Friday, April 27, 2018

சர்வமும் பார்ப்பனர் மயம்!

உத்தரப்பிரதேசத்தில் எங்கும் பார்ப்பன மயம், எந்த துறையிலும் பார்ப்பனர் மயம், மிகவும் பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதமிருக்கும் பதவியிலிருந்தும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைக்கிறார் சாமியார் முதல்வர் ஆதித்யநாத்.  சமீபத்தில் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்ட உத்தரப் பிரதேச பள்ளிக் கல்வித் துறை நிர்வாக உறுப்பினர்கள்  பட்டியல்: பள்ளிக்கல்வித்துறை நிர்வாகக்குழு தலைவர் விரேஜ் குமார் ராம்- மத்திய அமைச்சர் மனோஜ் சின்காவின் மைத்துனர் (உயர் ஜாதியினர்).
முதன்மை உறுப்பினர் திரேந்திர திரிவேதி - பாஜக மாநிலங்களவை உறுப்பினர் மகேந்திர நாத் பாண்டேவின் சகோதரர் முறை (பார்ப்பனர்).
உறுப்பினர் அஜித் சிங் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மருமகளின் சகோதரர் (உயர் ஜாதியினர்).
உறுப்பினர் ஓம்பிரகாஷ் ராய் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் சம்பந்தி (பார்ப்பனர்).
உறுப்பினர் தினேஷ் மானி திரிபாடி - உத்தரப்பிரதேச மாநில இணை முதல்வர் தினேஷ் சர்மாவின் மைத்துனர்(பார்ப்பனர்).
உறுப்பினர் ஹரேந்திர குமார் ராய் - இவரும்   மகேந்திர நாத் பாண்டேவின் உறவினர் (பார்ப்பனர்).
(- உத்தரப்பிரதேச அரசாணை - 24/3/2018). இவர்கள் அத்தனைப் பேருக்கும் உள்ள ஓர் ஒற்றுமை அனைவரும் ஆர்.எஸ்.எஸின் மிகவும் முக்கியமான செயல்பாட்டாளர்கள். இனி உத்தரப்பிரதேசப் பள்ளிகளின் நிலைமை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. மாநிலப் பொதுத்துறை நிர்வாகத்தின் நடவடிக் கைகளைக் கண்காணிக்க சிறப்புக்குழு ஒன்று 2018 - ஜனவரியில் அமைக்கப்பட்டது, புதிதாக அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் உள்ள மொத்தம் 17   பேர்களுமே பார்ப்பனர்கள்! பார்ப்பனர்கள்!!
இதில் பலர் அகிலேஷ் அரசால் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வர்கள். இதில் மிகவும் நகைப்பிற்குரிய தகவல் அகிலேஷ் தலைமையில் முன்பு இருந்த அரசு ஆக்ரா தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்திற்கு டெண்டர் வழங்கியதில் 500 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது என்று கூறியது; அதற்கான விசாரணை ஆணையம் ஒன்றை சாமியார் ஆதித்யநாத்  2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமைத்தார். இந்த ஆணையத்தால் முதன்மைக் குற்றவாளிகள் என்று கூறப்பட்ட 2 பேர் புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு சிறப்புக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். எங்கெங்கெல்லாம் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று உள்ளதோ அங்கெல்லாம் மிகவும் வேகமாக பார்ப்பனர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் மாவட்டக் காவல்துறை உயரதிகாரிகளாக  பார்ப்பனர்கள் மற்றும் உயர் ஜாதியினரே தொடர்ந்து அமர்த்தப்பட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் நிருவாகம் அனைத்தும் பார்ப்பன மயம் என்றால், இன்னொரு பக்கம் தாழ்த்தப் பட்டவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள்!
மக்களவை உறுப்பினராக இருக்கக் கூடியவரும், அமெரிக்க சென்று உயர்நிலை - கல்வி பெற்றவரும், இதயவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று, தங்கப் பதக்கம் பெற்றவருமான யஸ்வந்த்சிங், ஜாதவ்கமாஜ்  - இத்துறையில் இந்தியாவில் இருக் கும் ஒரே ஒரு மருத்துவர் நிபுணர் இவர் மட்டுமே!
இவ்வளவுத் தகுதியிலிருந்தும் தாழ்த்தப்பட்டவர் என்கிற ஒரே காரணத்தால் - இவர் பிஜேபிகாரராக இருந்தும் ஒதுக்கப்படுகிறார்; அவமானப்படுத்து கிறார்; இதனை பிரதமர் மோடி அவர்களுக்கே கடிதம் வழி தெரிவித்துள்ளார். உ.பி. முதல்வர் ஆதித்யநாத் பற்றியும் குமுறியுள்ளார்.
பா.ஜ.க. ஆட்சி என்றால் பார்ப்பனர் ஆட்சிதான் என்பது பட்டப் பகலில் பசு மாடு தெரிவது போன்றதே! பார்ப்பனர் அல்லாதாரே சிந்திப்பீர்!

குழப்பமே உன் பெயர்தான் நீட் தேர்வா?

அண்மைக்காலமாக மத்திய கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ தேர்வுகளில்  வினாத்தாள்கள், வினாவுக்குரிய விடைகள் ஆகியவை வாட்ஸ் அப் சமூக ஊடகங்களின் வாயிலாக  வெளியாகி அதிர்ச்சியை நாடுமுழுவதும் ஏற்படுத்தியது.
அதிலும் சிபிஎஸ்இ தலைமைப்பொறுப்பில் உள்ள வருக்கே வாட்ஸ் அப் தகவல் பகிரப்பட்டது. வினாத்தாள் கசிந்ததையடுத்து மறு தேர்வு நடத்தப் படும் என்றும், மறு தேர்வு நடத்தப்படாது என்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் முன்னுக்குப்பின் முரணாக வெளியான வண்ணம் உள்ளன.
சிபிஎஸ்இ தேர்வுகளில் குழப்பநிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கட்டாயம் என்று மத்திய அரசால் கூறப்பட்ட நீட் தேர்வை நடத்திவருவதும் சிபிஎஸ்இ அமைப்புதான்.
முதுநிலை மருத்துவம், பல் மருத்துவக் கல்வியில் மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு அறிவிப்பை திரும்பப் பெற்றது மருத்துவக் கவுன்சில் குழு
28.3.2018 அன்று மருத்துவக் கவுன்சில் குழுவின் இணையதளப் பக்கத்தில் வெளியான முதுநிலை மருத்துவம், பல் மருத்துவக் கல்வியில் மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு அறிவிப்பு தவறானதாக கவனக் குறைவாகவும்,  தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும் இருந்ததாகவும், அதைத் திரும்பப் பெறுவதுடன், மீண்டும் புதிய அறிவிப்பு குழுவின்சார்பில் வெளியிடப்படும் என்றும் மருத்துவக் கவுன்சில் குழு கூறியுள்ளது.
மருத்துவக் கவுன்சில் குழுவால் அதன் இணையத்தில்  முதுநிலை மருத்துவம் மற்றும் முதுநிலை பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் கலந்தாய்வு முடிவு வெளி யிடப்பட்ட 3 மணி நேரத்தில் அந்த அறிவிப்பு  செல்லத் தக்கதல்ல என்று குறிப்பிட்டு, விரைவில் புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவம் மற்றும் முதுநிலை பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் கலந்தாய்வு முடிவுக் கான கடைசி நாள் என்று 5.4.2018 என்று அதன் இணை யத்தில் கூறப்பட்ட நிலையில், தற்பொழுது நீட்டிக்கப் பட்டுள்ளது.
இன்னும் என்னென்ன குழப்பங்கள், அறிவிப்புகள் வருமோ என்று தெரியவில்லை.
நீட் கவுன்சிலிங் மூலம் தேர்வு செய்யப்படுவதற்கான முதல் கட்ட பதிவு  26.3.2018 அன்று முடிந்தது. தற்பொழுது தொழில்நுட்ப பிரச்சினைகள் மற்றும் மென்பொருள் பிரச்சினைகளால் நீட்டிக்கப்படலாம்  என  எதிர்பார்க்கப்படுகிறது என்றும், மாணவர்கள் எந்த கல்லூரியைத் தேர்வு செய்வது, எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது என்பதில் உள்ள பிரச்சினைகளை மாணவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.   சிபிஎஸ்இ தேர்வில் 10 ஆம் வகுப்பில் கணிதப்பாடம், 12ஆம் வகுப்பில் பொருளாதாரப் பாடம் ஆகியவற்றுக்கு மறு தேர்வு நடத்தப்படுவது குறித்து குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில், அதேபோன்ற குழப்பநிலை மருத்துவக் கவுன்சில் குழுவின் செயற்பாட்டிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள மாணவர்களும், பெற்றோர் களும் மருத்துவக் கவுன்சில் குழுவுக்கு  சமூக ஊடகங் களில் தங்களின் கண்டனத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மனிதவள மேம்பாட்டுத் துறை என்ற ஒன்று இருக்கிறதா? மத்தியக் கல்வி வாரியம்தான் செயல் படுகிறதா? இந்தத் தவறுகளுக்கெல்லாம் யார் பொறுப்பு? குழப்பம்! குழப்பம்!! குழப்பத்துக்கு மேல் குழப்பம் என்பதுதான் இந்த நீட் தேர்வு! மத்தியில் பிஜேபி தலைமையிலான ஆட்சி வந்தாலும் வந்தது  - எல்லா வற்றிலும் பெருந் தோல்வி, பின்னடைவு. பிரதமரோ - உள்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல், எப்பொழுதும் வானூர்தியிலேயே இறக்கைக் கட்டிப் பறந்து கொண்டுள்ளார். நாடாளுமன்றத்திலும் வாய்த் திறக்கமாட்டார். மேடையைப் போட்டுக் கொடுத்தால் 56 அங்குல மார்பைப் புடைத்து சண்டமாருதம் பொழிவார். மாதம் ஒரு முறை மன்கி பாத் என்னும் சடங்கு! என்ன நாடோ, என்ன ஆட்சியோ, என்ன பிரதமரோ!
இன்னும் ஓராண்டு - அதற்குள் இந்துத்துவா வெறியாட்டத்துக்கு மட்டும் குறைச்சல் இருக்காது!
வாக்குச்சீட்டு ஆயுதம் தயாராக இருக்கட்டும்!

ஜாதி முறை

ஜாதியைக் காப்பாற்றும் பல ஜாதி அபிமானிகளே!
முன் 16.10.30ம் தேதி குடிஅரசு தலையங்கம் ஒன்றில் "ஆதியில் ஏற்பட்ட நான்கு ஜாதிகள்" 4000 ஜாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு ஜாதியும், மற்றொரு ஜாதியும் மாறி மாறி கலந்ததால் ஏற்பட்ட தென்று சொல்லப்பட்டதோடு அந்த ஜாதிகளே தான் எல்லா பஞ்சம ஜாதியுமாகும் என்று பார்ப்பன ஆதாரங்களில் குறித்துள்ள ஜாதி ஆதா ரங்களை எடுத்துக் காட்டி னோம். அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது தங்களை வேளாளர் என்று சொல்லிக் கொள்ளு பவர்களில் ஒரு சிலர் மேற்படி ஜாதிக்கிராமத்தை அதாவது ஆதி ஜாதி என்பவை களான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக் கொண்டு தங்களை மாத்திரம் சற்சூத்திரர் என்று அழைத்துக் கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக் கிரம வார்த் தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொண்டு அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்காகப் பிரித்து அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்ததென்றும் அவற் றிலும் தாங்கள் நாலாம் ஜாதி என்றும் ஒரு கற் பனையைக் கற்பித்துக் கொண்டு அப்படிப்பட்ட வர்களான தங்கள் நால்வருக்கும் தொண்டு செய்ய அடிமையாயிருக்க வேறு பல ஜாதிகள் ஏற்பட்டு இருப் பதாகவும் அவர்கள் தான் "பள்ளு பறை பதினெட்டு ஜாதிகள்" என்பது என்றும் ஒரு புதிய ஏற்பாட்டைச் சொல்லி ஒரு வழியில் திருப்தி அடைந்து வருகிறார்கள். இந்த இருவர் கூற்றின் உண்மை எப்படி இருந்தாலும், வடமொழிப் படி பார்த்தாலும் சரி, தென் மொழிப் படி பார்த்தாலும் சரி, வேளாளர் 4 வது ஜாதி என்பதை ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்பது மாத்திரம் இதி லிருந்து அறியக் கிடக்கின்றது. அந்தப்படி கூறப்படும் பள்ளு, பறை பதினெண்குடி மக்கள் என்பவர்களைக் குறிக்கும் முறையில் "பணி செய்யும் பதினெண் வகைச் ஜாதியார்" என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால் இவை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணை வாணிகன், ஒச்சனகல் தச்சன், வண்ணான், குயவன், கொல்லன் கோயிற் குடியன், தச்சன், தட்டான், நாவிதன் பள்ளி, பாணன், பூமாலைக்காரன், வண்ணான், வலையன் என்பதாகக் கொண்டு குறிக்கப்பட் டிருக்கின்றன. (இது அகராதியில் குறிக்கப்பட்டதாகும்)
ஆனால் இதே பதினெண் மக்களை அபிதான கோசம் என்னும் ஒரு ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படி குறித்திருப்பதென்னவெனில் ஏவலாள் களாக, சிவிகையர், (இவர்கள் ஆந்திர நாட்டிலிருந்து வந்தவர்களாம்) குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர், திமிலர், கரையார், சான்றார், சாலியர், எண்ணை வாணிகர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர் என பதி னெட்டு பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. அப்படிக் குறித்திருப்பதிலும் தமிழ் நாட்டிலுள்ள தெலுங்கர்களை (ஆந்திரர்களை) குறிப்பிடுவதில் "கம்மவார் என்னும் கவரைகள் ஏவற் பரிசனங்களாகவும், உப்பமைப்ப வர்களாகவும் அனுப்பப்பட்டவர்கள்" என்று குறிக்கப் பட்டிருக்கின்றது.
இவை ஒரு புறமிருக்க வேளாளர்களிலும் பல பிரிவுகளைக் காட்டி அதில் உயர்வு தாழ்வுகளை கற்பிக்கும் வரிசையில் குறிப்பிட்டிருப்பது என்ன வென்றால் சூத்திரருள்ளே வேளாளர் தலையாயினார், அவருள்ளே முதலிகள் தலையாயினார், இவர்களுக்கு அடுத்தபடி வேளான் செட்டிகள். இவர்கள் சோழ புரத்தார், சித்தக் காட்டார், பஞ்சுக்காரர், முதலிய பல திறப்பட்டவர்கள். இதற்கடுத்தப்படியிலுள்ளோர் கார் காத்தார். அடுத்த வரிசையிலுள்ளோர் சோழிய வேளாளர். இவர்கள் சைவர்களாவார்கள். சமபந்தி போசனத்திற்கும் உரியவர்கள். இதற்கடுத்தப்படியில் உள்ளவர்கள் சோழிய, துளுவ கொடிக்கால் முதலிய பலவகை வேளாளர்களாவார்கள். (இவர்கள் மாமிச போசனம் செய்பவர்கள்) இவரிற் தாழ்ந்தோர் அகம் படியர், அவரிற் தாழ்ந்தோர் மறவர். அவரிற் தாழ்ந்தோர் கள்ளர். அவரிற் தாழ்ந்தோர் இடையர். இவர்கட் கடுத்தபடியிலுள்ளோர் கவரைகள், கம்மவர்கள் என இந்த படியாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இவற்றுள் எதிலும் "பிராமணர்கள்" விஷயத்தில் எவ்விதமான பாகுபாடும், தாழ்வு கிரமமும் சந்தேகமோ, ஆட்சேபணையோ சொல்லுவதற்குச் சிறிதும் இட மில்லாமல் செய்து கொள்ளப்பட்டிருப்பதைக்  கவனித் தால் ஜாதியின் சூழ்ச்சித்தத்துவம் நன்றாய் விளங்கும். மற்றபடி சத்திரியர்களிலும் வைசியர்களிலும் இருக்கும் சண்டைகளும் ஆட்சேபணைகளும் சத்திரியர், வைசியர் என்று சொல்லிக் கொள்வதில் எவ்வித உயர்வு தத்துவமும் இல்லாமல் ஒருவருக்கொருவர் தங்களில் வீண் வழக்காடிக் கொண்டு பொது ஜனங் களாலும் ஒப்புக் கொள்ளப்படாமல் ஒருவரை ஒருவர் இழித்துரைத்து குறைவுபடுத்தி வருவதும் அநேக இடங்களில் பிரத்தியட்சமாய் காண்கின்றோம். மற்றும் ஒவ்வொரு ஜாதியாரும் தங்கள் தங்கள் ஜாதிகளைப் பற்றிய எவ்வளவு மேன்மை ஆதாரங்கள் கற்பித்துக் கொண்டாலும், கண்டு பிடித்தாலும் எந்த விதத்திலும் "பிராமணர்கள்" என்று சொல்லிக் கொள்ளும் பார்ப் பனர்களுக்கு மற்றவர்கள் எல்லாம் கீழ்பட்டவர்கள்தான் என்பதை நிலை நிறுத்துவதற்கு மாத்திரம் அவ்வா தாரங்கள் பயன்படுகின்றனவே தவிர மற்றபடி எந்தக் கருத்தைக் கொண்டு கஷ்டப்பட்டு இவ்வித ஆதா ரங்கள் கற்பிக்கப்பட்டதோ, கண்டுபிடிக்கப்பட்டதோ அவற்றிற்குச் சிறிதும் பயன் படுவதில்லை என்பதையும் பிரத்தியட்சத்தில் பார்க்கின்றோம்.
எனவே இந்த நிலையில் இன்று நமது நாட்டில் பார்ப்பான் ஒருவனைத் தவிர மற்றவர்கள் தாழ்ந்த ஜாதியார்கள். அதாவது பார்ப்பனனால் தொடவும் சமபந்தி போஜனம் பண்ணவும் மற்றும் சில பொது உரிமைகள் பெறவும் கூடாத ஜாதியார்கள் என்பதும் அவனுக்கு அடிமையாகயிருக்கவும் ஒழுக்கத் தவறுதலால் அதாவது "விபசாரம்" "கீழ் மேல் ஜாதி கலப்பு" என்று சொல்லும் படியான இழிதன்மையில் பிறந்த வர்கள் என்பதும், இன்றைய நம் ஜாதித் தத்துவ மாயிருக்கின்றதை யாரும் மறுக்கமுடியாதென்று உறுதி கூறுவோம்.
மற்றபடி இவற்றிற்கு எவ்வித தத்துவார்த்தம் சொல்லுவதானாலும் அதை மூடர்கள் முன்னால் மாத்திரம் சொல்லிக் கொள்ளக்கூடுமே தவிர ஜாதிக் கும், ஜாதியைக் கற்பித்த மதத்திற்கும், இவ்விரண்டிற்கு ஆதாரமான வேதம், சாதிரம், தர்மம் என்று சொல்லப் பட்ட ஆதார நூல்களில் இருக்கும் உண்மைகளுக்கும் எவ்வித ஆட்சேபணையும், எவ்வித தத்துவார்த்தமும் சொல்லமுடியாது என்பதையும் யாதொரு பதிலும் சொல்லாமல், பேசாமல் இழிவை ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டியதாகும் என்பதையும் கண்டிப்பாய் சொல்லுவோம்.
இவை ஒருபுற மிருக்க இந்த ஜாதிக் கிராமத்தில் பார்ப் பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏற் படுத்தப்பட்டிருக் கும் யோக்கியதைகளை யும், உரிமை களையும் பார்ப்போமானால் கடுகளவு பகுத் தறிவோ, மானமோ இருக்கின்ற மனிதர் கள் ஒருக்காலமும் தங்கள் ஜாதி பேரை சொல்லிக் கொள்ள முடியாத படியும் அதை கனவிலும் நினைக்க முடியாத படியும் இருப்பதை நன்றாய் உணரலாம். அதாவது "நாலாவது ஜாதியார்களாக சூத்தி ரர்கள் என்று சொல் லப்படும் வகுப்பாருக் குப் பார்ப்பனர்கள் ஏற்படுத்தி இருக்கும் உரிமையானது எப்படி இருக்கின்றது". என்று பார்த்தால் இப் போது "பாரம்பரியமாய் குற்றம் புரியும் வகுப்பார்" (அதாவது கிரிமினல்ட்ரைப்) என்று சொல்லக் கூடிய வர்களுக்குச் சர்க்காரால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற நிர்பந்தத்திற்கும் சட்ட திட்டங்களுக்கும் அவர்களை நடத்துகின்ற மாதிரிக்கும் சிறிது கூட குறைவில்லாமல் நடத்துகின்ற மாதிரி யாகவே ஏற்படுத்தி இருக்கின்றார்கள். உதாரண மாக இரண்டொன்றைச் சொல்லுவோம்.
அதுவும் தர்ம சாதிரங்கள் என்று சொல்லப்பட்ட சட்டங்களில் உள்ளதையே சொல்லுவோம்.
"ஸ்நாத மவம், கஜமத்தம் ரிஷபம்
காம மோஹிதம் சூத்தரமக்ஷரசம்
யுக்தம் தூரதப் பரிவர்ஜையேல்"
அதாவது குளிப்பாட்டிய குதிரையையும் மதம் கொண்ட யானையையும் காமவிகாரம் கொண்ட காளை மாட்டையும் எழுத்துத் தெரிந்த சூத்திரனையும் பக்கத்தில் சேர்க்கக் கூடாது என்பது கருத்தாகும்.
"ஜப, தப, தீர்த்தயாத்திர, பிரவர்ஜ் ஜய, மந்தர சாதனம் தேவதாரா
தனம் சசய்வதிரீ சூத்திர பத தானிஷள்" அதாவது ஜபம், தபசு, தீர்த்தயாத்திரை, சந்நியாசம், கடவுள் தோத்திரம், ஆராதனை இந்த காரியங்கள் பெண்களும் சூத்திரர்களும் ஒருபோதும் செய்யக் கூடாது என்பது கருத்தாகும்.
"நபடேல் சமகிருதம் வாணீம்" (சூத்திரன்) சமஸ்கிருதம் படிக்கக்கூடாது என்பது கருத்தாகும்.
"நைவ சாதிரம் படே நைவ சுருணுபாத் வைதி காக்ஷரம் நநாயாது தயால் பூர்வம் தபோ மந்திரஞ் சுவர்ஜ்ஜயேல்"
(சூத்திரன்) சாதிரம் படிக்கவோ, வேதத்தைக் கேட் கவோ ஒருக்காலும் கூடாது. அவன் சூரிய உதயத்திற்கு முன் குளிக்கவும், மந்திரம் ஜெபிக்கவும், தபசு செய்ய வும் கண்டிப்பாய் கூடாது என்பது கருத்தாகும்.
"இதிஹாச புராணானி நபடேச்ரோது மர்ஹசி"
இதிகாச புராணங்களும் கூட (சூத்திரர்கள்) படிக்கக் கூடாது. ஆனால் (பிராமணர்கள் படிக்க) காதால் கேட்கலாம்.
"சாதுர்வர்னியம்
மயாசிருஷ்டம்
பரிசரியாத் மகம்
கர்மம் சூத்ரஸியாபி பாவனாம்"      (கீதா லோகம்)
நான்கு வர்ணங்களும் என்னால் சிருஷ்டிக்கப் பட்டவை. அவற்றுள் சூத்திரனுக்குப் பிராமண சிசுரூஷைதான் தர்மம் என்பது கருத்து.
இது போல் ஆயிரக்கணக்காக எழுதிக் கொண்டே போகலாம். இவைகள் எல்லாம் தான் நமது ஜாதிமத ஆச்சார அனுஷ்டானங்களாக இருக்கப்பட வேண்டியவை என்று வேதங்கள், தர்ம சாதிரங்கள் பகவான் வாக்குகள் என்று சொல்லப்படுபவைகளில் சொல்லப்பட்டவைகளாகும்.
எந்த காரணத்தாலோ இந்து மதத் தர்மத்தை அனுஷ்டித்துத் தீரவேண்டிய தல்லாத ஒரு ஆட்சி இந்த நாட்டுக்கு ஏற்பட்டதின் பலனால் நம்மில் சிலராவது இந்த தர்மங்கள் முழுவதும் வலி யுறுத்தப்படாமல் இருக்க முடிகின்றது. ஆனால் இந்த நிலையாலும் நாம் மறுபடி நமது ஜாதியையும் மதத்தையும் காப்பாற்றும் கவலைகொண்டு ஒவ் வொருவரும் தங்கள் தங்களுக்கென்று மதத்தையும், ஜாதியையும் சொல்லி, அவற்றை நிலை நிறுத்திக் கொண்டே போவோமானால் பின்னால் நமது நிலை என்ன ஆகும் என்பதைச் சற்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்.
ஏதோ "பொல்லாத விதிவசத்தினால்" இன்று ராம ராஜ்யத்தைக் கோரும் திரு. காந்தியாரும் வருணா சிரமத்தைக் கோரும் "தேசிய" தலைவர்களும் கேட்கும் சுயராஜியம் வந்துவிடுமேயானால் இன்று இம்மாதிரி ஜாதிகளைக் காப்பாற்றியவர்களின் கதி என்னவாகக் கூடும் என்பதையும் சற்று யோசித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.
இந்துக்கள் என்பவர்களுக்குள் ஜாதிப் பிரிவு இருக்கும் வரை ஜாதி உயர்வு தாழ்வு வித்தியாசம் ஒரு காலமும் போகவே போகாது என்பதைக் கண்டிப்பாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும்படி எச்சரிக்கை செய்கின்றோம்.
இன்றையதினம் தேசியவாதிகளாய் இருக்கின்ற வர்கள் இந்தியா சுதந்திரம் அல்லது பூரண சுயேச்சை அடையவேண்டுமென்கின்ற உண்மையான ஆசை யுடையவர்களாயிருப்பார்களானால் அவர்கள் வெள் ளைக்கார ஆட்சியிருக்கும் போதே ஜாதி வித்தி யாசங்கள் எல்லாம் ஒழியும் படியான ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டிதுதான் அறிவுள்ள வேலை யாகும். அதைவிட்டு விட்டு முதலில் "நீ போய் விடு நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம்" என்று சொன்னால் அது "தான் சாவதற்குதானே மருந்து குடித்தது" போல்தான் ஆகுமே தவிர வேறொரு பயனும் தராது. ஏனெனில் இந்தியாவில் இந்துக்கள் என்பவர்களில் 1000க்கு 999 பேருக்கு குறையாமல் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டும் என்கின்ற எண்ணமில்லாதவர்களாய் இருப்பதோடு ஒவ்வொரு வரும் மேல்ஜாதி ஆக வேண்டும் என்று ஆசைப் படுவதும் தனக்கு கீழ் பலஜாதிகள் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவது மான உணர்ச்சி உள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த நிலையில் இன்றையதினம் இருக்கும் பல சவுகரியங்களை ஒழித்துவிட்டு வருணாச்சிரம கொள் கையும், ஜாதி ஆதிக்கத்திமிரும் உடையவர்களான மக்களிடம் ஆட்சியும் பிரதிநிதித்துவமும் வந்து விட்டால் பிறகு எந்த விதத்தில் ஜாதி கொடுமைகளும், அதனால் ஏற்படும் தொல்லைகளும் ஒழியக்கூடும். என்பதையோசித்தால் அதன் கெடுதி விளங்காமல் போகாது.
இந்தியர்களுக்குள் ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு கொடுமைகள் ஆகியவைகள் இல்லாதிருந்திருக் குமானால் இந்தியா ஒரு நாளும் அன்னியர் ஆட் சிக்கோ அடிமை தனத்திற்கோ, அடிமையாகி இருக் கவே முடியவே முடியாது. ஆனால் "அம்பேத்கர் களையும், ஜின்னாக்களையும், ராமசாமி முதலியார் களையும், ராதாபாய்களையும் ஏதாவது ஆசைக்காட்டி ஏமாற்றி தாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும், இழிவுகளையும் மறைக்க வைத்து எங்கள் நாட்டு ஜாதி உயர்வு தாழ்வு விஷயமும் ஒருவரை ஒருவர் அடக்கி ஆண்டு இழிவுபடுத்தும் சமுகக் கொடுமை விஷயமும் நாங்கள் எப்படியோ சரிபடுத்திக் கொள்ளுகிறோம். இப்பொழுது நீங்கள் போங்கள்" என்று சொல்லச் செய்து விடலாம். ஆனாலும் நமக்குள் இருக்கும் இழிவுகளில் நம்மால் கூடுமானதை யெல்லாம் நாம் ஒழித்து ஒற்றுமைப்பட்டு பின் அயலானை வெளியில் போகச் சொல்லலாம் என்று கருதியும் நடவாததின் பயனாய் ஏற்படும் அதாவது இன்றையதினம் உள்ள இழிவையும் கொடுமையையும், அடிமைதனத்தையும் அடையாமல் ஏமாற்றித் தப்பித்துக் கொள்ள முடியாது என்பதை மாத்திரம் கல்லின் மேல் எழுதி வைப்போம்.
ஆகவே எப்படியாவது ஜாதிப் பிரிவையும் அதற்கு ஆதாரமான மதத்தையும் ஒழிக்க முயற்சி செய்யுங்கள் என்று அதற்கு ஆரம்பவிழா செய்ய அடுத்து வரும் சென்ச ஒரு சரியான சந்தர்ப்பம் என்றும் அதில் காணப்பட்ட ஜாதியையும், மதத்தையும் தெரிவிக் காதீர்கள் என்றும் தெரிவித்துக் கொண்டு இதை முடிக்கின்றோம்.
- 'குடிஅரசு' - தலையங்கம் - 30.11.1930

வரவேற்கத்தக்க சுவர் உடைப்பு

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்தில் சந்தையூர் கிராமத்தில் ஒரு தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டது. அந்தச் சுவரை எழுப்பியவர்களும் தாழ்த்தப்பட்டோரில் இன்னொரு பிரிவைச் சேர்ந்தவர்கள்.
சந்தையூரில் பெரும்பான்மையாக வசிப்பவர்கள் தாழ்த் தப்பட்டோரில் ஒரு பிரிவினர். அவர்கள் வழிபடுவதற்கு அரசின் புறம்போக்கு நிலத்தில் கோயில் ஒன்றைக் கட்டி யுள்ளனர். அந்தக் கோயிலில் தாழ்த்தப்பட்டோரில் இன்னொரு பிரிவினர் வழிபட அனுமதிக்கப்படவில்லை.
கோயிலில் வழிபடுவதற்கு அனுமதிக்கப்படாத மற்றொரு பிரிவினர் தனியாக கோயில் கட்டினார்கள். இந்த இரு பிரி வினர்களின் கோயிலுக்கு இடையே பொதுப்பாதை ஒன்று இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பொதுப் பாதையை ஆக்கிரமித்து ஒரு பிரிவினர் முள்வேலி போட் டுள்ளனர். அன்றைக்கு மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் பார்வையிட்டு முள்வேலியை அகற்றி இருக்கிறார். இந்த நிகழ்வுக்குப் பின்னர், ஒரு பிரிவினரால் சுவர் எழுப் பப்பட்டது. இந்தச் சுவரை இடிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு, நீதிமன்றம் சுவரை இடிக்க உத்தர விட்டது. ஆனால், அரசு உடனடியாக சுவரை அகற்றாமல் காலங்கடத்தியது. அதனால், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக் கிடைத்த மூன்று மாதம் கழித்து, அவ்வழக்கில் சுவரை இடிப்பதற்கு தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுவரை எழுப்பியதற்கு காரணமான தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின்  ஒரு பிரிவினர் 'இது தீண்டாமை சுவர் இல்லை, கோயில் சுவர்தான்' என்றனர். பேரையூர், சந்தையூர் இந்திரா குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினர், அங்குள்ள தீண்டாமைச் சுவரை அகற்றக்கோரி இந்த ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் நாள் முதல் அருகமை மலைப்பகுதியில் குடியேறி போராட்டம் நடத்தி வந்தனர். அந்த மலைப்பகுதியில் பனியிலும், வெய் யிலிலும் பெண்களும், குழந்தைகளும் சமைத்துச் சாப்பிட்டு தூங்கினர்.
இந்நிலையில்தான், கடந்த மார்ச் 30ஆம் நாளன்று மலையில் போராட்டம் நடத்தி வந்த பழனிமுருகன் (42) நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து அவர் உடல் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், பிரச்சினையில் தீர்வு காணும்வரை பழனிமுருகனின் உடலை வாங்க மறுத்து அப்பிரிவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதுதொடர்பாக 5.4.2018 அன்று இருதரப்பினருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், நத்தம் அரசு புறம்போக்கில் உள்ள சுற்றுச்சுவரில் 2 மீட்டரை உடைத்து, அங்கே அங்கன்வாடி மய்யம் அமைத்து இருபிரிவினர் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டது. சுவருக்கு மறுபுறம் உள்ள ராஜகாளியம்மன் கோயிலை இருபிரிவினரும் வழிபட்டுக் கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று (6.4.2018) சந்தையூரில் 200க்கு அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனமும் நிறுத்தப்பட்டன. சுவரை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து  தீக் குளிக்க முயன்றவரை காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர். அப்போது காவல்துறை வாகனத்தில் ஏறிய ஒரு பெண் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு  ஏற்பட்டது. உடனே தீயணைப்புத் துறையினர் அவர்மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து காப் பாற்றினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 67 பேரை பேரையூர் காவல்துறையினர் கைது செய்தனர். இதன்பின் காவல்துறை அதிகாரி நரசிம்மவர்மன், உசிலம் பட்டி வருவாய் கோட்டாட்சியர் சுகன்யா  முன்னிலையில் வருவாய்த்துறையினர் 2 மீட்டர் அளவிற்கு சுவரை இடித்தனர். இதன்பின் 67 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். சுவர் இடிக்கப்பட்ட பின்பு மதுரையிலிருந்து பழனிமுருகன் உடல் பெறப்பட்டு, சந்தையூரில் உள்ள மயானத்தில் எரியூட்டப்பட்டது. இதையடுத்து மலையில் போராட்டம் நடத்தியவர்கள் ஊர் திரும்பினர்.
இந்த நிகழ்வு உண்மையிலேயே வேதனைக்குரியது. இந்து மதத்தில் ஜாதி அமைப்பினை படிக்கட்டு முறை (நிக்ஷீணீபீமீபீ மிஸீமீஹீணீறீவீஹ்) என்று அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டதுதான் எத்தனை நுட்பமானது. ஒடுக்கப்பட்ட மக்களுக்குள்ளும் உயர்வு, தாழ்வு என்பது என்ன கொடுமை!
ஜாதி ஒழிப்புக்காக தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஏன் பாடுபட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பேரையூரில் நடந்த இந்த நிகழ்வைக் கொண்டு பார்த் தீர்களா பார்த்தீர்களா? பார்ப்பனர்களா இந்தத் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்கள்; தாழ்த்தப்பட்டவர்களுக்கிடையேகூட தீண்டாமை இருக்கிறதே! என்று ஏகடியம் செய்வார்கள். ஆனால், எல்லாவற்றுக்கும் மூலக் கிருமி இந்த ஜாதிதான். அதனை இன்று வரை பாதுகாக்க பல வழிகளிலும் நங்கூரம் பாய்ச்சி நிற்பவர்கள் பார்ப்பனர்களே! அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமை உட்பட!
தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆம் பிரிவு கூறுகிறதே! அந்தத் தீண்டாமை என்பதற்குப் பதிலாக அந்த இடத்தில் ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று சட்டம் செய்ய வேண்டாமா?
தந்தை பெரியார் 1973 டிசம்பர் 8,9 ஆகிய நாள்களில் சென்னை பெரியார் திடலில் நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் தனித் தீர்மானத்தையே அந்த வகையில் நிறைவேற்றிக் கொடுத்தாரே!  ஒடுக்கப்பட்ட சகோதரர்களே  - வருண அடுக்கு முறையில் கடைசி இடத்தில் உள்ள நமக்குள் வேண்டாம் இந்தத் தீண்டாமைச் சுவர்கள்.

போராடாமல் என்ன செய்வது?

தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை அளிப்பதில் எப்பொ ழுதுமே கருநாடக மாநில அரசு சண்டித்தனம் செய்து வருகிறது. அம்மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவிரிப் பிரச்சினையில், தமிழ்நாட்டை வஞ்சிப்பதில் மட்டும் சுருதி பேதமில்லாமல் போட்டிப் போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
1974 முதல் மிகக் கடுமையான பாதிப்புக்கு தமிழ்நாடு உள்ளாகி வந்திருக்கிறது, விவசாயத்தை நம்பி வாழும் கோடிக் கணக்கான மக்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. விவசாயிகளின் தற்கொலைகளும் நடக்கத் தொடங்கி விட்டன.
சட்டப் போராட்டம் ஒரு பக்கம் தொடர்ந்து நடந்து கொண்டேதான் வந்திருக்கிறது. நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அதனை அரசு கெசட்டில் வெளியிடவே போராட வேண்டியிருந்தது.
ஒருவழியாக அது கெசட்டில் வெளியான நிலையில் அத் தீர்ப்புப்படி தமிழ்நாட்டுக்கு நீரைவிட வேண்டும் என்பதற்குப் போராட வேண்டியிருக்கிறது.
நடுவர் மன்ற தீர்ப்பை முடக்க உடனே உச்சநீதிமன்றம்  சென்றது கருநாடக அரசு. நடுவர் மன்ற தீர்ப்பு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது என்ற சட்ட நிலை இருக்கும்பொழுது, உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க ஏன் முன் வந்தது என்பது கேள்விக்குறியே.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று நடுவர் மன்றம் தெளிவாகக் கூறிய பிறகு, உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொன்னதா இல்லையா என்ற கேள்வி எங்கிருந்து வந்ததாம்!
'ஸ்கீம்' என்ற வார்த்தையைத்தான் உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறதே தவிர, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூறவில்லை என்பது தந்திரமான சாக்குப் போக்கே!
சரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் 'ஸ்கீம்' என்பதற்கு விளக்கம் கேட்ட தருணத்திலேயாவது வெட்டு ஒன்று துண்டு இரண்டாக வெளிப்படுத்த உச்சநீதிமன்றம் தவறியது ஏன்? இரு பொருள் தொனிக்கும் சொற்களைக் கையாள்வது பொறுப்பான செயல்பாடுதானா?
நீதிமன்றம் இப்படி நடந்து கொள்கிறது என்றால் மத்திய அரசு இரட்டை வேடம் போட்டு வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் - மத்திய அரசின் அத்துறை அமைச்சர் நிதின் கட்காரியைக் கேட்டால், அவர் என்ன சொல்லுகிறார்? காவிரி மேலாண்மை வாரியத்தை எல்லாம் ஆறு வார காலத்தில் அமைக்க முடியாது என்று சொல்லுவது - அவர் ஏற்றுக் கொண் டுள்ள பதவிக்கு உகந்ததுதானா? உச்சநீதிமன்ற தீர்ப்பையே கேலி செய்வது ஒரு மத்திய அமைச்சருக்கு அழகல்லவே!
ஆறு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறுதியிட்டு ஆணை பிறப்பித்தது. இதன்மீது மேல் முறையீடும் இல்லை என்றும் தீர்க்கமாகவே தீர்ப்பில் கூறப்பட்ட நிலையில், ஆறு வாரத்தின் கடைசி நாள்வரை ஆட்டம் போட்டு, கடைசிக் கடைசியாக 'ஸ்கீம்' என்றால் என்ன என்று விளக்கம்  கேட்பது அசல் ஏமாற்றுத்தனம் அல்லவா?
மத்திய அரசும் சரி, உச்சநீதிமன்றமும் சரி இப்படி 'சித்து' விளையாட்டை மேற்கொண்டால், காவிரி உரிமையை மீட்க வேண்டிய நிலையில் உள்ள கட்சிகள்  வீதிக்கு வந்து போராட் டத்தை மேற்கொள்வதைத் தவிர வேறு வழிதான் என்ன?
அப்படிப் போராடுவதற்கு உள்நோக்கம் கற்பிக்கலாமா? சரி இப்படி உள்நோக்கம் கற்பிக்கக் கூடிய ஆளும் தரப்பினர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது போராட்டங்களை நடத்தவேயில்லையா?
ஏன் ஆளும் தரப்பில் உள்ளவர்களே கடந்த 3ஆம் தேதி உண்ணா நோன்புப் போராட்டத்தினை நடத்தியது ஏன்? முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சரும்கூட உண்ணா நோன்பில் பங்கு கொண்டது ஏன்?
தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரைக் கொடுக்க வைப்பதில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு, எதிர்க் கட்சிகளின் இத்தகுப் போராட்டங்களையும், அவற்றிற்கு மக்கள் கொடுக் கும்  ஆதரவினையும் புத்திசாலித்தனம் இருந்தால் பக்குவ மாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா? மாறாக போராட் டங்களைக் கொச்சைப்படுத்துவதும் வழக்குத் தொடுப்பதும் நம் பக்கம் உள்ள பலத்தைப் பலகீனப்படுத்துவது ஆகாதா?
மாறாக சட்ட ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தி அதிமுக அரசைக் கவிழ்க்க மு.க. ஸ்டாலின் முயற்சிக்கிறார் என்று அதிமுக தரப்பில் கருத்துக் கூறுவது நகைப்புக்குரியதல்லவா! அவர்களின் பலகீனத்தைத்தானே இது காட்டுகிறது!
தமிழ்நாட்டுக்குரிய நீர் அளிக்க உச்சநீதிமன்றம் ஏற்பாடு செய்யும் - தமிழ்நாட்டில் ஏன் போராட்டம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளும் கூறும் நிலை ஏற்பட்டதற்கேகூட தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்கள்தானே காரணமாக இருக்க முடியும்?
தமிழ்நாட்டில் நடத்தப்படும் போராட்டங்கள் எல்லாம் காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு சட்டப்படி உரிய நீரை பெறுவதற்கான முயற்சியே தவிர, ஆட்சியைக் கவிழ்க் கும் நோக்கமல்ல! அரண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய் என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

டில்லியில் சமூக நீதிக் குரல்!

மத்திய அரசு எப்பொழுது நீட் தேர்வை அறிவித்ததோ அற்றை நாள் முதல் தமிழ்நாடு எதிர்ப்புக் குரலை உயர்த்தி வருகிறது. குறிப்பாக திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினையை முன் வைத்து அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து "ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு" என்ற ஒன்றை உருவாக்கி சமூக நீதிக் கோட்பாடு உள்ள அனை வரையும் ஒருங்கிணைத்து ஒத்தக் குரலை தமிழ்நாட்டிலிருந்து கேட்கும்படிச் செய்து வருகிறது.
அனைத்துத் தரப்பு மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வண்ணம் "சமூக நீதி பாதுகாப்புப் பேரவை" என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்புகள் சார்பாக மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் என்னும் நுழைவுத் தேர்வினை எதிர்த்து பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன.
இந்த திசையில் கடந்த 3ஆம் தேதி இந்திய தலைநகரில், டில்லியில் நாடாளுமன்றம் முன் ஜந்தர் மந்தரில் முற்பகலில் கண்டன ஆர்ப்பாட்டமும், அதனைத் தொடர்ந்து பிற்பகலில் நடைபெற்ற கருத்தரங்கமும்  சமூக நீதி வரலாற்றுத் திசையில் குறிப்பிடத்தக்க ஒளி வீசும் மைல்கல்லாகும்.
தமிழ்நாட்டில் உள்ள சமூக நீதிக் கோட்பாடு உள்ள கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல; வடமாநிலங்களிலும் உள்ள அத்தகைய அமைப்புகளின் தலைவர்களும், புதுடில்லி பல்கலைக்கழக மாணவர்களும், மற்ற மாநில மாணவர்களும் ஆர்ப்பாட்டத்திலும், கருத்தரங்கிலும் கலந்து கொண்டனர். கனல் கக்கினர். டில்லியில் உள்ள ஏடுகள் எல்லாம் இவற்றை தலைப்புச் செய்தியாக வெளியிட்டு முக்கியத்துவம் அளித்தன. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரு முக்கிய சட்ட முன் வரைவுகள் (மசோதாக்கள்) நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 14 மாதங்கள் ஓடோடிய பிறகும் இதுவரை அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் மத்திய பிஜேபி அரசு ஊறுகாய் ஜாடியில் போட்டுள்ளது என்றால், இது என்ன ஆணவம் - ஜனநாயகப் படுகொலை - மாநில ஆட்சிகளை மட்டமாக நினைக்கும் மமதை!
சமுக நீதி, இட ஒதுக்கீடு என்றால் பிஜேபி அதன் சங்பரிவார் கும்பலுக்கு ஒரே குமட்டல்தானே! மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்தியதற்காக சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் ஆட் சியை கவிழ்த்த ஆரிய குல திலகங்கள் அல்லவா இவர்கள்.
அத்தகையவர்கள் சமூக நீதியைக் குழிதோண்டி புதைப் பதில் அதீத ஆர்வம் கொண்டவர்களாகத் தான் இருப்பார்கள். ஆனால் அதே நேரத்தில் மக்கள் சமுத்திரம் கொந்தளித்து எழுந்தால், பிரச்சினையை வீதிக்கு கொண்டு வந்தால் எந்த அராஜக அரசும் பணிந்து மக்கள் குரலுக்குச் செவி சாய்க்கவே செய்யும். ஜல்லிக்கட்டுப் பிரச்சினையை நாடு பார்க்கவில்யை?
எதைக் கொடுத்தாலும் சூத்திரர்களுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்று சொல்வது இந்த இந்துமதம் - உலகில் வேறு எந்த மதத்திலும், எந்த நாட்டிலும் கேட்டிராத பெரும் கொடுமை இது.
தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் வர்ணாசிரம படிக்கட்டில் கீழ்நிலையில் தள்ளப்பட்ட கிராமப் புறத்தவர்களும் டாக்டராவதா? அதனை நாம் அனுமதிப்பதா? என்ற ஆத்திரத்தில்தான் அதிகாரம் தங்கள் கைவசம் இருக்கும் காரணத்தால் ஒத்து ஊத ஊடகங்களும் பூணூலை மாட்டிக் கொண்டு இருப்பதால் நம்மை அசைக்க முடியாது என ஆரிய புத்தி ஆட்டம் போட்டுப் பார்க்கிறது.
தமிழ்நாட்டைத் தாண்டி இப்பொழுதுதான் தலைநகரமாகிய டில்லியில் சமூகநீதிக்கும், தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கும் சமூகநீதி சங்கநாதம் கேட்கத் தொடங்கியிருக்கிறது. நாடாளு மன்றத்திலும் எதிரொலிக்கக் கூடிய வாய்ப்பும் உண்டு.
நாடாளுமன்றத் தேர்தலும் நெருங்கிக் கொண்டு தான் உள்ளது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் சமூக நீதியின் கழுத்தை நெரித்த கங்குபட்டர் வழிவந்த வகையறாக்களுக்கு - பாஜக என்ற ஆதிக்க அமைப்புக்கு வட்டியும் முதலுமாக நல்ல பாடம் கற்பிப்பர் என்பதை எத்துனையும் அய்யமில்லை, இல்லவே இல்லை.
இதுதான் சரியான சந்தர்ப்பம்; மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இந்தத் தரப்பினர்தான். கையில் கிடைத்த வாக்குச் சீட்டு என்னும் ஆயுதத்தால் பாடம் கற்பிக்க தயாராக வேண்டும். அதற்கான விழிப்புணர்வூட்டும் அடிப்படையில் தமிழ்நாட்டில் சமூக அமைப்புகள் ஈடுபடும் - ஈடுபடவும் வேண்டும். மாணவர்கள் - இளைஞர்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையைக் கொண்டு செல்வோம்.
கட்சி மாச்சிரியங்களுக்கு அப்பாற்பட்டு ஒன்று இருக்கிறது என்றால் தமிழ்நாட்டில் அது இந்த சமூகநீதிதான் - இட ஒதுக்கீடுதான்.
சமூக நீதிக்கு எதிராக அது இலைமறை காயாக இருந் தாலும் சரி, யார் இருந்தாலும் அவர்கள் அடி வேரோடு தூக்கி எறியப் படுவார்கள் என்பதுதான் தமிழ்நாட்டின் மங்காப் புகழ் வரலாறு.
மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அதிமுக - சட்டப்பேரவையில் நிறைவேற்றிக் கொடுத்த இரு சட்ட முன்வரைவுகளுக்காக ஒப்புதலைப் பெறுவதில் தோல்வி அடையுமானால், பிஜேபியுடன் சேர்ந்து முற்றிலும் துடைத் தெறியப்படுவார்கள் - எச்சரிக்கை. டில்லி போராட்டத்திலும், கருத்தரங்கிலும் பங்கேற்ற தலைவர்களுக்கும், மாணவர்களுக்கும், நேர்த்தியாக நடை பெற ஒத்துழைப்புத் தந்த அனைவருக்கும் நமது பாராட்டுகளும், நன்றியும் உரித்தாகுக!

நீதித்துறையில் பெண்களும், தாழ்த்தப்பட்டவர்களும்!

உயர்நீதிமன்றங்களில் தலித் தலைமை நீதிபதி ஒருவர் கூட இல்லை; தாழ்த்தப்பட்டோருக்கான வன்கொடுமை தடுப்பு சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொண்டதை கண்டித்துப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் உயர்நீதிமன்றங்களில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒரு நீதிபதி கூட தலைமை நீதிபதியாக இல்லை என்பது அதிர்ச்சிக்குரியது. 1989இல் உருவாக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோருக் கான வன்கொடுமை தடுப்பு சட்டம் அமலில் இருந்து வந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் அந்த சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் அளவுக்கு  அதில் திருத்தங்களை கடந்த 20ஆம் தேதி மேற் கொண்டது. இதற்கு தலித்துகள் எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத் தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
இத்தனைப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவின் உயர் நீதிமன்றங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைமை நீதிபதி ஒருவர் கூட இல்லை என்ற தகவல் வேதனை அளிக்கிறது.   கடந்த 8 ஆண்டுகளாக உச்சநீதிமன்றங்களில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்து வழக்குரை ஞர்களுக்கு நீதிபதிகளாக இதுவரை பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. நாட்டில் உள்ள 24 உயர்நீதி மன்றங்களில் ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதி கூட தலைமை நீதிபதியாக பணியாற்றியது இல்லை.
கடைசியாக 2010ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த கேரளா வைச் சேர்ந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்றது டன் சரி; அதன்பிறகு அப்பதவிகளுக்கு வேறு தாழ்த் தப்பட்டவர்கள் யாரும் இன்னும் நியமனம் செய் யப்படவில்லை. இதுகுறித்து ஜஸ்டிஸ் கே.ஜி.பால கிருஷ்ணன் கூறுகையில், தாழ்த்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்த ஒருவர் திறமையான அனுபவம் பெற்ற மூத்த வழக்குரைஞர் என்றால் அவரை நீதிபதியாக நியமனம் செய்ய எந்தவிதத் தடையும் கிடையாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டத் துறையில் உயர் பதவிகளுக்கு சட்டத்துறை அமைச்சகமும், உச்சநீதி மன்றமும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த நீதிபதி களை பரிந்துரை செய்து தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளது. எனினும் அந்தக் கடிதங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எந்த ஒரு கருத்தை யும் தெரிவிக்கவில்லை.
இந்திய நீதித்துறையில் முக்கால்வாசி இடங்களை பார்ப்பனர்கள் பிடித்துள்ளனர். உச்சநீதிமன்றத்திலும், மாநில உயர்நீதிமன்றங்களிலும் பார்ப்பன நீதிபதிகள் நிரம்பி வழிகின்றனர். அங்கு இட ஒதுக்கீடு இல்லாத நிலையில் மற்ற யாருக்கும் இடம் கொடுக்காவண்ணம் 3 விழுக்காடு உள்ள பார்ப்பனர்களே தங்கள் ஆதிக் கத்தைச் செலுத்தி வருகின்றனர்.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 24 என்றால், அதில் பார்ப்பனர்கள் 9 பேர். இந்தியா முழுவதும் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண் ணிக்கை 380 பேர்கள் என்றால், இதில் பார்ப்பனர்கள் 166 பேர்.
கீழமை நீதிமன்றங்களில் இந்தியா முழுவதும் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 160; இதில் பெண்கள் 4 ஆயிரத்து 704 பேர்கள் மட்டுமே; மீதி இடங்கள் அனைத்திலும் ஆண்களின் ஆதிக்கம் தான்.
உச்சநீதிமன்றத்தில் ஒரே ஒரு பெண் நீதிபதி தமிழ்நாட்டைச் சேர்ந்த பானுமதி யாவார். 2014 முதல் இதுவரை, புதிதாக ஒரு பெண்கூட உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை.
தாழ்த்தப்பட்டவர்களும், பெண்களும் இந்து மதத்தில் அய்ந்தாம் வருணத்தவர்களே என்பதால் நீதித் துறையில் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்டவர் களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் இல்லை. சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீதம் அளிக்கப்பட்டாலொழிய, அவர்களின் உரிமைகளைத் தட்டிக் கேட்கும் வாய்ப்புக் கிடைக்கப் போவதில்லை. அந்த நிலை அவர்களுக்குக் கிடைக்கக்கூடாது என்பதால்தான் இந்த முட்டுக்கட்டை!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...