சீனாவின் பீஜி யான் மாகாணத்தின் குவான்சு
நகரில் 5 மாடிகளை கொண்ட ஓட்டல் ஒன்று கரோனா கண்காணிப்பு முகாமாக மாற்றப்பட்டு, கரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப் படும் நபர்கள் அதில்
தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த
ஓட் டல் திடீரென இடிந்து விழுந் தது. அதில் அங்கு தங்கியி ருந்த 71 பேர்
இடிபாடுகளுக் குள் சிக்கிக்கொண்டனர். இது பற்றி தகவல் கிடைத்ததும்
100-க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று,
தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பல மணி நேர போராட் டத்துக்கு பிறகு 38
பேர் படு காயங்களுடன் மீட்கப்பட்ட னர். அதனைத்தொடர்ந்து, இடிபாடுகளுக்குள்
சிக்கியி ருக்கும் மற்ற 33 பேரை மீட் பதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு
விடியவிடிய மீட்பு பணிகள் தொடர்ந்தன.
இந்த நிலையில் நேற்று காலை இடிபாடுகளில்
இருந்து 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 23 பேர் மாயமாகி இருக்கும்
நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும் மீட்பு
குழுவினர் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின் றனர்.
No comments:
Post a Comment