Thursday, February 6, 2020

அமைச்சர்களுக்கு என்ன ஆயிற்று? மாநில முதல்வர் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவராம் கூறுகிறார் மத்திய அமைச்சர் ஜவ்டேகர்

டில்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி, அதற்கான சான்றுகள் உள்ளன என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டில்லி மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 8ஆ ம் தேதி நடக்கிறது. வாக்குகள் எண்ணப்பட்டு வரும் 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. வாக்குப்பதிவிற்கு சில நாள்களே உள்ளதால் அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன.
இந் நிலையில் டில்லியில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த போது  கூறியதாவது:  "அர்விந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து வாக்காளர்கள் பிரிந்து சென்றுவிட்டனர். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவர் தம் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு நான் என்ன தீவிரவாதியா? என்று கேட்கிறார். நீங்கள் தீவிரவாதி தான் என்பதை நிரூபிக்க நிறைய சான்றுகள் அரசிடம்  உள்ளன. நான் ஒரு அராஜகவாதி என்று கூறியிருக்கிறீர்கள். அராஜகவாதிக்கும், தீவிரவாதிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை" என்றார்.
பஞ்சாப் தேர்தல் சமயத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் காலிஸ்தான் கமாண்டருக்குச் சொந்தமான இடத்தில் தங்கியிருந்த விவகாரம் குறித்தும் ஜவ்டேகர் கூறியதாவது:
அது தீவிரவாதியின் வீடு என்று உங்களுக்குத் தெரியும். தெரிந்தும் நீங்கள் அங்கேயே தங்கினீர்கள். இன்னும் வேறு என்ன ஆதாரங்கள் வேண்டும்?  என்றார்.
முன்னதாக, கெஜ்ரிவாலை  தீவிரவாதி என்று அழைத்த குற்றச்சாட்டுக்காக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மாவுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியது.
இப்போது, மத்திய அமைச்சர் ஒருவரே அதே போன்று கருத்து கூறியிருப்பது குறிப் பிடத்தக்கது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...