இந்திய நிறுவனங்கள் வெளி நாடுகளில்
திரட்டிய கடன் கடந்த 2018 மே மாதத்தில் 135 கோடி டாலராக (ரூ.9,450 கோடி)
இருந் தது. இது, நடப்பாண்டு மே மாதத் தில் இருமடங்கு அதிகரித்து 355 கோடி
டாலரை (ரூ.24,500 கோடி) எட்டியுள்ளது.
ரிசர்வ் வங்கி அல்லது மத்திய அரசின் முன்
அனுமதியின்றி திரட்டும் தானியங்கி வழிமுறை யில் இந்திய நிறுவனங்கள் 283
கோடி டாலரை திரட்டிக் கொண் டுள்ளன. ஒப்புதலைப் பெற்று திரட்டக்கூடிய
வழிமுறையில் 65 கோடி டாலர் திரட்டப்பட்டுள்ளது.
இசிஎல் பைனான்ஸ் 50 கோடி டாலரையும்,
டில்லி இண்டர் நேஷனல் ஏர்போர்ட் 50 கோடி டாலரையும், இந்தியாபுல்ஸ் ஹவுஸிங்
பைனான்ஸ் 35 கோடி டாலரையும், டாடா கேப்பிட்டல் ஷபான்ஸியல் சர்வீசஸ் 25 கோடி
டாலரையும், சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் பைனான்ஸ் 18 கோடி டாலரையும்
தானியங்கி வழிமுறையில் (ஆட் டோமேட்டிக் ரூட்) திரட்டிக் கொண்டுள்ளன.
வெளிநாடுகளிலிருந்து கடனை ஒப்புதலை பெற்று
திரட்டும் வழிமுறையில் (அப்ரூ வல் ரூட்), ஹவுஸிங் டெவலப் மெண்ட் பைனான்ஸ்
கார்ப்பரே ஷன் 20 கோடி டாலரையும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 31 கோடி
டாலரையும் திரட்டியுள்ளது என ரிசர்வ் வங்கியின் புள்ளி விவ ரத்தில்
கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் நடப்பாண்டு
மார்ச் இறுதி நிலவரப்படி 54,300 கோடி டால ராக அதிகரித்துள்ளது. கடந்த 2018
மார்ச் இறுதி நிலவரத்துடன் ஒப் பிடுகையில் 2.63 சதவீதம் (1,370 கோடி
டாலர்) உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment