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சி - இரகசியம் தெரிய வில்லையா?

பிரவுசிங் மய்யங்களில் 'சர்வர்' வேலை செய்யவில்லை என்ற அறிவிப்பும் தொங்குகிறது.

தமிழகத்தைத் தொடர்ந்து கேரளாவிலும் இந்திக் காரர்கள் மலையாளத்தில் முதல் மதிப்பெண் பெற்றது, அவர்கள் தேர்வு நடைபெறும் மய்யத்திற்கு வினாக்கள் அடங்கிய கேள்வித்தாள் பட்டியலுடன் நுழைந்தது குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது குறித்து என்.எப்.பி.இ-யின் தலைவர் ஏ.என்.நந்தா கூறியதாவது, "தமிழகத்தில் நடந்த தேர்வில் தமிழ் தெரியாத இந்தி மாணவர் தமிழ் இலக்கணத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். அதே போல் சமீபத்தில் நடந்த மலையாள மொழி தேர்வில் அரியானா மாணவர் வினாக்கள் அடங்கிய கேள்வித்தாளை அலைப்பேசியில் படம் பிடித்து கொண்டு வந்துள்ளார்.  இந்த இரு சம்பவங்கள்மூலம் அஞ்சல் துறையில் மிகப்பெரும் மோசடிகள் நடைபெறுவது தெளிவாக தெரியவந்துள்ளது. ஆனால் இது குறித்து இதுவரை சம்பந்தப் பட்ட அஞ்சல் துறை எந்த ஒரு பதிலும் கூறாமல் மவுனம் காத்துவருகிறது. இதன் பின்னணியில் அஞ்சல் துறையின் சில அதிகாரிகள் இருப்பதும், மிகப் பெரிய மோசடி இத்தனை நாட்களாக நடந்து வருவதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து மத்திய அஞ்சல் துறை செயலாளர் ஆர்.என்.பரசாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம்" என்றார். இவ்விவகாரம் குறித்து காசர்கோட் நாடாளுமன்ற உறுப்பினர் பி.கருணாகரன் கூறியதாவது, "அஞ்சல் துறையில் இந்தி பேசுபவர்களை வேண்டுமென்றே தென்மாநிலங்களுக்கு அனுப்பும் மோசடியைச் செய்து வருகின்றனர். இதனால் எங்கள் மாநிலத்தின் இளைஞர் களுக்கு வேலை கிடைக்காமல் போகிறது, இது குறித்து மோடிக்கும், தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். அதில் இந்த விவகாரம் குறித்து சிபிஅய் விசாரணை வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளேன்" என்று கூறினார்.

இதைப் பார்க்கும் போது தென் மாநிலங்கள் அனைத்திலும் இந்தி பேசும் வட இந்தியர்களைத் திணிக்கும் சூழ்ச்சி பின்னப்பட்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இரயில்வேயில், அஞ்சலகங்களில், வங்கிகளில் எல்லாம் தமிழ் தெரியாத இந்திக்காரர்கள் வந்து குவிந்து விட்டனர். ஏற்கெனவே ஒட்டு மொத்த வணிகங்கள் எல்லாம் வடவர்கள் கைகளில் குவிந்த நிலையில் மத்திய அரசு அலுவலகங்களிலும் வடவர் ஆதிக்கம் என்பது  அபாயகரமானதாகும். மறுபடியும் வடவர் எதிர்ப்பை முன்னிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...