தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர் கருத்துப் பேழை
முனைவர் பேராசிரியர் ந.க.மங் களமுருகேசன் அவர்கள் சிறந்த வரலாற்றுப் பேராசிரியர். அவர் எழுதிய நூல்கள் பல பல்கலைக் கழகங்களில் பாடநூல்களாக வைக் கப்பட்டிருக்கின்றன. அவர் பெயரை உச்சரிக்காத வரலாற்றுத் துறைகள் இருக்காது. எந்த விஷயமானாலும் வேர் வரைச் சென்று தகவல்களைத் திரட்டி தமக்கே உரித்தான நடையில் அருமையாக வழங்கும் ஆற்றல் பெற்றவர். கும்பகோணம் மகாமகம் - பெரியார் பார்வை என்னும் கட்டுரை பெரியார் பிறந்த நாள் மலரை அலங் கரிக்கின்றது. மகாமகம் பற்றிய புராணச் செய்திகளும், பூமி சூரி யனைச் சுற்றும் அறிவியல் செய்தி களும் குளத்தைச் சுற்றி எழுப்பப்பட்ட மண்டபக் கோயில்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகளும் இக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.
தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை வியந்து போற்றும் பேராசிரியர் மங்களமுருகேசன், பெரியார் நடையில் உளம் உருகி மெய் சிலிர்த்து நிற்கிறார். அவர் கேட் கிறார் : தமிழ்ப் பண்டிதர்களே, தமிழ் அறிஞர்களே, மெத்தப் படித்த மேதாவிகளே, இது போர் (பெரியார் கேட்டது போல்) நீங்கள் படித்த, படைத்த இலக்கியம் - வினா இலக்கியம் ஏதாவது இருக்கிறதா? இதுபோல் வினாக்களாலேயே வேறு எந்த மொழியிலாவது, எந்த அறிஞ ராவது, படைத்திருக்கிறாரா? முடிந் தால் காட்டுங்கள் என்று பேரா சிரியர் விடுக்கும் அறைகூவல் பெரி யாரின் பெருமையை உலகிற்கு உணர்த்துகிறது.
மு.நீ. சிவராசன் அவர்கள் தமிழ் இலக்கியங்களைக் கற்றறிந்த அறிஞர். தெளிவான உச்சரிப்பில் கருத்தை உரைக்கும் திறன் பெற்றவர். புராண, இதிகாசங்களின் இயல்பினை நன் குணர்ந்தவர். பெரியார் பிறந்த நாள் மலரில் அவர்,
வழிவழித் தொடரும் ஆரியர் திராவிடர் போராட்டமே எனும் கட்டுரை எழுதியி ருக்கின்றார். பாகவ தத்தில் வேதவியாசர் கூற்று, தமி ழகத்து பழமொழிகள், மனுதர்ம வாசகங்கள், இராமாயண, மகா பாரதக் கதைகள், பெஞ்சமின் வாக்கர் எழுதியது, உச்சநீதிமன்ற நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜூ கூறியது, பெரியாரின் கருத்துக்கள் என்று ஆரியர்-திராவிடர் போராட் டத்தை ஓர் ஆவணமாக்கித் தந்துள்ளார். வேனன் என்னும் மன்னனை வஞ்சனை யால் வீழ்த்தியதையும், இரணியனை மகன் துணை கொண்டே கொன்றதும், தம்பி விபீஷணன் காட்டிக் கொடுக்க அண்ணன் இராவணன் வீழ்ச்சி பெற்றதையும், அசுர வேந்தர்களை தித்திக்கும் திலோத்தமை தீர்த்துக் கட்டியதையும், குருவால் வஞ் சிக்கப்பட்ட ஏகலைவனின் சோகச் சரித் திரத்தையும், இராமன் செய்த சம்பூகன் கொலையையும் மு.நீ.சிவராசன் தூரிகை ஓவியமாய் வரைந்து செல் கிறது. சென்னை விமான நிலையத்தில் பெருந் தலைவர் காமராசர் பட்ட அவமானங் களையும் கட்டுரை விவரிக்கிறது.
காதலைப் பற்றி பெரியார்
காதலைப் பற்றி தந்தை பெரியார் 1931 ஆம் ஆண்டு எழுதிய கட்டுரை மலரில் இடம் பெற்றிருக்கின்றது. அய்யாவின் வளமான சிந்தனையை உள்ளடக்கிய இக்கட்டுரை ஆங்கி லத்தில் மொழி பெயர்க்கப்பட்டால் எழுத்தாளர்களின் கவனத்திற்குச் சென்றால்
அய்யாவின் அத்தனை வரி களும் மேற்கோளாய் பரவும், உலாவரும்.
முனைவர் பேராசிரியர் ப.காளிமுத்து அவர்கள் அற்புதமான சொற்சித்திரத்தை - கருத்தோவியத்தை ஈரோடும் ஏதென்சும் என்னும் தலைப்பில் மலரில் படைத் திருக்கிறார். சாக்ரடீசைப் பற்றி விரிவாகக் குறிப்பிடும் காளிமுத்து தந்தை பெரியார் அவர்களும் சாக்ரடீசும் ஒன்று படுகின்ற இடங்களையும் வேறுபடும் இடங் களையும் கட்டுரையில் மனங்கொள் ளுமாறு விவரித்திருக்கிறார்.
நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்று நஞ்சருந்தி தன் உயிரை மாய்த்துக் கொண்டவர் சாக்ரடீஸ் என்றும், தம் வ ழ்நாளிலேயே தம்முடைய கொள்கைகள் வெற்றி பெற்று அரசியல் அதிகாரத் தைக் கைப்பற்றி அரியணையில் அமர்ந்த காட்சியைக் கண்டு மகிழ்ந் தவர் தந்தை பெரியார் என்றும் ஒப் பிட்டுக் காட்டுகிறார் காளிமுத்து.
நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்று நஞ்சருந்தி தன் உயிரை மாய்த்துக் கொண்டவர் சாக்ரடீஸ் என்றும், தம் வ ழ்நாளிலேயே தம்முடைய கொள்கைகள் வெற்றி பெற்று அரசியல் அதிகாரத் தைக் கைப்பற்றி அரியணையில் அமர்ந்த காட்சியைக் கண்டு மகிழ்ந் தவர் தந்தை பெரியார் என்றும் ஒப் பிட்டுக் காட்டுகிறார் காளிமுத்து.
தந்தை பெரியாரின் அன்பு உள்ளத் திற்கு, பெருந்தன்மை மிக்க பரந்த மன ப்பான்மைக்கு ஆயிரமாயிரம் சான்று களை அடுக்கிக் காட்டலாம். எழுத்தில் நின்று நிலைப்பவை கொஞ்சம். வர லாற்றில் பதிவாகாமலே மறைந்தது ஏராளம். தந்தை பெரியாரின் பெருமை யைப் பறைசாற்றும் கட்டுரையினை தமிழறிஞர் அ.ச.ஞான சம்பந்தம் எழுதியிருக்கின்றார். மிகச் சிறப்பான அக்கட்டுரை பெரியார் பிறந்த நாள் மலரில் இடம் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
புத்தர் பெரியார் -நாத்திகம்
க.திருநாவுக்கரசு சீரிய சிந்தனை யாளர்; திராவிட இயக்க எழுத்தாளர்; அவரை வரலாற்றுக் களஞ்சியம்என்று போற்றலாம். நிலைய நூல்களை வாசிக்கும் அறிஞர்; தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் மேதை. பெரியார் பிறந்த நாள் மலருக்கு அவர் எழுதிய, புத்தர் பெரியார் நாத்திகம் என்னும் கட்டுரை மலரின் பொருட் செறிவை அடர்த்தியாக்கி இருக்கிறது. திருநாவுக்கரசு தீட்டியி ருக்கும் கட்டுரை மீணடும் மீண்டும் படித்து மூளையில் பதித்துக் கொள்ள வேண்டிய கருத்துக் குவியல்.
புத்தரிடமிருந்து தத்துவமேதை தந்தை பெரியார் பார்ப்பனர் சேர்ப்பு, கடவுளின் இருப்பு, பெண்ணுரிமை,ஆன்மா என்று நான்கு நிலைகளில் வேறுபடுவதை எடுத் துரைக்கின்றார். பகுத்தறிவு பற்றி எஸ். இராமநாதன் கட்டுரை கேட்க, பண்டித ஜவகர்லால் நேரு எழுதிய பதில் கடிதம் கழகத் தோழர்களுக்குப் புதிய செய்தி யாகும்.
புத்தரிடமிருந்து தத்துவமேதை தந்தை பெரியார் பார்ப்பனர் சேர்ப்பு, கடவுளின் இருப்பு, பெண்ணுரிமை,ஆன்மா என்று நான்கு நிலைகளில் வேறுபடுவதை எடுத் துரைக்கின்றார். பகுத்தறிவு பற்றி எஸ். இராமநாதன் கட்டுரை கேட்க, பண்டித ஜவகர்லால் நேரு எழுதிய பதில் கடிதம் கழகத் தோழர்களுக்குப் புதிய செய்தி யாகும்.
சாருவாகம், சாங்கியம், மீமாம்சை, சமணம் பற்றியெல்லாம் சுருக்கமாய் விளக்குகிறது இக்கட்டுரை. ஆஸ்திகம் - நாஸ்திகம் பற்றி அண்ணா திராவிட நாட் டில் தீட்டிய கருத்தாழம் மிக்க சொல் லோவியம் இக்கட்டுரையை அணி செய்கிறது. பல நூல்களின் மூலம் கிடைக்க வேண்டிய அரிய செய்திகளை இந்த ஒரு கட்டுரை மொத்தமாக சத்தமில்லாமல் சிந்தைக்குள் சொல்லிச் செல்கிறது.
தந்தை பெரியாரின் பொதுவுடைமைக் கொள்கை
மு.பரமசிவம் எழுதியுள்ள பொது வுடைமைக் கொள்கையும் பெரியார் ஈ.வெ.ரா.வும் கட்டுரை பல வரலாற்றுச் செய்திகளைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. குடிஅரசு இதழ் நிகழ்த்திய பொதுவுடைமைப் பிரச்சாரம், புரட்சி ஏடு வெளியிட்ட சோவியத் ரஷ்யாவின் நீதி முறை, அய்ந்தாண்டுத் திட்டம், குடி அரசு புத்தகாலயம் வெளியிட்ட பொதுவு டைமைத் தத்துவ நூல், சுயமரியாதை மாநாட்டில் லெனின் படத்திறப்பு, பெரியாரின் சோவியத் பயணம் என்று வரலாற்றுத் தகவல்களை நிரல்பட வழங்கியிருக்கின்ற உயரிய கட்டுரை.
குடிஅரசு, ரிவோல்ட், புரட்சி, பகுத் தறிவு, விடுதலை, கூந துரளவஉந உண்மை, கூந ஆடினநச சுயவடியேடளைவ முதலியன பெரியார் நடத்திய இதழ் களாகும். அய்யாவின் நோக்கத்தி னையும் அவர் கொண்டிருந்த இலக் கினையும் பத்திரிகை எழுத்தின் துணை கொண்டே வாசகர்களின் பார் வைக்கு விருந்தாய் பரிமாறப்படும் பகுதி மலரில் இடம் பெற்றுள்ள பகர்வது பகலவன் என்னும் பகுதியாகும். பழைய இதழ்கள் அப்படியே ஸ்கேன் செய்யப்பட்டு பழைமை மாறாமல் புதுப் பொலிவுடன் தரப்பட்டிருக் கிறது. தந்தை பெரியாரின் இலட்சிய வேட்கையினை உணர்த்தும் இப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமாகும்.
கடந்த பெரியாராண்டில் கழக டைரி என்னும் பகுதி மலரில் இடம் பெற் றிருக்கிறது. இந்தத் தொகுப்பினால் விளையும் பயன் மிகுதி. படிக்கின்ற போது இவ்வளவு செயல்பாடுகளா என்ற மலைப்பை ஏற்படுத் தும். வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்ப்பதற்குக் கழக டைரி பேருதவி யாய்த் திகழ்கிறது. இயக்கப் போராட் டங்களை - செயல்பாடுகளை விடுதலை நாளிதழில் மூழ்கி முத்தெடுக்கும் முன் கழக டைரியில் எளிதாய் கண்டு கொள்ள முடிகிறது. நாள்தோறும் உழைத்தாலன்றி கழக டைரி தொகுப் பது அரிது என்பதைக் கற்றவரே உணர்வர்.
ஆசிரியரின் அறிக்கைகள் தேதி வாரி யாக -தலைப்புகளுடன் வெளி யிடப்படுவது தேவையான ஒன்றாகும். தலைவரின் கையெழுத்துக்கள் - அறிக்கைகள் யாவும் பெரியார் திடல் நூலகத்தில் ஆவணமாகப் பாதுகாக் கப்பட்டிருப்பதைத் தோழர்கள் கண்டு மகிழலாம். தமிழர் தலைவர் அவர்களின் சுற்றுப் பயணப்பட்டியல் வியப்பை ஏற்படுத்தும். ஓய்வில்லா அலைச்சல்; பெரியார் பணி முடிக்க இடைவிடாப் பிரச்சாரம்.
No comments:
Post a Comment