Wednesday, February 5, 2020

பிஜேபி ஆட்சியில் விற்கப்படும் இந்தியா....


“நீங்களாக வரி கட்டி விட்டால் யானைக்கு அது சாப்பிடும் அளவுக்கு மட்டும் சோற்றை உருட்டி உருட்டி கொடுத்ததுபோல இருக்கும். இல்லாவிட்டால் யானையே வயலில் இறங்கி சாப்பிட ஆரம்பித்து விடும். பிற கென்ன?? சேதாரம் அதிகமா கத்தான் இருக்கும்“ என்று எந்த ஜனநாயக நாட்டிலும் அமைச்சர்கள் பேசக்கூடாத முறையில் பேசி சென்ற ஆண்டு பட்ஜெட்டை அறிமுகப்படுத் தினார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்த ஆண்டு அறிக்கையிலோ, உருட்டிக்கொடுத்ததை தின்று தீர்த்துவிட்டு வயலிலும் இறங்கி சேதாரம் விளைவிப் போம் என்று அறிவித்திருக் கிறது பிஜேபி அரசு.
பட்ஜெட் என்பது பொரு ளாதாரத் திட்ட அறிக்கை . ஒரு அரசு அந்த நாட்டு இயற்கை வளங்களை தன் குடிமக்கள் நலனுக்கு எப்படிப் பயன்படுத்துவது, உருவாக்கப் பட்ட செயற்கை வளங்களான தொழிற்சாலைகள் நிறுவனங் கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பு கள் மூலமாக கிடைக்கும் பொருளாதாரத்தை மக்கள் மேம்பாட்டுக்கு எப்படிப் பயன் படுத்துவது, குடிமக்களின் வாழ்க்கைத்தரத்தை எப்படி உயர்த்துவது, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முன்னேற்றத் திற்கு வழி  வகுப்பது,என்பதற் கான அடிப்படை திட்டங் களை அறிவிப்பதுதான் பட்ஜெட்.
ஏற்கெனவே சென்ற ஆண்டு அறிவித்த படஜெட்டில் நிறை வேற்றப்பட்டவை என்ன? அதன் விளைவுகள் என்ன?
நிறைவேற்றப்படாதவை என்ன? அதற்கான காரணங் கள் என்னென்ன என்று பட் ஜெட்டின் முன்னுரையில் விளக்க வேண்டியது அவசி யம். அப்படி ஏதாவது விளக் கம் தரப்பட்டு இருக்கிறதா என்று பொருளாதாரம் படித்த நண்பர்கள் யாராவது சொல்ல வேண்டும்.
வரி விதிப்பின்மூலமாக மட்டுமே அரசு தன் கூடுதல் செலவினங்களை சமாளிக்கும் என்பது பொறுப்பற்ற அல்லது பொருளாதார ஆய்வும் அறிவும் இல்லாதவர்களின் ஆட்சிக்கு சாட்சி.
இதில் மாநிலங்களின் பங்கு என்ன? உரிமை என்ன? என்பதெல்லாம் கிழக்கிந்திய கம்பெனிக்கு கப்பம் கட்டிய குறுநில மன்னர்கள் கதை போல் இருக்கிறது.
இந்தியா மீண்டும் பணக் காரர்களின் ஜமீனாக மாறுவ தற்கான பட்ஜெட் தான் இது.
இனிமேல் நம்ம ரயில்கம் பெனி துரைமார் வைப்பது தான் ரயில் கட்டணம்.
மருத்துவமனையிலும் ராணுவத்திலும் தனியார் தலையீடு, அந்நிய முதலீடு.
எல்.அய்.சி.யில் பணம் போட்டால் பாதுகாப்பாக இருக்கும் என்ற தேச துரோக சிந்தனை இனி வேண்டாம்.
வங்கியில் இருக்கும் பணத்தை  நினைத்து பயந்து கொண்டிருப்பதா? இல்லை வீட்டில் வைத்துக் கொண்டு தூங்காமல் இருப்பதா?
இரண்டில் எது சிறந்த தேசபக்தி என்று பக்கத்தில் இருக்கும் மோடி பக்த ஹனு மான்கள் யாராவது இருந்தால் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...