Wednesday, February 5, 2020

‘‘எனது கேள்விகளை கண்டு அஞ்சுவது ஏன்?''

நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் கேள்வி!
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும்  நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய் தார், இதனை அடுத்து காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிர்மலா சீதாராமனுக்கு கேள்வி ஒன்றை கேட்டுள் ளார் அதில் “நிதி அமைச்சரே, எனது கேள்விகளை கண்டு அஞ்ச வேண்டாம். இந்திய நாட்டின் இளைஞர்கள் சார்பில் தான், நான் இந்தக் கேள்விகளை கேட்கிறேன். அவர்களுக்கு பதிலளிக்க வேண்டியது உங்கள் கடமை. இந்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வேண்டும், ஆனால் அதை அளிக்க உங்கள் அரசு தவறிவிட்டது'' என்று குறிப் பிட்டிருந்தார்
டில்லியில் நடக்கவிருக் கும் தேர்தலை நினைவில் கொண்டு காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், வேலையில்லா இளங்கலை பட்டதாரிகளுக்கு மாதம் அய்ந்தாயிரம் ரூபாயும், வேலையில்லா முதுகலை பட்டதாரிகளுக்கு 7500 ரூபாயும் மாதம் தோறும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.
தெளிவாக தெரிகிறது
அதைத்தொடர்ந்து ராகுல்காந்தி கருத்துத் தெரிவித்த போது, வரலாற்றில் மிக நீளமான நிதிநிலை அறிக்கையை அறிவித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன், வேலையில்லா திண் டாட்டத்தை அனுபவித்து வரும் இளைஞர்களுக்கு எந்த ஒரு பதிலும் அளிக்க வில்லை. இதில் இருந்து  மோடி அவர்களுக்கும், நிதி அமைச்சர் அவர்களுக்கு அடுத்து என்ன செய்யவேண் டும் என்பது தெரியவில்லை என்பது தெளிவாக தெரி கிறது.
நிதிநிலை அறிக்கை வர லாற்றில் மிக நீளமான ஒன்றாக இருந்த போதும் அதில் எந்த முக்கியத்துவமும் இல்லை, நாட்டின் முக்கிய பிரச்சினையாகத் திகழும் வேலையில்லா திண்டாட் டத்தை பற்றி ஏதும் பேச வில்லை, மொத்தத்தில் தந் திர பேச்சுகளை தவிர அந்த அறிவிப்பில் வேறெதுவும் இல்லை என்பதே எனது கருத்து என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...