உத்தரப்பிரதேசத்தில் எங்கும் பார்ப்பன மயம், எந்த துறையிலும் பார்ப்பனர் மயம், மிகவும் பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதமிருக்கும் பதவியிலிருந்தும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைக்கிறார் சாமியார் முதல்வர் ஆதித்யநாத். சமீபத்தில் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்ட உத்தரப் பிரதேச பள்ளிக் கல்வித் துறை நிர்வாக உறுப்பினர்கள் பட்டியல்: பள்ளிக்கல்வித்துறை நிர்வாகக்குழு தலைவர் விரேஜ் குமார் ராம்- மத்திய அமைச்சர் மனோஜ் சின்காவின் மைத்துனர் (உயர் ஜாதியினர்).
முதன்மை உறுப்பினர் திரேந்திர திரிவேதி - பாஜக மாநிலங்களவை உறுப்பினர் மகேந்திர நாத் பாண்டேவின் சகோதரர் முறை (பார்ப்பனர்).
உறுப்பினர் அஜித் சிங் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மருமகளின் சகோதரர் (உயர் ஜாதியினர்).
உறுப்பினர் ஓம்பிரகாஷ் ராய் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் சம்பந்தி (பார்ப்பனர்).
உறுப்பினர் தினேஷ் மானி திரிபாடி - உத்தரப்பிரதேச மாநில இணை முதல்வர் தினேஷ் சர்மாவின் மைத்துனர்(பார்ப்பனர்).
உறுப்பினர் ஹரேந்திர குமார் ராய் - இவரும் மகேந்திர நாத் பாண்டேவின் உறவினர் (பார்ப்பனர்).
(- உத்தரப்பிரதேச அரசாணை - 24/3/2018). இவர்கள் அத்தனைப் பேருக்கும் உள்ள ஓர் ஒற்றுமை அனைவரும் ஆர்.எஸ்.எஸின் மிகவும் முக்கியமான செயல்பாட்டாளர்கள். இனி உத்தரப்பிரதேசப் பள்ளிகளின் நிலைமை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது. மாநிலப் பொதுத்துறை நிர்வாகத்தின் நடவடிக் கைகளைக் கண்காணிக்க சிறப்புக்குழு ஒன்று 2018 - ஜனவரியில் அமைக்கப்பட்டது, புதிதாக அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் உள்ள மொத்தம் 17 பேர்களுமே பார்ப்பனர்கள்! பார்ப்பனர்கள்!!
இதில் பலர் அகிலேஷ் அரசால் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வர்கள். இதில் மிகவும் நகைப்பிற்குரிய தகவல் அகிலேஷ் தலைமையில் முன்பு இருந்த அரசு ஆக்ரா தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்திற்கு டெண்டர் வழங்கியதில் 500 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது என்று கூறியது; அதற்கான விசாரணை ஆணையம் ஒன்றை சாமியார் ஆதித்யநாத் 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமைத்தார். இந்த ஆணையத்தால் முதன்மைக் குற்றவாளிகள் என்று கூறப்பட்ட 2 பேர் புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு சிறப்புக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். எங்கெங்கெல்லாம் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று உள்ளதோ அங்கெல்லாம் மிகவும் வேகமாக பார்ப்பனர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் மாவட்டக் காவல்துறை உயரதிகாரிகளாக பார்ப்பனர்கள் மற்றும் உயர் ஜாதியினரே தொடர்ந்து அமர்த்தப்பட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் நிருவாகம் அனைத்தும் பார்ப்பன மயம் என்றால், இன்னொரு பக்கம் தாழ்த்தப் பட்டவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள்!
மக்களவை உறுப்பினராக இருக்கக் கூடியவரும், அமெரிக்க சென்று உயர்நிலை - கல்வி பெற்றவரும், இதயவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று, தங்கப் பதக்கம் பெற்றவருமான யஸ்வந்த்சிங், ஜாதவ்கமாஜ் - இத்துறையில் இந்தியாவில் இருக் கும் ஒரே ஒரு மருத்துவர் நிபுணர் இவர் மட்டுமே!
இவ்வளவுத் தகுதியிலிருந்தும் தாழ்த்தப்பட்டவர் என்கிற ஒரே காரணத்தால் - இவர் பிஜேபிகாரராக இருந்தும் ஒதுக்கப்படுகிறார்; அவமானப்படுத்து கிறார்; இதனை பிரதமர் மோடி அவர்களுக்கே கடிதம் வழி தெரிவித்துள்ளார். உ.பி. முதல்வர் ஆதித்யநாத் பற்றியும் குமுறியுள்ளார்.
பா.ஜ.க. ஆட்சி என்றால் பார்ப்பனர் ஆட்சிதான் என்பது பட்டப் பகலில் பசு மாடு தெரிவது போன்றதே! பார்ப்பனர் அல்லாதாரே சிந்திப்பீர்!
No comments:
Post a Comment