Tuesday, February 4, 2020

"ரோபோ"வை இயக்கி மரக்கன்று நடவு


சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், 'ரோ போ'வை பயன்படுத்தி மரக்கன்று நடும் நிகழ்ச்சியில், பள்ளி மாணவ - மாணவியர் ஆர்வமுடன் பங்கேற் றனர். எஸ்பி ரோ போட்ஸ் மேக்கர் லேப்' மற்றும் 'கம்யூன்ட்ரீ' இணைந்து, உலக சாதனைக்காக, பள்ளி மாணவ - மாணவியர், 'ரோபோ'வை பயன்படுத்தி மரக்கன்று நடும் நிகழ்ச்சி, சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில், நேற்று முன்தினம் நடந்தது.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த, 326 மாணவ - மாணவியர், தாங்கள் எடுத்து வந்த ரோபோவை வைத்து, 15 வகைகளில், 326 மரக்கன்றுகளை நட்டனர். ரோபோவில் இணைத்த மரக்கன்றை, மொபைல் போன் ஆப் வழியாக இயக்கி, அந்தந்த குழிக்குள், குறிப்பிட்ட நேரத்தில் நட்டனர்.
இது குறித்து, 'எஸ்பி ரோபோட்ஸ் மேக்கர் லேப்' தலைமை நிர்வாக அதிகாரி ஆர்த்தி கூறியதாவது:
சுற்றுச்சூழல் மாசை குறைக்கவும், ரோபோ பயன்பாடு குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடத்துகிறோம். நாட்டில், ரோபோவை பயன்படுத்தி மரக்கன்று நடுவது இங்கு தான் முதல் முறை எனஅவர் கூறினார்.
'கம்யூன்ட்ரீ' இயக்குனர் ஹபீஸ் கான் கூறுகையில், ''சுத்தமான காற்று, சுகாதாரமான சூழல் கிடைக்க, பள்ளி, கல்லூரி வளாகங்களில் அடர்த்தியான காடு அமைத்து வருகிறோம். ரோபோ நடுவதால், 100 கிராம் எடையில் மரக்கன்றுகள் தயாரித்தோம்,'' என்றார்.
'ரோபோ'வை இயக்கிய மாணவ - மாணவியர் கூறிய தாவது:
அறிவியல் கண்காட்சி வழியாக, ரோபோ மீது ஆர்வம் ஏற்பட்டது. பள்ளி படிப்புடன், ரோபோ தொழில்நுட்பத்தையும் கற்று வருகிறோம்.
ரோபோவை பயன்படுத்தி மரக்கன்று நட்டது, புது அனுபவமாக இருந்தது.  வேறு பணிகளுக்கும் ரோபோ பயன் படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...