Saturday, April 13, 2019

பிரதமரின் உள்நாட்டுப் பயணச் செலவுகள்: ஆர்டிஅய்-யில் தகவல் இல்லையாம்!

பிரதமரின் உள்நாட்டு பயணங்களுக் கான போக்குவரத்து செலவுகள் குறித்து நாங்கள் எந்த ஆவ ணங்களையும் பராமரிக்க வில்லை என்று  பிரதமர் அலு வலகம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(ஆர்டிஅய்) கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரதமர் அலுவலகம் இவ்வாறு பதிலளித்துள்ளது.
மகாராட்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த ஆர்வலர் அனில் கல்கலி ஆர்டிஅய் சட் டத்தின்கீழ், பிரதமர் நரேந்திர மோடியின் உள்நாட்டு பயணங் களுக்கான செலவு மற்றும் வெளிநாடுகளுக்கு பிரதமர் மேற்கொள்ளும் பயணங் களுக்கு ஏற்படும் செலவு குறித்த தகவலை பிரதமர் அலு வலகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பிரதமர் அலுவலகம் அளித்துள்ள பதி லில் கூறப்பட்டிருப்பதாவது:
பிரதமரின் உள்நாட்டு பய ணங்களுக்கு ஏற்படும் செல வுகள் குறித்து ஆவணங்கள் பராமரிக்கும் பணி பிரதமர் அலுவலகத்தின் பணிகளுக்குள் வராது. ஏனெனில், பிரதமர் மேற்கொள்ளும் உள்நாட்டு பயணங்கள் பல அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். தேர்தல் பிரச்சாரத்துக்காக  பிரதமர்  மேற்கொள்ளும் பய ணங்கள் அதிகாரப்பூர்வமானது அல்ல.  அந்த பயணங்களுக்கு நாங்கள் செலவு செய்ய வேண் டியதில்லை. அதனால் அந்த தகவல்கள் குறித்து எந்த ஆவணங்களையும் நாங்கள் பராமரிக்கவில்லை. பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கு ஏற்பட்ட செலவுகள் குறித்து பிரதமர் அலுவலகத்தின் இணையதளத்தை பார்வையிடுங்கள் என்று கூறப்பட் டிருந்தது.


மத்திய அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு ஏற்பட்ட செலவுகள் குறித்து கல்கலி எழுப்பியிருந்த கேள் விக்கு,  இதற்கான பதிலை வழங்குவதற்கான அதிகாரம் உள்துறை அமைச்சகத்திடம் தான் உள்ளது என்று கூறி அந்த  அமைச்சகத்துக்கு கல்கலியின் மனுவை பிரதமர் அலுவலகம் அனுப்பி வைத்தது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...