Thursday, January 9, 2020

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் மாநிலங்களில் குடி யரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர முடியும்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் மாநிலங்களில் குடி யரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர முடியும் என்று பாரதீய ஜனதா கட்சி நாடா ளுமன்ற உறுப்பினர் உதய் பிரதாப் சிங் மிரட்டியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க் கும் மாநில அரசாங்கங்களை அகற்றி விட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அங்கு திணிக்க முடியும் என்று கூறிய சிங், சட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகள் கடமைப் பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
சிஏஏஅய் நடைமுறைப்படுத்தாவிட்டால் அரசாங்கங் களை பதவி நீக்கம் செய்ய அரசியலமைப்பின் 356ஆவது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் தனது அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
இந்திய அரசியலமைப்பின் 356ஆவது பிரிவு எந்தவொரு மாநிலத்தின் அல்லது யூனியனின் சட்டமன்ற அதிகாரங்களையும் விலக்குவதற்கு  குடியரசுத் தலைவருக்கு அதி காரம் அளிக்கிறது. இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ள குறிப்பிட்ட மாநிலத்தில் ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதில் அவர் திருப்தி அடைந்தால், அந்த மாநில அரசு கலைக்கப்படலாம்.
பஞ்சாப், சத்தீஸ்கர், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்தச் சட்டத்தை அமல் படுத்தாது என்று கூறி அதை எதிர்த்தன. சட் டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் இருந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் அளவிற்கு கேரளா சென்றுள்ளது. இந்நிலையில் தான் பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய் பிரதாப் சிங் இவ்வாறு பேசியுள்ளார். இவ ரது இந்தக் கூற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...