காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரான
ஓமர்அப்துல்லா குறித்து தமிழக பாஜகவின் கீழ்த்தரமான டிவிட் சமுக வலைதளங்
களில் கடுமையான கண்டனங்களை எதிர்கொண் டது. மாநிலத்தின் முன்னாள் முதல்வரை
மிகவும் கீழ்த்தர மாக விமர்சித்த தமிழ்நாடு பாஜகவின் மனநிலையை சமூக
அர்வலர்கள் கடுமையாக விமர்சித்தனர்.காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி
ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக அம்மாநில
முன்னாள் முதல்வர்கள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில்
வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், சமீபத்தில்
வீட்டுக்காவலில் வைக்கப்பட் டுள்ள முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லாவின்
ஒளிப் படம் வெளியானது. எப்போ தும் இளமையுடன் , முகச் சவரம் செய்த நிலையில்
சிரித்த முகத்துடன் காணப்படும் ஓமர் அப்துல்லா தாடி மீசை யுடன் இருக்கும்
ஒளிப்படம் வெளியானது. இது சமூக வலை தளங்களிலும் வைர லானது.
இது அதிர்ச்சியை ஏற் படுத்திய நிலையில்,
திமுக தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட அரசியல்
கட்சியினர் சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் அதிர்ச்சி தெரிவித் துள்ளனர்.
இந்த ஒளிப்படம் குறித்து தமிழ்நாடு பாரதிய
ஜனதா கட்சி, தனது சமூகவலைதள பக்கத்தில், தாடியுடன் உள்ள ஓமர்
அப்துல்லாவின் படத் துடன், உங்களைப் போன்ற ஊழல்வாதிகளில் பெரும்பா லோர்
வெளியில் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டி ருக்கும்போது உங்களைப் இந்த
நிலையில் பார்ப்பது மிகவும் வருத்தமளிக்கிறது,
எந்தவொரு உதவியும் தேவைப்பட்டால், எங்கள்
உண்மையான பங்களிப்பை தயவுசெய்து ஏற்றுக்கொள் ளுங்கள், கூடுதல் உதவி சம்பந்
தமாக உங்கள் சகாவான அகில இந்திய காங்கிரஸ் கட்சியை தொடர்பு கொள் ளுங்கள்.
அவர்கள் உங்களுக்கு உளமார்ந்த பங்களிப்பை செய் வார்கள் என்று குறிப்
பிட்டு, அதனுடன் சேவ் செய்து கொள்ளும் ரேஷர் படத்தை யும்
பதிவிட்டிருந்தது.
தமிழக பாஜகவின் இந்த டிவிட், சமூக
ஆர்வலர்களி டையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.சமூக வலை தளங்களில்
ஏராளானோர், தமிழக பாஜககை வறுத் தெடுத்துவந்தனர். இந்த பதிவு தமிழக பாஜக
நிர்வாகிகளின் மோசமான மனநிலையை உணர்த்துவதாக விமர்சித் தனர். இதே போல்
மத்திய அமைச்சரான கிரிராஜ் சிங் நாங்கள் காஷ்மீரில் 370 ஆவது
சட்டப்பிரிவைத்தான் ரத்து செய்தோம் அங்கு சேவிங் செட் விற்பனையை தடை
செய்யவில்லையே என்று கிண்டல் செய்துள்ளார்.
No comments:
Post a Comment