Wednesday, July 3, 2019

"எல் நினோ" பாதிப்பால் பருவமழை தாமதம்!

வானிலை ஆய்வு நிலையப் பதிவேடுகளி ன்படி, கடந்த 100 ஆண்டுகளில் மிகவும் வறட்சியான 15 ஜூன் மாதங்களில் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதமும் ஒன்றாகச் சேர்ந்துள்ளது. இம்மாதத்தில் மழை அளவு வழக்கத்தைவிட 35 சதவிகிதம் குறை வாக உள்ளது. ''எல்நினோ" பாதிப்பின் காரண மாக பருவமழை தாமதம் அடைந் ததும் இதற்கான காரணங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது.
இது குறித்து 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆங்கில நாளேட்டின் 12.6.2019 தேதி இதழில் வெளியிடப்பட்டுள்ள சிறப்புச் செய்தியில் குறிப் பிடப்பட்டிருப்பதாவது: இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் பதிவேடுகளின் அடிப் படையில் கடந்த 100 ஆண்டுகளில் மிகவும் வறட்சி யான 5 ஜூன் மாதங்களில் -  இந்த ஜூன் மாதமும் ஒன்றாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஜூன் மாதத்தில் கிராமப் புறங்களில் பெய்த மழையின் அளவு வழக்கத்தைவிட 35 சத விகிதம் குறைவாக இருந்தது.
அகில இந்திய அளவில் ஜூன் மாதங்களில் வழக்கமாகப் பெய்யக் கூடிய அளவான 151.1. மில்லி மீட்டரில், 99.9 மில்லி மீட்டர் அளவுக்கு (ஜூன் 28 ஆம் தேதி வரை) தான் பெய்துள்ளது. மாதம் முடிவடைந்து விட் டதால் இனி, இந்தப் பற்றாக் குறை குறைவதற்கு வாய்ப்பு இல்லை.
வழக்கமாக ஜூன் மாதங் களில் 106 முதல் 112 மில்லி மீட்டர் வரை மழை பெய்வது வழக்கம் இதை விட குறைவாக நான்கே நான்கு ஆண்டு களில் மட்டும் தான் 2009 (85.7 மி.மீ) 2014 (95.4. மி.மீ.) 1926 (98.7 மி.மீ) மற்றும் 1923 (102 மி.மீ.) இதை விடக் குறைவாக மழை பெய்துள்ளது.
2009 மற்றும் 2014 ஆகிய இரு ஆண்டுகளிலும் ஜூன் மாதங்களில் எல் நினோ பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த ஆண்டும் அந்தப் பாதிப்பு ஏற்பட்டதால்தான் பருவ மழை தாமதமானது. 2014ஆம் ஆண் டில் பருவமழை தொடங்கிய பிறகுதான் ''எல் நினோ '' பாதிப்பு ஏற்பட்டது. ''எல் நினோ  பாதிப் பின்போது கிழக்கு மற்றும் மத்திய பூமத்திய ரேகைப் பகுதிகளில் பசிபிக் பெருங் கடலில் வெப்பம் அதிகரித்தால், காற்றின் சுழற்சியில் மோசமான மாற்றங்கள் ஏற்பட்டு இந்தியப் பருவமழையில் மாற்றத்தை ஏற் படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு வானிலை அதிகாரிகள் 'எல் நினோ பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றனர் அதனால் பருவமழை தாமதமாகத் தொடங்கி குறைவான முன் னேற்றத்தையே ஏற்படுத்தியுள் ளது.
கடந்த வாரமே மிகத் தாமத மாகத் தொடங்கிய தென்மேற்கு பருவமழை வறட்சியால் பாதிக்கப்பட்ட மரத் வாடா மற்றும் விதர்பா பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மும்பையில் மட்டுமே பலத்த மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் புதிதாக ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத் தில் ஒடிசா மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு தனது சிறப்புச் செய்தியில் குறிப் பிடப் பட்டுள்ளது.

Monday, July 1, 2019

விவசாயத்தை பாதிக்கும் அய்ட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களைக் கைவிடுக!

டெல்டா மாவட்டங்களில் கஜாபுயல் தாக்கி பல மாதங்கள் ஆகியும் இன்னும் முழுமையான நிவாரணம் மக்களுக்கு வரவில்லை . மேலும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மின்கம்பங்கள், தொலைத் தொடர்பு சாதனங்கள் இன்னமும் சரி செய்யப்படவில்லை. உடனடியாக அதற்கான நடவடிக்கை களை மேற் கொள்ள வேண்டும். மேலும் விவசாயத்தை பாதிக்கும் அய்ட்ரோ கார்பன், மீத்தேன் உள் ளிட்ட திட்டங்களை டெல்டா பகுதிகளில் செயல்படுத்த கொடுத்த அனுமதியை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெறவேண்டும் என நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல் வராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வ ராஜ் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் போது குறிப்பிட்டு பேசியதாவது:

நம் தேசத்தின் மய்யமான விவ சாயப் பொருளாதாரத்தை மேம் படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளீர்கள். ஆனால் உங்களது உரையில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மாபெரும் தேசத்திற்கு உணவளிக்கும் விவசாயிகள் வறு மையில் வாடுகின்றனர். அதனால் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். விவசாய உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. விவசாயத்திற்கு அடிப்படையான நீர் ஆதாரம் பாழ்பட்டுக் கிடக்கிறது. காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும் கருநாடகம் தமிழகத் திற்கு தரவேண்டிய தண்ணீரை தர இன்றுவரை முரண்டு பிடிக்கிறது. மத்திய அரசோ பாராமுகமாய் மவுனம்  சாதிக்கிறது. இதனால் எட்டு ஆண்டுகளாக தமிழக விவசாயம் முற்றிலும் பொய்த்துப் போய் விட்டது. ஒருபுறம் விவசாயத்தை வளர்ப்போம் என கூறிக் கொண்டே மறு புறம் அரசால் நடை முறைப் படுத்தப்படும் அய்ட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் எரிவாயுத் திட்டம், உயர் அழுத்த மின்கோபுரம், விவசாய நிலங்களை அழித்து சாலை விரி வாக்கம், சாகு படி நிலங்களில் கெயில் குழாய் பதிப்பு போன்ற விவசாயத்திற்கு எதிரான திட்டங்கள் அரங்கேற்றப் படுகிறது. அய்ட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்கள் உட னடியாக கைவிடப்பட வேண்டும். உயர் அழுத்த மின்கோபுரம், கெயில் குழாய் பாதிப்பு போன்ற வற்றிற்கு விளைநிலங் களை தவிர்த்து மாற்று வழியை மேற்கொள்ள வேண்டும். வளர்ச்சித் திட் டம் என்கிற பெயரால் விவசாய விளைநிலங் களை விவசாயிகள் ஒப்பு தல் இன்றி அபகரிப்பது என்பதும் ஒருவகையான அரசு பயங்கரவாதமே.

கடந்த 1997ஆம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் மாண்புமிகு   மிஸ்ரா அவர்களால் நிறைவேற்றப் பட்ட பயிர்காப்பீட்டு திட்டம் பின்னர் மாண்புமிகு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் அரசால் அமல்படுத்தப்பட்டு பிர்காவில் இருந்து கிராம வாரியாக கணக் கெடுப்பு நடத்தப்பட்டு முறையாக வழங்கப்பட்டது. சமீப காலமாக இந்த திட்டம் நீர்த்துப்போய் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் தனியார் இன் சூரன்ஸ் நிறுவனத்திடம் பயிர் காப்பீடு ஒப்படைக்கப்பட்ட தே ஆகும். 2017-18 ஆம் ஆண்டுக்கான காப் பீட்டு தொகை விவசாயி களுக்கு இன்று வரை வழங்கப்படாமல் நிலு வையில் உள்ளது. எனவே மீண்டும் தேசிய மயமாக் கப்பட்ட இன்சூரன்ஸ் கம்பெனி களுக்கு ஒப் படைக்கப்பட்டு நிலு வைத் தொகை வழங்கப் பட வேண்டும். நாடு முழுவதும் வேலை யில்லாத் திண்டாட்டம் பெருகுவ தால் இளை ஞர் களின் கனவு சிதைந்து அவர்கள் சமூகவிரோத செயல்களில் ஈடுபட வழிவகுக்கிறது.

கடந்த ஆண்டு தென் மாவட் டங்களில் கோரத் தாண்டவம் ஆடிய கஜா புயல் விவசாய நிலங் களை மாத்திரமின்றி தென்னை, வாழை உள் ளிட்ட உற்பத்தி பொருட் களை அழித்து நிர்மூலமாக்கியது. இதனை இயற்கை பேரிடராக அறி விக்காத தோடு முழு மையான நிவாரணத் தைக் கூட இதுவரை அரசு வழங்கிடவில்லை. தொலைத் தொடர்பு கோபுரங்கள், மின்கம்பங் கள் முறிந்து கிடக்கின்றன. இதுவரை அவைகள் முழுமையாக சரிசெய்யப் படவில்லை. மாண்புமிகு பிரதமர் கஜாப்புயலால் பாதிக்கப் பட்ட எம் மக்களுக்கு இதுவரை அனு தாபம் கூட தெரிவிக்க வில்லை என்று குறிப் பிட்டு பேசினார்.

பா.ஜ.க. ஆட்சியில் மத்தியப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியிடங்களில் இட ஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தாத அநீதி!

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின்கீழ் இயங்கி வரும் மத்தியப் பல்கலைக் கழகங்களில் உதவிப் பேராசிரியர், பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் பணியிடங்களில், பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 சதவிகிதமும், தாழ்த்தப்பட் டோருக்கு 15 சதவிகிதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவிகிதமும், ஆக மொத்தம் 49.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்.

ஆனால் மாநிலங்களவையில், மத் திய பா.ஜ.க. அரசின் மனிதவள் மேம் பாட்டுத் துறை சார்பில் அளிக்கப்பட் டுள்ள தகவலின்படி, இடஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்த வில்லை என்கிற தகவல் வெளிச்சத் துக்கு வந்துள்ளது.

40 மத்தியப் பல்கலைக் கழகங் களில், உதவிப் பேராசிரியர் எண் ணிக்கை மொத்தம் 7,548. அதில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவுகளைச் சார்ந்த உதவிப் பேராசிரியர்களும், மாற்றுத் திறனாளிகளான உதவிப் பேராசிரியர்களும் 2,621 பேர் இருக்கிறார்கள். அதாவது அவர்கள் 49.5 சதவிகிதம் பேர் இருக்கவேண்டும் என்பதற்கு மாறாக, 34.72 சதவிகிதம் பேர்தான் இருக்கிறார்கள். 14.78 சதவிகிதம் பேர் குறைவு. பேராசிரியர் கள் 62 பேர் இருக்கிறார்கள். மொத் தம் உள்ள பேராசிரியர்கள் எண் ணிக்கை 1043. அதில் இடஒதுக்கீடு 49.5 சதவிகிதம் என்ப தற்கு எதிராக, 5.94 சதவிகிதம் பேர் தான் இட ஒதுக் கீடு அடிப்படையில் வரும் பேராசிரி யர்கள். 43.56 சத விகிதம் பேர் குறைவு.

மொத்தம் இருக்கும் 2524 இணைப் பேராசிரியர்களில், 178 பேர் இட ஒதுக்கீடு அடிப்படையில் இருக் கிறார்கள். 49.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு என்பதற்கு மாறாக, 7.05 சதவிகிதம் இணைப் பேராசிரியர் கள்தான் இருக்கிறார்கள். 42.45 சத விகிதம் பேர் குறைவு.

மத்தியப் பல்கலைக் கழகங்களில், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட் டோர், பழங்குடியினர் ஆகியோர் சமுகநீதி சார்ந்த உரிமையின் அடிப் படையில் பெற வேண்டிய இட ஒதுக் கீட்டின் இன்றைய நிலை இதுதான்!

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த் தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு உரிய இட ஒதுக்கீடுஅளிக்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.

ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு, முன்னேறிய வகுப்புகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே நாடு முழுவதும் நடை முறைப்படுத்திட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறது.

வெளிநாட்டுக் கடன் இருமடங்கு அதிகரிப்பு

இந்திய நிறுவ னங்களின் வெளிநாட்டுக் கடன் கடந்த மே மாதத்தில் இருமடங்கு அதிகரித்துள்ளது.  இதுகுறித்து ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய நிறுவனங்கள் வெளி நாடுகளில் திரட்டிய கடன் கடந்த 2018 மே மாதத்தில் 135 கோடி டாலராக (ரூ.9,450 கோடி) இருந் தது. இது, நடப்பாண்டு மே மாதத் தில் இருமடங்கு அதிகரித்து 355 கோடி டாலரை (ரூ.24,500 கோடி) எட்டியுள்ளது.
ரிசர்வ் வங்கி அல்லது மத்திய அரசின் முன் அனுமதியின்றி திரட்டும் தானியங்கி வழிமுறை யில் இந்திய நிறுவனங்கள் 283 கோடி டாலரை திரட்டிக் கொண் டுள்ளன. ஒப்புதலைப் பெற்று திரட்டக்கூடிய வழிமுறையில் 65 கோடி டாலர் திரட்டப்பட்டுள்ளது.
இசிஎல் பைனான்ஸ் 50 கோடி டாலரையும், டில்லி இண்டர் நேஷனல் ஏர்போர்ட் 50 கோடி டாலரையும், இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ் 35 கோடி டாலரையும், டாடா கேப்பிட்டல் ஷபான்ஸியல் சர்வீசஸ் 25 கோடி டாலரையும், சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் பைனான்ஸ் 18 கோடி டாலரையும் தானியங்கி வழிமுறையில் (ஆட் டோமேட்டிக் ரூட்) திரட்டிக் கொண்டுள்ளன.
வெளிநாடுகளிலிருந்து கடனை ஒப்புதலை பெற்று திரட்டும் வழிமுறையில் (அப்ரூ வல் ரூட்), ஹவுஸிங் டெவலப் மெண்ட் பைனான்ஸ் கார்ப்பரே ஷன் 20 கோடி டாலரையும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 31 கோடி டாலரையும் திரட்டியுள்ளது என ரிசர்வ் வங்கியின் புள்ளி விவ ரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் நடப்பாண்டு மார்ச் இறுதி நிலவரப்படி 54,300 கோடி டால ராக அதிகரித்துள்ளது. கடந்த 2018 மார்ச் இறுதி நிலவரத்துடன் ஒப் பிடுகையில் 2.63 சதவீதம் (1,370 கோடி டாலர்) உயர்ந்துள்ளது.

குழந்தைகளுக்கும் வருமா சர்க்கரை நோய்?

குழந்தைகளுக்கும் வருமா சர்க்கரை நோய்? என்று பலர் கவலையுடனும் வியப்புடனும் கேட்பதுண்டு. எங்கள் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் ஒரு வயதிலிருந்து இருபது வயதிற்குள் நானூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் டைப் ஒன் என்ற முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கபட்டு சிகிச்சை எடுத்து கொண்டிருக்கிறார்கள். அறிகுறிகள் தெரியாமல் பல பெற்றோர் குழந்தையை கோமா நிலை வரும் பொழுது தான் மருத்துவமனைக்கு கொண்டு வரு வார்கள். அதற்குள் சர்க்கரை அளவு 500க்கு மேல் சென்று அமிலம் அதிகமாகி உயிரை எடுக்கும் நிலைக்கு சென்றுவிடும்.
குழந்தைகளிடம் இருக்கும் சர்க்கரை நோயை நான்கு முக்கியமான அறிகுறிகள் காட்டிக்கொடுக்கும். அவை:
எடை குறைதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், பசி தாங்க முடியாத அளவுக்கு இருத்தல், வாய் அடிக்கடி உலர்ந்துவிடும் அளவுக்கு தாகம். இந்த அறிகுறிகளில் எது இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி குழந்தையின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்ள வேண்டும்.
குழந்தை இரவு நேரத்தில் அடிக்கடி அறியாமல் சிறுநீர் கழித்து துணி மாற்ற வேண்டியிருந்தால் சர்க்கரை அளவை பார்ப்பது நல்லது. பாதிக்கப்பட்ட குழந்தை களுக்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி தேவைப்படும்.
சிலர் அலோபதி மருத்துவமே ஏமாற்று வேலை என்று "மூளை சலவை" செய்து இன்சுலின் ஊசி வேண்டாம் என்று சொல் வார்கள். மூலிகை, கீரை என்று மாற்று மருத் துவம் செய்யச் சொல்வார்கள். உயிருக்கே ஆபத்தாய் முடிந்துவிடும்.
சர்க்கரை நோய் இருக்கும் என் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படுமா? திருமணம் நடக்குமா? போன்ற பல கவலைகள் பெற்றோருக்கு வருவது இயல்பு. ஒழுங்காக இன்சுலின் ஊசி எடுத்துக்கொண்டு நல்ல மருத்துவரின் மேற்பார்வையில் இருந்தால் எவரெஸ்ட் மலையையே ஏறலாம் என்று கூறுவோம்.
இதோ செபாஸ்டியனின் கதை. வாழும் வரை இன்சுலின் ஊசி போட்டேயாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் செபாஸ்டியன். முதலில் அவர் சோர் வடைந்தது உண்மைதான். ஆனால் சில மாதங்களிலேயே அந்தச் சோர்விலிருந்து விலகிச் சீறிக்கொண்டு கிளம்பினார்.
“சர்க்கரை நோயாவது சேப்பங் கிழங்காவது!  எதுவந்தாலும் எவரெஸ்டைத் தொட வேண்டும் என்ற என் கனவை விடமாட்டேன்” என்று தனக்குத் தானே சூளுரைத்துக்கொண்டார்.
அய்ந்து வருடங்கள் கடும் பயிற்சி மேற் கொண்டார். 2008ஆம் ஆண்டு... முதல் வகை சர்க்கரை நோயுடன் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் மனிதர் என்று வரலாறு அவருடைய சாதனையைப் பதிவு செய்தது. அவர் சொல்கிறார்:
“பெற்றோர்களே முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட உங்கள் குழந்தை களை கனவு காணச் சொல்லுங்கள்.
இந்த நோய் எனக்கு வரவில்லையென்றால் நான் எவரெஸ்ட் சிகரத்தைத் - என் வாழ்க்கையின் உச்சத்தை - தொட்டிருப்பேனா என்பது சந்தேகமே. நம்மால் முடியாதது எதுவுமில்லை”.
எங்களிடம் உள்ள பல டைப் ஒன் குழந்தைகளின் பெற்றோர் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்.
இன்றும் இன்சுலின் மற்றும் இன்சுலின் பம்ப் போன்றவைகளை வாங்கமுடியாமல் ஏழை குழந்தைகள் இறக்கும் அவலங்களை காண்கிறோம்.
முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு கூட பணமில்லை என்ற காரணத்திற்காக சிகிச்சை மறுக்கப்படக்கூடாது. அதனால் அந்தக் குழந்தை சாகக்கூடாது - இதுதான் நாங்கள் நடத்தும் இதயங்கள் அறக்கட்டளையின் நோக்கம்.
தற்பொழுது 100 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இன்சுலின், இன்சுலின் பம்ப் வாங்க, அவர்கள் கல்வி போன்றவைக்கு இதயங்கள் அறக்கட்டளை கை கொடுக்கிறது.
மேலும் அறிய www.idhayangal.org

கேட்பதைக் கொடுத்தால், கேட்காமல் வரும் சர்க்கரை!

கர்ப்பக் கால சர்க்கரைக் கோளாறால், 20 ஆண்டுகளுக்கு முன், 2 - 4 சதவீதம் பெண்கள் பாதிக்கப்பட்ட நிலை, இன்று பல மடங்கு அதிகரித்து உள்ளது.

கர்ப்பம் தரிக்கும் சமயத்தில், உடல் பருமன் அதிகம் இருப்பது, கருக் குழாயில் நீர்க்கட்டிகள், கணையம் சுரக்கும் இன் சுலின் சேமிப்பு உடலில் குறைவாக இருப் பது ஆகியவை, சர்க்கரைக் கோளாறு ஏற்பட, பொதுவான காரணங்கள்.

கர்ப்பிணி, வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்று சொல்லி, விரும்பியதை எல்லாம் சாப்பிட உறவினர்கள் ஊக்கப் படுத்துவர். 30 - 40 ஆண்டுகளுக்கு முன், 15 வயதிற்குள்ளேயே பெண்களுக்கு திரு மணம் செய்து விடுவர்; ஊட்டச் சத்து குறைபாட்டுடன் பெண்கள் இருப்பர்.

எனவே, குழந்தை உருவானவுடன், ஆரோக்கியமான குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக, விதவிதமாக பலகாரங்கள் செய்து தருவர்.

அதை யெல்லாம் பின்பற்ற வேண்டிய அவசியம், இப்போது இல்லை. வழக்கமாக சாப்பிடும் உணவுடன், இரண்டு டம்ளர் பால் கூடுத லாகக் குடித்தாலே, தேவை யான ஊட்டச் சத்து கிடைத்து விடும்.

கர்ப்பக் காலத்தில் சுரக்கும் பிரத்யேக ஹார்மோன்களால், இன்சுலின் சுரப்பு குறைந்து, சர்க்கரை அளவு அதிகமாகி விடும்.  குழந்தை பிறந்தவுடன், ஹார் மோன்களின் சுரப்பு, இயல்பான நிலைக்கு திரும்பியதும், இயல்பாக சுரக்கும் இன் சுலின், சர்க்கரை அளவை கட்டுப் படுத்தப் போதுமானது.  கர்ப்பக் காலத்தில் வரும் சர்க்கரைக் கோளாறுகளால் பாதிக்கப் படும் பெண் களில், 50 சதவீதம் பேருக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும், அடுத்த அய்ந்து ஆண்டுகளில் சர்க்கரைக் கோளாறு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  எனவே ஊட்டச் சத்து மிகுந்த, கலோரி குறைந்த உணவுகள் சாப்பிடுவது அவசியம்.

மகளிருக்கு அதிகாரமளிக்க தேசிய வரைவுக் கொள்கை

மகளி ருக்கு அதிகாரமளித்தலுக் கான தேசிய வரைவுக் கொள்கையை மத்திய அரசு தயாரித்துள்ளது.

பெண்களுக்கான கல்வி, உணவுப் பாதுகாப்பு, ஊட் டச்சத்து ஆகியவற்றில் அந்த வரைவுக் கொள்கை கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தகவ லறிந்த வட்டாரங்கள் கூறிய தாவது:

மகளிர் மற்றும் குழந் தைகள் நல மேம்பாட்டு அமைச்சகமானது, பல்வேறு தரப்பினரிடமிருந்து பெற்ற பரிந்துரைகளின் அடிப் படையில் மகளிருக்கு அதி காரமளித்தல் தொடர் பான தேசிய வரைவுக் கொள் கையை தயாரித்துள்ளது.
அதில் மகளிருக்கான உணவுப் பாதுகாப்பு, ஊட்டச் சத்து, கல்வி, மகளி ருக்கு எதிரான வன்முறை, நிர்வாகம் மற்றும் முடிவெ டுத்தல் திறமை, பொருளா தாரம் உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட் டுள்ளது.

குடியிருப்பு, அடிப்படைக் கட்டமைப்பு, குடிநீர் மற்றும் துப்புரவு, ஊடகம் மற்றும் கலாசாரம், விளையாட்டு, சமூகப் பாதுகாப்பு ஆகிய வற்றின் மூலம் பெண்களுக்கு உகந்த சூழலை உருவாக்கு வதற்கு அந்த வரைவுக் கொள்கையில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

பெண்களுக்கு அதிகார மளிப்பதையும், அவர்கள் தங்களது முழுத் திறனையும் பயன்படுத்தி வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சம அதிகாரம் பெற்று விளங்கும் சமூகம் ஒன்றை உருவாக்கு வதையும் இந்த வரைவுக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு உகந்த, புதுப்பிக்கத்தக்க, மரபு சாரா பசுமை ஆற்றல் வளங்களை வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த வரைவுக் கொள்கையில் விதிமுறைகள் உள்ளன. அத்துடன், கடத்தல் உள்ளிட்ட பெண் களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் கையாளுவது தொடர்பான பரிந்துரைகளும் இந்தக் கொள்கையில் அடங்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...