Saturday, November 19, 2011

நேருவை நினைக்கும் நாளில் குழந்தைகளின் சிந்தனைக்கு


மு.வி. சோமசுந்தரம்

இந்தியாவின் முடிசூடா மன்னர்
ஆசிய ஜோதி
விடுதலை இந்தியாவின் முதல் பிரதமர்
அணைக் கட்டுகளும், தொழிற் சாலைகளுமே நாட்டின் கோவில்கள் என்றவர்
நட்புக்கும், நாடுகளின் அமைதிக்கும் வழிவகுக்கும் பஞ்சசீலக் கொள்கையை உலகுக்கு வழங்கியவர்.
பகுத்தறிவுக் கொள்கையின்பால் பற்று கொண்டவர்
குழந்தைகளின் நலனே நாட்டின் வளம் என்ற நம்பிக்கை கொண்டவர்.

பண்டிதர் ஜவகர்லால் நேருவின் 123ஆம் ஆண்டு பிறந்த நாள், நவம்பர், 14,2011. இந்த நாளை குழந்தைகள் நாளாக நாடு கடைப் பிடிக்கிறது.

நேரு அவர்கள், டிசம்பர் 3, 1949இல் உலகக் குழந்தைகளை விளித்து, தன் எண்ணங்களையும், விழைவையும் ஒரு கடிதம் வாயிலாக ஒரு வெளியீட்டை உலகுக்கு வழங்கினார். அந்தக் கடிதமாவது:

அன்புக் குழந்தைகளே!

நான்குழந்தைகளுடன் ஒன்றி யிருக்க விரும்புகிறேன். அவர் களுடன் பேசி மகிழ விரும்புகிறேன். இவற்றிற்கு மேலாக அவர்களுடன் சேர்ந்து விளையாட விரும்புகிறேன். நீங்கள் என்னுடன் இருந்தால், நான் இந்த அழகிய உலகைப் பற்றி பேச விரும்புகிறேன்.

இந்த உலகில் நம்மைச் சூழ்ந்துள்ள, மலர்கள், மரங்கள், பறவைகள், விலங்குகள், விண்மீன்கள், மலைகள், பனிப் பாறைகள் பற்றி பேச விரும்புகிறேன். இந்த அழகிய காட்சிகள் நம்மைச் சுற்றி உள்ளன. ஆனால்,  பெரிய வர்கள், இவற்றை மறந்து விடுகின் றனர். வீணான விவாதத்திலும், வாய்ச் சண்டைகளிலும் காலத்தை கழிக் கிறார்கள். நாங்கள் அலுவலகங்களில் அமர்ந்து கொண்டு, முக்கியமான வேலைகளைச் செய்வதாக நினைக் கிறோம்.

ஆனால் நீங்கள் சிறந்த அறிவு படைத்தவர்கள் என்று நம்புகிறேன். அதனால் நீங்கள் உங்கள், கண்களைத் திறந்து, காது மடுத்து இந்த எழில் காட்சிகளை உணருங்கள். மலர்களின் பெயர்களை அறிந்து கொள்ளுங்கள். பறவைகளின், ஓசை, பாடல்களிலிருந்து அவற்றை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

இவற்றுடனும், இயற்கையுடனும் நட்பை வளர்த்துக் கொள்வது எவ்வளவு எளிது என்று எண்ணிப் பாருங்கள். இவற்றுடன் அன்பாகவும் பாசத்துடனும் அணுகுவ தன்மூலம் அவற்றின் நட்பு எளிதில் கைகூடும்.

வளர்ந்த பெரியவர்கள், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் முறைமையும், தனிக்கூட்டமாக இயங்கும் முறை வியப்பான ஒரு செயல். அவர்களுக்கிடையே தடையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். மதம், ஜாதி, நிறம், கட்சி, நாடு, மாநிலம், மொழி  சம்பிரதாயம், ஏழை, செல் வந்தர் போன்றவையே அந்தத் தடைகள்.

அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட சிறையில் அவர்கள் உள் ளனர். நல்லவேளையாக இப்படி மனிதனைப் பிரிக்கும் இத்தகைய தடை கள் குழந்தைகளுக்குத் தெரிவதில்லை. குழந்தைகள் ஒன்றோடொன்று சேர்ந்து விளையாடுகிறார்கள். வேலை செய் கிறார்கள். ஆனால் அவர்கள் வளர்ந்த பிறகே, மற்ற பெரியவர்கள் மூலம் இத்தகைய தடைகளைப் பற்றி அறிய வருகின்றனர்.

நேரு தேர்தல் களத்தில்...

இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் 1952இல் நடைபெற்றது. நேரு அவர்கள், உத்தரப் பிரதேச மாநிலத் தில், அவரின் கோட்டை என்று கருதப் பட்ட பகல்பூரில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து நிற்கும் துணிச்சல், சுவாமி பிரபுடட் பிரமாச்சாரிக்கு வந்தது. சுயேச்சையாக எதிர்த்து நின் றார். ஆனால் அவரைத் தீவிர இந்து மத அமைப்புகள் ஆதரித்தன. குறிப்பாக இந்து மகாசபை என்ற பழைமை விரும்பி இந்து மத அமைப்பும், பாரதிய ராமராஜ்ய பர்ஷத் அமைப்புகளுமாகும்.

இந்த இந்து அமைப்புகள் ஏன் தீவிரமாக எதிர்த்தன? இந்துக்களைக் கட்டுப்படுத்தக் கூடிய இந்து சீர்திருத்த சட்டம் ஒன்றை நேரு கொண்டு வர எண்ணியிருந்ததே காரணம். திருமணம், வாரிசு, சொத்துரிமை போன்ற துறைகளில் அதிரடி சீர்திருத்தம் வருவதற்கு ஏற்ற சட்டம் வகுக்கப்பட்டிருந்தது.

நேருவை எதிர்த்து தேர்தலில் நின்ற சாமியார், நீண்ட வெள்ளை கோவணம், மேலே காவி சால்வை அணிந்து வெள்ளை அடர்ந்த தாடி ஆரஞ்சு நிற கண் கண்ணாடியுடன் காட்சியளித்தார். 1931 மாதிரி டாட்ஜ் காரில், இந்து பக்தர்கள் பாட்டு குழு உடன் வர சாமியார் தேர்தல் பிரச்சாரம் செய்தார். மேடை அமைத்து, தாளம் தட்டி பாட்டு, நடனம் நடத்தி பிரசாரம் செய்தார். துண்டறிக்கைகளைத் தொண்டர்கள் வழங்கினர்.

சாமியார் கையெழுத்திட்ட துண் டறிக்கையில் இந்து சீர்திருத்த  சட்டம், மதத்தை அழிக்கும், சாதிகளில் குழப்பம் ஏற்படுத்தும். குடும்பத்தைப் பிளவுபடுத்தும் வழக்கறிஞர்கள்தான் லாபமடை வார்கள் என்று கூறப்பட்டிருந்தது. தேர்தலில் சாமியார் படுதோல்வி யடைந்தார். அதைத் தொடர்ந்து மவுனவிரதம் மேற்கொண்டு, ஷீபர் பேனா எடுத்து என் உள் ஆத்மா கட்டளை இட்டதால் தேர்தலில் நின்றேன் என்று அறிக்கை விட்டார்.

நேருவும் அட்டன்பரோவும்

காந்தியார் வாழ்க்கைப் பற்றித் திரைப்படம் தயாரித்த ஆட்டன்பரோ, நேருவை புதுடில்லியில், 1963இல் சந்தித் தார். தான் தயாரிக்கும் திரைப் படத் திற்கு, நேருவிடம் அனுமதி கேட்டார் அட்டன்பரோ. அனுமதி வழங்கி, நேரு ஒரு அறிவுரையும் கூறினார்.
நீங்கள், எதை, எப்படி செய்தாலும், அவரை (காந்தியை) கடவுளாக சித்திரிக் காதீர்கள். அந்தத் தவறை நாங்கள் இந்தியாவில் செய்கிறோம். காந்தி கடவுள் என்று சொல்லப்படும் நிலையை விட உயர்ந்தவர்

குறிப்பு:
 மேலும் பல சுவையான செய்திகளை அறிய, பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவன வெளி யீடான இதழ்களை ஏந்திய மலர் என்ற நூலில் படித்து அறியலாம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...