வானிலை ஆய்வு நிலையப் பதிவேடுகளி ன்படி,
கடந்த 100 ஆண்டுகளில் மிகவும் வறட்சியான 15 ஜூன் மாதங்களில் 2019ஆம் ஆண்டு
ஜூன் மாதமும் ஒன்றாகச் சேர்ந்துள்ளது. இம்மாதத்தில் மழை அளவு வழக்கத்தைவிட
35 சதவிகிதம் குறை வாக உள்ளது. ''எல்நினோ" பாதிப்பின் காரண மாக பருவமழை
தாமதம் அடைந் ததும் இதற்கான காரணங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது.
இது குறித்து 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா'
ஆங்கில நாளேட்டின் 12.6.2019 தேதி இதழில் வெளியிடப்பட்டுள்ள சிறப்புச்
செய்தியில் குறிப் பிடப்பட்டிருப்பதாவது: இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின்
பதிவேடுகளின் அடிப் படையில் கடந்த 100 ஆண்டுகளில் மிகவும் வறட்சி யான 5
ஜூன் மாதங்களில் - இந்த ஜூன் மாதமும் ஒன்றாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த
ஜூன் மாதத்தில் கிராமப் புறங்களில் பெய்த மழையின் அளவு வழக்கத்தைவிட 35 சத
விகிதம் குறைவாக இருந்தது.
அகில இந்திய அளவில் ஜூன் மாதங்களில்
வழக்கமாகப் பெய்யக் கூடிய அளவான 151.1. மில்லி மீட்டரில், 99.9 மில்லி
மீட்டர் அளவுக்கு (ஜூன் 28 ஆம் தேதி வரை) தான் பெய்துள்ளது. மாதம்
முடிவடைந்து விட் டதால் இனி, இந்தப் பற்றாக் குறை குறைவதற்கு வாய்ப்பு
இல்லை.
வழக்கமாக ஜூன் மாதங் களில் 106 முதல் 112
மில்லி மீட்டர் வரை மழை பெய்வது வழக்கம் இதை விட குறைவாக நான்கே நான்கு
ஆண்டு களில் மட்டும் தான் 2009 (85.7 மி.மீ) 2014 (95.4. மி.மீ.) 1926
(98.7 மி.மீ) மற்றும் 1923 (102 மி.மீ.) இதை விடக் குறைவாக மழை
பெய்துள்ளது.
2009 மற்றும் 2014 ஆகிய இரு ஆண்டுகளிலும்
ஜூன் மாதங்களில் எல் நினோ பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த ஆண்டும் அந்தப்
பாதிப்பு ஏற்பட்டதால்தான் பருவ மழை தாமதமானது. 2014ஆம் ஆண் டில் பருவமழை
தொடங்கிய பிறகுதான் ''எல் நினோ '' பாதிப்பு ஏற்பட்டது. ''எல் நினோ பாதிப்
பின்போது கிழக்கு மற்றும் மத்திய பூமத்திய ரேகைப் பகுதிகளில் பசிபிக்
பெருங் கடலில் வெப்பம் அதிகரித்தால், காற்றின் சுழற்சியில் மோசமான
மாற்றங்கள் ஏற்பட்டு இந்தியப் பருவமழையில் மாற்றத்தை ஏற் படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு வானிலை அதிகாரிகள் 'எல் நினோ
பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றனர் அதனால் பருவமழை தாமதமாகத்
தொடங்கி குறைவான முன் னேற்றத்தையே ஏற்படுத்தியுள் ளது.
கடந்த வாரமே மிகத் தாமத மாகத் தொடங்கிய
தென்மேற்கு பருவமழை வறட்சியால் பாதிக்கப்பட்ட மரத் வாடா மற்றும் விதர்பா
பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மும்பையில் மட்டுமே பலத்த மழை
பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் புதிதாக ஏற்பட்ட
காற்றழுத்த தாழ்வு மண்டலத் தில் ஒடிசா மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில்
மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு தனது சிறப்புச் செய்தியில் குறிப் பிடப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment