மகளி ருக்கு அதிகாரமளித்தலுக் கான தேசிய வரைவுக் கொள்கையை மத்திய அரசு தயாரித்துள்ளது.
பெண்களுக்கான கல்வி, உணவுப் பாதுகாப்பு,
ஊட் டச்சத்து ஆகியவற்றில் அந்த வரைவுக் கொள்கை கவனம் செலுத்தியுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தகவ லறிந்த வட்டாரங்கள் கூறிய தாவது:
மகளிர் மற்றும் குழந் தைகள் நல மேம்பாட்டு
அமைச்சகமானது, பல்வேறு தரப்பினரிடமிருந்து பெற்ற பரிந்துரைகளின் அடிப்
படையில் மகளிருக்கு அதி காரமளித்தல் தொடர் பான தேசிய வரைவுக் கொள் கையை
தயாரித்துள்ளது.
அதில் மகளிருக்கான உணவுப் பாதுகாப்பு,
ஊட்டச் சத்து, கல்வி, மகளி ருக்கு எதிரான வன்முறை, நிர்வாகம் மற்றும்
முடிவெ டுத்தல் திறமை, பொருளா தாரம் உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை
அளிக்கப்பட் டுள்ளது.
குடியிருப்பு, அடிப்படைக் கட்டமைப்பு,
குடிநீர் மற்றும் துப்புரவு, ஊடகம் மற்றும் கலாசாரம், விளையாட்டு, சமூகப்
பாதுகாப்பு ஆகிய வற்றின் மூலம் பெண்களுக்கு உகந்த சூழலை உருவாக்கு வதற்கு
அந்த வரைவுக் கொள்கையில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
பெண்களுக்கு அதிகார மளிப்பதையும், அவர்கள்
தங்களது முழுத் திறனையும் பயன்படுத்தி வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சம
அதிகாரம் பெற்று விளங்கும் சமூகம் ஒன்றை உருவாக்கு வதையும் இந்த வரைவுக்
கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு,
சுற்றுச்சூழலுக்கு உகந்த, புதுப்பிக்கத்தக்க, மரபு சாரா பசுமை ஆற்றல்
வளங்களை வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த வரைவுக் கொள்கையில்
விதிமுறைகள் உள்ளன. அத்துடன், கடத்தல் உள்ளிட்ட பெண் களுக்கு எதிரான
அனைத்து வன்முறைகளையும் கையாளுவது தொடர்பான பரிந்துரைகளும் இந்தக்
கொள்கையில் அடங்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment