ஒடிசாவில் கூலி வேலை செய்து வரும் பழங்குடியினத் தை சேர்ந்தவரின் வங்கிக் கணக்கில் ரூ.1.47 கோடி பண பரிவர்த்தனை நடந்துள்ளதால் ரூ.2.59 லட்சம் வரி செலுத்தும்படி வருமான வரித்துறை தாக்கீது அனுப்பியுள்ளது.
ஒடிசா மாநிலம், புஜாரி பாராந்தி கிராமத்தை
சேர்ந்தவர் சோனாதர் கோந்த். பழங்குடியினத்தை சேர்ந்த இவர், கூலித்
தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன், அவருக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. இதற்கு முன்னும் இதுபோன்று பல முறை கடிதம் வந்துள்ளது.
அது என்ன என தெரியாததால் அதனை கோந்த்
தூக்கி எறிந்துவிட்டார். இந்நிலையில், சமீபத்தில் வந்த கடிதத்தை
கிராமத்தில் உள்ள படித்த ஒரு நபரிடம் காட்டினார். அதை படித்த அவர்
அதிர்ச்சி அடைந் தார்.
கோரபுட் மாவட்டத்தில் ஜெய் போரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து அந்த தாக்கீது அனுப்பப்பட்டு இருந்தது.
கடந்த 2013_2014ஆம் ஆண்டில் கோந்தின் வங்கி கணக்கில் ரூ.1.47 கோடிக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
அதற்காக, ரூ.2.59 லட்சத்தை வரி யாக
செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை கேட்ட கோந்த்,
அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.
அவர் இதுவரை ஒரு முறை கூட வங்கிக்கே சென்றது கிடையாது. அவருக்கு எழுத படிக்க தெரியாது.
இது தொடர்பாக கோந்த் கூறுகை யில்,
'வணிகர் ஒருவரிடம் கடந்த 7 ஆண்டுகளாக கூலி
வேலை செய்து வருகிறேன். அவரது மகன், எனது நிலப்பட்டா, வாக்காளர் அடையாள
அட்டை மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்டற்றை வாங்கிக் கொண்டார், எனது கைவிரல்
ரேகையையும் காகி தத்தில் அவர் எடுத்துக் கொண்டார்.
எனது வாழ்நாளில் ஒரு முறைகூட நான் வங்கிக்கே சென்றது கிடையாது. கிராமத்தை தவிர வேறு எங்கும் சென்றது கூட கிடையாது,' என்றார்.
வருமான வரித்துறை அதிகாரி களிடம் கேட்டபோது, ‘வங்கி பரிவர்த்தனை அடிப்படையிலேயே அவருக்கு தாக்கீது அனுப்பப்பட்டு வருகிறது,’ என்றனர்.
No comments:
Post a Comment