குடும்பத் தகராறில் மனைவியை குத்திக்
கொன்று, தலையை துண்டித்து கையில் எடுத்துக் கொண்டு ஒரு நபர் ஊர்வலமாக காவல்
நிலையத் துக்கு சென்றார். காவல்துறையி னரிடம், பாரத் மாதா கீ முழக்க
மிட்டார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பஹதூர்பூர் என்ற
கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலேஷ் ராவத் (30). இவரது இணையர் ரஜனி (25).
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, 2 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டது.
முரடராக இருந்த அகி லேஷ், அடிக்கடி மனைவியிடம் சண்டை போடுவாராம்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை
(31.1.2020) இணையர்கள் இடையே வழக்கம்போல் சண்டை நடந்து உள்ளது.
ஒருகட்டத்தில் கோபத் தின் உச்சிக்கு சென்ற அகிலேஷ், தன் இணையரை போட்டு
சரமாரியாக அடித்து துவைத்துள்ளார்.
மேலும், வீட்டில் இருந்த கத் தியை எடுத்து ரஜனியை சரமாரி யாக குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
எனினும், ஆத்திரம் அடங்காத அகிலேஷ்,
ரஜனியின் தலையை தனியாக துண்டித்து, கையில் எடுத்துக் கொண்டு காவல்நிலையத்தை
நோக்கி நடந்துள்ளார். இதில் குறிப்பிட வேண்டிய விஷ யம். இணையரின் சண்டை,
கத்தி யால் அகிலேஷ் குத்தியது, இவை யனைத்தையும் அக்கம்பக்கத்தினர் வேடிக்கை
மட்டுமே பார்த்துள்ளனர்.
மனைவியின் தலையை தனியாக துண்டித்து
அகிலேஷ் எடுத்து வருவதை பார்த்ததும் அவர்கள் வீடுகளில் புகுந்து கொண்டு
கதவை சாத்திக் கொண் டுள்ளனர். சுமார் ஒன்றரை கிமீ. தூரம் வரை மனைவியுடன்
தலை யுடன் அகிலேஷ் நடந்து சென்று காவல்நிலையத்துக்கு சென்றார். அகிலேஷ்
தலையுடன் வரும் செய்தியை யாரோ தொலைபேசி யில் காவல்துறையினருக்கு
தெரிவித்துள்ளனர்.
அவர்கள் விரைந்து வந்து வழியிலேயே அவரை
மடக்கினர். காவல்துறையினரை பார்த்த அகிலேஷ், டாம்பீரகமாக நின்று கொண்டு,
‘ஜன கன மன...’ என்று தேசிய கீதத்தை பாட ஆரம்பித்துவிட்டார். பின்னர் ‘பாரத்
மாதா கீ ஜே’ என்று முழக் கமிட்டு, மனைவியின் தலையை காவல்துறையினரிடம்
கொடுத் தார். பின்னர் அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
No comments:
Post a Comment